இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரோடு நெருங்கிப் போகவும் நேரம் ஒதுக்கும்போது, உங்கள் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும். அப்படி செய்தால், ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியை தீர்த்துக்கொள்ள நீங்கள் முயற்சி எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். இயேசு இதைப் பற்றி என்ன சொன்னார் என்று இப்போது பார்க்கலாம்.
இயேசு என்ன சொன்னார்
“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.
நாம் எதற்காக வாழ்கிறோம்? ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது? போன்ற கேள்விகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
“உணவால் மட்டுமல்ல, யெகோவாவின்a வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்.”—மத்தேயு 4:4.
வாழ்வதற்கு சாப்பாடு முக்கியம். அதைவிட கடவுளோடு இருக்கும் நட்பு முக்கியம். அந்த நட்பை வளர்க்க, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதற்கு தவறாமல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.
“உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.”—யோவான் 17:17.
கடவுள் அவருடைய வார்த்தையான பைபிள் மூலமாகத்தான், நம் ஆன்மீகப் பசியைத் தீர்க்கிறார் என்று இயேசு சொன்னார்.
கடவுளுக்காக நேரத்தை ஒதுக்கி உங்கள் மனதில் ஓடும் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி உங்கள் ஆன்மீகப் பசியை தீர்த்துக்கொண்டால், எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்! அதை செய்ய, இவை உங்களுக்கு உதவும்:
இலவசமாக பைபிளைப் படியுங்கள்.
ஒருவரின் உதவியோடு பைபிளைக் கற்றுக்கொள்ளுங்கள், அதுவும் இலவசமாக!
a யெகோவா என்பது கடவுளுடைய சொந்த பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் படியுங்கள்.