ஒரு தலைப்பில் பேசுங்கள், இரு பத்திரிகைகளையும் அளியுங்கள்
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் ஆர்வமூட்டும் பல்வேறு கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் அவை எல்லாவற்றையுமே காட்டிப் பேசாமல் ஒரு தலைப்பில் பேசுவது நல்லது. நாம் அந்தக் கட்டுரைகளை நன்கு அறிந்தவர்களாக, சுற்றுமுற்றும் கூர்ந்து கவனிப்பவர்களாக இருந்தால், வீட்டுக்காரருக்கு ஏற்ற ஒரு கட்டுரையைக் காட்டலாம். உதாரணத்திற்கு, ஒரு வீட்டில் விளையாட்டுப் பொருள்கள் இருப்பதைக் கவனித்தீர்களென்றால், குடும்ப வாழ்க்கை பற்றிய கட்டுரையைக் காட்டலாம். ஓர் ஆணிடம் பேசும்போது, ஆண்களுக்கு ஆர்வமூட்டும் ஏதாவதொரு தலைப்பில், உதாரணத்திற்கு, நல்ல அரசாங்கம் என்ற தலைப்பில் பேசலாம். நீங்கள் ஒரே தலைப்பில் பேசியிருந்தாலும் வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் இரு பத்திரிகைகளையும் சேர்த்து அளியுங்கள்.