உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 8/15 பக். 31
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • இதே தகவல்
  • தன் முத்திரையை பதித்துச்சென்ற அச்சாளர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • சத்தியத்தை ஏன் தேடவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கிறிஸ்தவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குகிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • மத சத்தியம் அடையத்தக்கதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 8/15 பக். 31

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளியான காவற்கோபுரம் இதழ்களைப் படித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால், பின்வருவனவற்றை மறுபடியும் நினைவுபடுத்திப் பார்ப்பதை ஆர்வமூட்டுவதாய் காண்பீர்கள்:

▫மத சத்தியம் அடையத்தக்கதா? “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) சத்தியம் அடையத்தக்கது என்பதை மட்டுமன்றி, அதைக் கண்டுபிடிப்பது கடவுளை நாம் வணங்குவதற்குத் தேவையானது என்பதையும் இயேசு சுட்டிக்காட்டினார். “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்[ளுவார்கள்]” என்று அவர் ஒரு சமாரியப் பெண்ணிடம் கூறினார். (யோவான் 4:23)—4/15, பக்கம் 5.

▫ராபெர் ஏட்டியென் என்பவர் யார், அவர் எவ்விதத்தில் தன் பதிவை விட்டுச்சென்றார்? ராபெர் ஏட்டியென் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அச்சாளர். பரிசுத்த வேதாகமத்தைப் பிரசுரிக்க தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்து, மூலப்பிரதிகளில் எழுதியிருக்கிறபடி பைபிளிலுள்ள வார்த்தைகளை வெளிப்படுத்த கடினமாய் பிரயத்தனம் செய்தார். பைபிள் வாசகத்தை எண்ணிடப்பட்ட வசனங்களாகப் பிரிக்கும் அவருடைய முறை இன்று எங்கும் உபயோகிக்கப்படுகிறது.—4/15, பக்கங்கள் 10, 14.

▫பைபிளை தினந்தோறும் வாசிப்பதிலிருந்து நாம் எவ்விதம் பயனடைகிறோம்? வேதவார்த்தைகள் நமக்கு எப்போதும் புது அர்த்தத்தைக் கொடுக்கின்றன, நாம் பார்த்தும், கேட்டும், தனிப்பட்டவிதமாய் அனுபவித்தும் இருப்பவற்றின் வெளிச்சத்தில் நமக்கு கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மேலுமதிகமாய் பதியத்தக்கவையாக ஆகின்றன. வாழ்க்கையில் நம் அனுபவம் விரிவாகி, பிரச்சினைகளை நாம் சமாளிக்கையில், பைபிள் அறிவுரைகளை நாம் மேலுமதிகமாக மதித்துணருகிறோம். (நீதிமொழிகள் 4:18)—5/1, பக்கம் 14.

▫பைபிள் வசனங்களை ஞாபகத்தில் வைத்திருப்பது எப்படி? பைபிளை வாசிக்கையில், நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அல்லது அட்டைகளில் எழுதி நீங்கள் தினந்தோறும் பார்க்கக்கூடிய இடத்தில் அவற்றை வையுங்கள். அவற்றை மனப்பாடம் செய்கையில் அவற்றின் பேரில் தியானியுங்கள்; அவற்றை உபயோகியுங்கள். ஒரே சமயத்தில் அநேக வசனங்களை மனப்பாடம் செய்ய முயற்சிக்காதீர்கள், ஒரு வாரத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ போதுமானது.—5/1, பக்கங்கள் 16, 17.

▫சுவிசேஷங்களை எழுதிய பிற எழுத்தாளர்கள் அளித்ததைவிட என்ன கூடுதலான தகவல் லூக்காவின் சுவிசேஷத்தில் அடங்கியிருக்கிறது? லூக்கா பதிவு செய்தவற்றில் பெரும்பாலானவை மத்தேயுவின் பதிவோடு ஒத்திருந்தாலும், 59 சதவீதம் கூடுதலான விஷயமாகவே இருக்கிறது. மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களால் குறிப்பிடப்படாத, இயேசுவின் ஆறு அற்புதங்களையும் இரண்டு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில் அவருடைய உவமைகளையும் லூக்கா பதிவுசெய்தார்.—5/15, பக்கம் 12.

▫சத்தியத்தின் எந்தக் குறிப்பிடத்தக்க ஒளிப் பிரகாசங்கள் 1935-ல் வெளிப்படுத்தப்பட்டன? வெளிப்படுத்துதல் 7:9, 14-ல் குறிப்பிடப்பட்டுள்ள திரள் கூட்டம், இரண்டாந்தர பரலோகத் தொகுதியை அல்ல, பூமிக்குரிய நம்பிக்கையுடையோரையே குறிக்கிறது என்பதை யெகோவாவின் மக்கள் அந்த ஆண்டில் புரிந்து கொண்டனர். (யோவான் 10:16)—5/15, பக்கம் 20.

▫துக்கிப்போருக்கு என்ன நடைமுறையான வழிகளில் நாம் ஆறுதல் அளிக்கலாம்? செவிகொடுத்துக் கேளுங்கள். உறுதிப்பாட்டை அளியுங்கள். உங்களை எச்சமயத்திலும் அணுகக்கூடிய நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். பொருத்தமான சமயத்தில் உதவ முன்வாருங்கள். ஆறுதலான வார்த்தைகளையுடைய ஒரு கடிதம் அல்லது ஒரு கார்டு அனுப்புங்கள். அவர்களோடு சேர்ந்து ஜெபியுங்கள். (யாக்கோபு 5:16) அவர்களுக்குத் தொடர்ந்து உதவுங்கள்.—6/1, பக்கங்கள் 13, 14.

▫மத நம்பிக்கையில் பிளவுபட்ட குடும்பங்களில் வாழ்பவர்கள் சகித்திருக்கும்படி உதவ ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் என்ன செய்யலாம்? ஒழுங்காக அவர்களிடம் உற்சாகமூட்டும், நல்நம்பிக்கையூட்டும், ஆறுதலான வார்த்தைகளைப் பேசுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14) இது அவர்களுடைய மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டுவதுபோல் இருக்கிறது. நடைமுறையில் சாத்தியமாகவும் பொருத்தமாகவும் இருக்கையில், அவர்களை உங்களுடைய தேவராஜ்ய மற்றும் சமூக நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜெபங்களில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். (ரோமர் 1:9; எபேசியர் 1:16)—6/1, பக்கம் 29.

▫வெளி ஊழியத்தில் ஈடுபடும்போது பொறுமையைக் காத்துக்கொள்வதால் வரும் பலன்கள் யாவை? எதிர்ப்படக்கூடிய எந்தவிதமான அசட்டை மனப்பான்மையையும் எதிர்ப்பையும் நன்கு சகித்துக்கொள்ள பொறுமை ராஜ்யப் பிரஸ்தாபிக்கு உதவுகிறது. கோபப்படும் வீட்டுக்காரர்களிடம் தர்க்கம் செய்வதற்குப் பதிலாக, பொறுமையுள்ள ஊழியர்களால் ஒரு சாந்தமான பதிலைக் கொடுத்துவிட்டு, அமைதலாகப் போய்விட முடியும்; இவ்வாறு அவர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் காத்துக்கொள்வார்கள். (மத்தேயு 10:12, 13) மேலும், செம்மறியாட்டைப் போன்றவர்கள் ராஜ்ய செய்தியினிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள்.—6/15, பக்கம் 9.

▫பைபிள் சத்தியங்களை அறிந்திருப்பது ஏன் அவ்வளவு மதிப்புவாய்ந்தது? சத்தியத்தை அறிவது நம்மை பொய்கள், ஏமாற்றங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. நாம் அதற்கிசைய வாழும்போது, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளும்படியாக சத்தியம் நம்மைப் பலப்படுத்தி, எந்தவிதமான சோதனையிலும் உறுதியாக நிற்பதற்கு நமக்கு அவ்வளவு நம்பிக்கையூட்டுகிறது.—7/1, பக்கம் 8.

▫எந்தப் பிரதான உத்தரவாதத்தை மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரிடமிருந்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபை ஏற்றுக்கொண்டது? தேசங்களுக்கு யெகோவாவின் மகத்துவத்தைக் குறித்து சாட்சிகொடுக்கும் சிலாக்கியத்தை ஏற்றுக்கொண்டது. (ஏசாயா 43:21; 1 பேதுரு 2:9)—7/1, பக்கம் 19.

▫கணவன் தன் மனைவியை ‘கனம் பண்ண வேண்டும்’ என்ற அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளில் உட்பட்டிருப்பது என்ன? (1 பேதுரு 3:7) தன் மனைவியை கனம்பண்ணுகிற கணவன் அவளைத் தாழ்வுபடுத்துகிறதில்லை அல்லது இழிவுபடுத்துகிறதில்லை. மாறாக, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுமக்கள் பார்வையிலும் தன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் அவர் அவளை உயர்வாகக் கருதுவதை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். (நீதிமொழிகள் 31:10-31)—7/15, பக்கம் 19.

▫பாவம்செய்து மனந்திரும்பாமலிருப்பவரை சபையிலிருந்து நீக்குவது அன்பானது என்று ஏன் சொல்லப்படலாம்? சபைநீக்கம் செய்தல் யெகோவாவுக்கும் அவருடைய வழிகளுக்கும் அன்பை வெளிப்படுத்திக்காட்டுவதாய் இருக்கிறது. (சங்கீதம் 97:10) இச்செயல் நீதியான போக்கைப் பின்பற்றுபவர்களின் பேரிலுள்ள அன்பைக் காண்பிக்கிறது. ஏனென்றால் அவர்கள் மீது கெட்ட செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபரை அவர்கள் மத்தியிலிருந்து அது நீக்குகிறது; இது சபையின் தூய்மையையும்கூட பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 5:1-13)—7/15, பக்கம் 25.

▫மத்தேயு 24:45-47-ல் (NW) இயேசுவினால் குறிப்பிடப்பட்ட ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ இன்று அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? பைபிளை அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்களை உருவாக்கித் தருவதிலும், ‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ போதிப்பதிலும் பிரசங்கிப்பதிலும் அவர்கள் செய்யும் வேலையின் மூலமும், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுடன் அவர்கள் நெருக்கமாய் இணைந்திருப்பதன் மூலமுமே அவர்கள் விசேஷமாய் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20)—8/1, பக்கம் 16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்