ஜூன் 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 120; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 20 பாரா. 8-15, பெட்டி பக். 161 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 8–10 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “ஒரு தலைப்பில் பேசுங்கள், இரு பத்திரிகைகளையும் அளியுங்கள்.” பேச்சு. முடிவில், பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை எப்படித் துவங்குவது என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: நம் உழைப்பு வீண்போகாது. (1 கொ. 15:58; எபி. 6:10). கலந்தாலோசிப்பு. அநேக ஆண்டுகளாக ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடும் பிரஸ்தாபிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய சபையில் எத்தனை பேர் இருந்தார்கள்? சபை பிராந்தியம் எவ்வளவு பெரியதாக இருந்தது? நற்செய்திக்கு ஜனங்கள் எப்படிச் செவிசாய்த்தார்கள்? எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தன? இத்தனை வருடங்களில் உங்கள் பிராந்தியத்தில் பிரசங்க வேலை எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது?
10 நிமி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. அளிக்கப்பட வேண்டிய சிற்றேடுகளிலுள்ள சில அம்சங்களைச் சுருக்கமாகச் சிந்தியுங்கள். சிற்றேடுகளில் இரண்டை எப்படி அளிக்கலாம் என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நடிப்பு, பக்கம் 4-ல் அல்லது மார்ச் 2013 நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்தி, நற்செய்தி! சிற்றேட்டை அளிப்பதுபோல் இருக்க வேண்டும்.
பாட்டு 129; ஜெபம்