உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 134
  • வன்முறை தீர்வு ஆகாது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வன்முறை தீர்வு ஆகாது!
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு என்ன சொன்னார்
  • இயேசு என்ன செய்தார், என்ன செய்வார்
  • சமாதானமான உலகம் நிச்சயம் வரும்!
    வேறுசில தலைப்புகள்
  • எப்போதும் நல்லதையே செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • வன்முறையை கடவுள் எப்படி கருதுகிறார்?
    விழித்தெழு!—2002
  • இதுவரை கொடுத்திராத மிகப் பிரபலமான பிரசங்கம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 134
ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாருக்கும் இயேசு சொல்லிக்கொடுக்கிறார்.

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

வன்முறை தீர்வு ஆகாது!

சண்டைகள் வெடிக்கும்போதும் பிரச்சினைகள் வரும்போதும் வன்முறைதான் ஒரே தீர்வு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு சொல்லிக்கொடுத்த விஷயத்துக்கும் அவர் வாழ்ந்த விதத்துக்கும் இந்தக் கருத்து நேர் எதிராக இருக்கிறது. இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதற்கு ஒருசில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

இயேசு என்ன சொன்னார்

கோபப்படுவது, சண்டைக்குப் போவது, வன்முறையில் இறங்குவது எல்லாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வு கிடையாது என்று தன்னுடைய புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு சொல்லிக்கொடுத்தார். சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

  • “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” (மத்தேயு 7:12; லூக்கா 6:31) இயேசு கொடுத்த இந்த அறிவுரை, பெரும்பாலும் “பொன் விதி”a என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போமோ அதேமாதிரிதான் நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதை யோசித்துப் பாருங்கள்: மற்றவர்கள் நம்மைத் தாக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போமா? அப்படியென்றால், நாமும் மற்றவர்களை மரியாதையோடும் கனிவோடும்தானே நடத்த வேண்டும்?! அவர்களுக்கும் நமக்கும் ஒத்துப்போகவில்லை என்றாலும்கூட அப்படித்தான் நடத்த வேண்டும்.

  • “யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38, 39; லூக்கா 6:29) மற்றவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நாம் இடம்கொடுக்க வேண்டும் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. மற்றவர்கள் நம்மைக் கோபப்படுத்தினாலும் திருப்பித் தாக்குவதற்குப் பதிலாக அவர்களிடம் சாந்தமாக நடந்துகொள்ள வேண்டும்b என்றுதான் இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களிடம் சொன்னார். அன்று இருந்த மதத் தலைவர்கள் சிலர், மற்றவர்களைத் திருப்பித் தாக்குவதில் தவறில்லை என்று சொல்லிக்கொடுத்ததாகத் தெரிகிறது. அவர்களுடைய தவறான கருத்தைத் திருத்துவதற்காகத்தான் இயேசு இதைச் சொன்னார்.

  • “எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (மத்தேயு 5:43, 44; லூக்கா 6:27) மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும் சரி, நம்மை அநியாயமாக நடத்தினாலும் சரி, நாம் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். அதற்காக அவர்கள் செய்கிற தவறை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.c நம்மை வெறுக்கிறவர்களிடம் நாம் அன்பாக நடந்துகொள்ளும்போது, அவர்களுடைய கோபத்தைத் தணிக்க முடியும், நம்மிடம் அவர்கள் அன்பாக நடந்துகொள்ளவும் நாம் அவர்களைத் தூண்ட முடியும்.

இயேசு என்ன செய்தார், என்ன செய்வார்

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வன்முறை தீர்வு கிடையாது என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்த மாதிரியே வாழ்ந்து காட்டினார். அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில், அவருடைய சீஷர் ஒருவர் அவரைப் பிடிக்க வந்தவர்களைத் தாக்கினார். அப்போது இயேசு அந்தச் சீஷரிடம், “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று சொன்னார். (மத்தேயு 26:52) தன்னை மோசமாக நடத்தியவர்களை மன்னிப்பதன் மூலம் இயேசு தன் எதிரிகளிடம் அன்பு காட்டினார். சொல்லப்போனால், அவர்களுக்காக ஜெபமும் செய்தார்!—லூக்கா 23:33, 34; 1 பேதுரு 2:23.

சமாதானத்தின் அதிபதியாக இருக்கும் இயேசு, சீக்கிரத்தில் எல்லா விதமான வன்முறைக்கும் முடிவைக் கொண்டுவருவார் என்று பைபிள் நம்பிக்கை கொடுக்கிறது. (ஏசாயா 9:6, 7) அந்த அருமையான எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, “போர் வேரோடு அழிக்கப்படும்—எப்படி?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

a இன்னும் தெரிந்துகொள்ள, “பொன் விதி என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b இன்னும் தெரிந்துகொள்ள, “‘கண்ணுக்குக் கண்’ என்பதன் அர்த்தம் என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c இன்னும் தெரிந்துகொள்ள, “‘எதிரிகளிடம் அன்பு காட்டுங்கள்’ என்பதற்கு என்ன அர்த்தம்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்