தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 24, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. எந்த ஆலயம் ‘நாற்பத்தாறு வருடங்களில்’ கட்டப்பட்டது? (யோவா. 2:20) [மே 6, காவற்கோபுரம் 08 4/15 பக். 30 பாரா 6]
2. கிறிஸ்துவின் சீடர்கள் எப்போது தங்களுக்குள் ஜீவனைப் பெறுவார்கள், அதாவது முழு நிறைவான ஜீவனைப் பெறுவார்கள்? (யோவா. 6:53) [மே 13, காவற்கோபுரம் 03 9/15 பக். 31 பாரா 3]
3. அபூரண மனிதர்களுக்கு இயேசு தம்முடைய தகப்பனைப் பற்றி எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள். (யோவா. 8:28) [மே 20, காவற்கோபுரம் 11 10/1 பக். 7 பாரா 3]
4. தம்முடைய நண்பர் லாசரு இறந்ததை நினைத்து இயேசு ‘கண்ணீர் விட்டார்.’ இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யோவா. 11:35) [மே 20, காவற்கோபுரம் 08 7/1 பக். 26 பாரா. 3-5]
5. இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி விடுவதன் மூலம் என்ன மிகச் சிறந்த பாடத்தை நமக்குக் கற்பித்தார்? (யோவா. 13:4, 5) [மே 27, காவற்கோபுரம் 99 3/1 பக். 31 பாரா 1]
6. நமக்குச் சரியான வழியைக் காட்ட கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவும்? (யோவா. 14:26) [மே 27, காவற்கோபுரம் 11 12/15 பக். 14-15 பாரா 9]
7. யோவான் 21:15-ல், “இவற்றைவிட” என்று குறிப்பிடப்பட்டுள்ள பதம் எதைக் குறிக்கிறது, இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? [ஜூன் 3, காவற்கோபுரம் 08 4/15 பக். 32 பாரா 11]
8. அப்போஸ்தலர் 2:44-47 மற்றும் அப்போஸ்தலர் 4:34, 35-ல் பார்க்கிறபடி, எப்படிப்பட்ட மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டும்? [ஜூன் 10, காவற்கோபுரம் 08 5/15 பக். 30 பாரா 5]
9. அப்போஸ்தலர் 7:59-ல் பார்க்கிறபடி, இயேசுவிடமா ஸ்தேவான் ஜெபம் செய்தார்? [ஜூன் 17, காவற்கோபுரம் 08 5/15 பக். 31 பாரா 3]
10. பர்னபாவின் சிறந்த முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம், அப்படிச் செய்யும்போது என்ன நன்மைகளைப் பெறுவோம்? (அப். 9:26, 27) [ஜூன் 24, ‘சாட்சி கொடுங்கள்’ பக். 65 பாரா 19]