உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • இன்று

வெள்ளி, அக்டோபர் 16

உங்கள் இதயத்தை அவளுடைய வழிகளில் போக விடாதீர்கள். அவளுடைய பாதைகளில் மயங்கித் திரியாதீர்கள்.—நீதி. 7:25.

நீதிமொழிகள் 7-வது அதிகாரத்தில் வருகிற இளைஞனை மாதிரியே யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு எல்லாமே திடீரென்று நடந்துவிட்டது என்று அவர் சொல்லலாம். ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்று அவர் யோசித்துப் பார்த்தால், அந்தப் பாவத்தைச் செய்வதற்கு முன்பு ஏற்கெனவே அவர் சில தவறான படிகளை எடுத்திருப்பார். ஒருவேளை கெட்ட நண்பர்கள் அவருக்கு இருந்திருக்கலாம், தப்பான பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கலாம், போகக் கூடாத இடங்களுக்குப் போயிருக்கலாம்; ஒருவேளை, நேரிலோ, இன்டர்நெட் வழியாகவோ அப்படி போயிருக்கலாம். அதோடு, ஜெபம் செய்வது, பைபிள் படிப்பது, கூட்டங்களுக்கு வருவது, ஊழியத்தில் கலந்துகொள்வது போன்றவற்றைக்கூட அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். இந்த இளைஞன் மாதிரியே அவர் திடீரென்று பாவம் செய்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு என்ன பாடம்? பாவம் செய்வதை மட்டுமல்ல, பாவம் செய்வதற்குக் காரணமாக இருக்கும் விஷயங்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.—மத். 5:29, 30. w24.07 16 ¶10-11

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026

சனி, அக்டோபர் 17

நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை மண்பாத்திரங்களில் பெற்றிருக்கிறோம்.—2 கொ. 4:7.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திதான் அந்த பொக்கிஷம். அது, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. (2 கொ. 4:1) அப்படியென்றால், மண்பாத்திரம் எதைக் குறிக்கிறது? நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்கிற கடவுளுடைய ஊழியர்களான நம்மைத்தான். பவுலுடைய காலத்தில் சாப்பாடு, திராட்சமது, பணம் போன்ற விலைமதிப்புள்ள பொருள்களைக் கொண்டுபோவதற்கு மண்பாத்திரங்களைத்தான் வியாபாரிகள் பயன்படுத்தினார்கள். அதேமாதிரி, இந்த விலைமதிப்புள்ள செய்தியை மற்றவர்களிடம் சொல்லும் வேலையைக் கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். அவருடைய உதவியோடு, இந்த ஊழிய வேலையை நம்மால் தொடர்ந்து செய்ய முடியும். சிலசமயங்களில், மற்றவர்கள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்களோ, நம்மை எதிர்ப்பார்களோ என்று பயம் வரலாம். இந்தப் பயத்தை எப்படிச் சமாளிக்கலாம்? ஊழியம் செய்யக் கூடாது என்று அப்போஸ்தலர்களுக்குக் கட்டளை போடப்பட்டபோது அவர்கள் என்ன சொல்லி ஜெபம் செய்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் பயப்படுவதற்குப் பதிலாக, தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உதவ சொல்லி ஜெபம் செய்தார்கள். யெகோவா அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு உடனடியாக பதில் கொடுத்தார். (அப். 4:18, 29, 31) அதேமாதிரி இன்றைக்கும் உங்களுக்குப் பயமாக இருந்தால் மனிதர்களைப் பார்க்கும்போது பயம் வரக்கூடாது, அவர்கள்மேல் அன்பு வரவேண்டும் என்று யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். w24.04 16 ¶8-9

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026

ஞாயிறு, அக்டோபர் 18

பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.—மத். 6:9.

யெகோவாமேல் அன்பு இருப்பதால், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த நாம் ஆசைப்படுகிறோம். அவரைப் பற்றி சாத்தான் சொல்லியிருப்பது எல்லாமே பொய்தான் என்பதை எடுத்து சொல்ல விரும்புகிறோம். (ஆதி. 3:1-5; யோபு 2:4; யோவா. 8:44) அதனால் ஊழியம் செய்யும்போது, யெகோவாவைப் பற்றிய உண்மைகளை சொல்கிறோம். அதாவது, யெகோவாவிடம் இருக்கும் முக்கியமான குணம் அன்புதான்... அவர் நியாயமாகவும் நீதியாகவும் ஆட்சி செய்கிறார்... அவருடைய அரசாங்கம் நம்முடைய எல்லா கஷ்டங்களுக்கும் முடிவுகட்டி, சீக்கிரத்தில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும்... என்று எல்லாருக்கும் சொல்கிறோம். (சங். 37:10, 11, 29; 1 யோ. 4:8) ஊழியத்தில் இதையெல்லாம் சொல்லும்போது நாம் யெகோவாவுடைய பெயரை பரிசுத்தப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளாக அந்தப் பெயருக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்குக் கிடைக்கிறது. w24.05 18 ¶12

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2026
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்