உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 7/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • அரிவாள் செல் சோகை—அறிவே மிகச்சிறந்த தற்காப்பு
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 7/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

பொறுப்பாளி “நம் செயல்களுக்கு நாம் பொறுப்பாளியா?” (செப்டம்பர் 22,1996) என்ற மிகச்சிறந்த தொடர் கட்டுரைகளுக்காக நன்றி. வழக்குரைஞர்கள், இன்சூரன்ஸ் ஏஜென்டுகள், வர்த்தக மேலதிகாரிகள், பிரசுரிப்பாளர்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், மற்றும் என்னுடைய நகரத்திலுள்ள வியாபார பகுதிகளில் நான் பேசுபவர்களிடமெல்லாம் அனுபவிக்கத்தக்க கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருப்பதற்கு இந்தக் கட்டுரைகள் எனக்கு குறிப்பிடத்தக்க விதமாக பிரயோஜனமாயிருந்ததைக் கண்டேன். வாகனம் நிறுத்துமிடத்தின் விதிகளை மீறுவோர் அபராதம் கட்டும் அலுவலகத்திலுள்ள பெண்அதிகாரி ஒருவரிடம், “அது என் குற்றமில்லை” என்ற கட்டுரையை காண்பித்தேன். அவர் அந்தப் பத்திரிகையை என் கையிலிருந்து வெடுக்கென பறித்துக் கொண்டு, “இப்போதெல்லாம் கொஞ்ச ஆட்கள்தான் தாங்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். அந்த அலுவலகத்திலுள்ள அனைவரும் அதைப் படிக்க வேண்டுமென்று தான் விரும்புவதாக அவள் சொன்னாள்.

பி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

இன்பமான பொழுதுகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் இன்பமாய் பொழுதைக் கழிப்பது எப்படி?” (செப்டம்பர் 22, 1996) என்ற கட்டுரைக்கு நன்றி. எனக்கு 15 வயது. எங்களுடைய சபையில் அநேக இளைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எப்பொழுதுமே ஒன்றாகச் சேர்ந்து காரியங்களைச் செய்வோம். உதாரணமாக, காலையில் நாங்கள் பிரசங்க வேலைக்கு செல்வோம், பின்பு மதியத்தில் நீச்சலடிப்பதற்காகச் செல்வோம். அது அதிக ஜாலியாக இருக்கும்! சில சமயங்களில் எங்களுடைய சபையில் உள்ள மற்றவர்களும் எங்களோடு சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் நல்ல விதமான கூட்டுறவை அனுபவிக்கிறோம் என்பதை அறிவது எங்களுடைய பெற்றோருக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது.

ஐ. டபிள்யூ., ஜெர்மனி

அரிவாள் செல் சோகை “அரிவாள் செல் சோகை—அறிவே மிகச்சிறந்த தற்காப்பு” (அக்டோபர் 8, 1996) என்ற கட்டுரையை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அது என்னுடைய சூழ்நிலையை விவரிக்கிறது! நான் இந்த வியாதியோடு கடந்த 18 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதைப் படிக்கும் போது என்னுடைய கண்களில் நீர் பெருகியது. இந்த வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்கள் என்பதை அறிந்தது என்னை மகிழ்ச்சியடையச் செய்தது.

ஆர். எஸ்., இத்தாலி

எனக்கு அரிவாள் செல் சோகை வியாதி உள்ளது. இத்தனை அநேகருக்கும்கூட இது உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஏன் வலி ஏற்படுகிறது என்பதையும் திரவ ஆகாரத்தை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. என்னுடைய அம்மா, என்னுடைய வியாதியை என் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்தக் கட்டுரையின் சில பிரதிகளை அவர்களுக்கு கொடுத்தார்.

ஏ. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

அரிவாள் செல் சோகையால் நான் என்னுடைய தம்பியை இழந்து விட்டேன். நைஜீரியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 ஆட்கள் இதனால் மரிக்கிறார்கள். எனவே இந்தக் கட்டுரை ஒரு உண்மையான பிரச்சினையைக் கலந்தாலோசித்திருக்கிறது. ஒவ்வொரு நைஜீரிய குடும்பமும் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். அது தகவல் நிறைந்ததாயும் ஒரு புதிய நோக்குநிலையிலிருந்து அளிக்கப்பட்டதாயும் இருந்தது.

எஃப். ஏ., நைஜீரியா

அரிவாள் செல் சோகை என்ற கட்டுரையைக் குறித்து நான் எவ்வாறு உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இது சம்பந்தப்பட்ட தகவல் கிடைக்காமல் நான் கடந்த 26 ஆண்டுகளாக இந்த வியாதியுடன் போராடி வருகிறேன். இதற்காக ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

டி. சி., ஜாம்பியா

பிணைக்கும் அன்பு அன்புள்ள சகோதரர்களே, “பைபிளின் கருத்து: பிணைக்கும் அந்த அன்பு” (அக்டோபர் 8, 1996) என்ற கட்டுரையை பிரசுரித்ததற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பெற்றோரின் திடீர் மரணம் உட்பட, என்னுடைய விசுவாசத்தின் அநேக பரிட்சைகளை ஆண்டுகளினூடாக நான் எதிர்ப்பட வேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும்விட, மிகக் கடினமான பரிட்சையானது சபைக்குள்ளிருக்கும் ஒருவரிடமிருந்து வந்திருக்கிறது. யெகோவா என்னுடைய கண்ணீரையும் நான் என்னுடைய இருதயத்தில் உணர்ந்திருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறிந்தும் புரிந்துமிருக்கிறார் என்பதைக் கண்டு கொண்டேன்; இவ்விதம் இந்தக் கட்டுரை எனக்கு அதிக பலத்தையும் ஆறுதலையும் தந்திருக்கிறது. அப்போஸ்தலன் பவுலும்கூட இதுபோன்ற வேதனைகளை அனுபவித்திருக்கிறார் என்று கற்றுக் கொண்டேன். காலப்போக்கில் யெகோவா என்னுடைய காயங்களை குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன்.

எஸ். பி., கனடா

இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையில், ஆவிக்குரிய காரியங்களின் பேரிலான ஒருமுகப்படுத்துதலை ஒருவர் எளிதில் இழந்து விடமுடியும். இந்தக் கட்டுரை எனக்கு அதிக உற்சாகமூட்டுவதாயும் ஊக்கமூட்டுவதாயும் இருந்தது. சமீப காலமாக, நான் வாழ்க்கையின் அன்றாட கவலைகளால் அதிகமாக அழுத்தப்படுகிறேன். இந்தக் கட்டுரை நம்முடைய அபூரண உணர்வுகளுக்கு பதிலாக, இயேசுவின் அன்பில் சார்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தை மதித்துணர எனக்கு உதவியது.

ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள்

இரசாயன சமநிலையின்மையின் காரணமாக ஏற்பட்ட மனச்சோர்வினால் நான் துன்பப்படுகிறேன். என்னுடைய மனச்சோர்வுற்ற நிலையைக் கையாள மற்றொரு படியை எடுப்பதற்கு இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

பி. யூ., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்