உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 117
  • அரசியல் வன்முறை—பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அரசியல் வன்முறை—பைபிள் என்ன சொல்கிறது?
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அரசியல் பிரிவினைகள்—முன்பே சொல்லப்பட்டது
  • அரசியல் வன்முறைக்கு முடிவு
  • பூமியில் சமாதானம்—எப்படி வரும்?
    பைபிள் தரும் பதில்கள்
  • வன்முறை
    விழித்தெழு!—2015
  • வன்முறைக்கு நிரந்தர முடிவு—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • வன்முறையை கடவுள் எப்படி கருதுகிறார்?
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 117
துப்பாக்கியின் குறிவட்டத்தில் சிக்கிய ஒரு நபர்.

cako74/DigitalVision Vectors via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

அரசியல் வன்முறை—பைபிள் என்ன சொல்கிறது?

அரசாங்க அதிகாரிகளை எதிர்த்து வன்முறையில் இறங்குவது இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.

அரசியல் வன்முறை ஏன் இந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது? இதற்கு ஒரு முடிவு வருமா? பைபிள் என்ன சொல்கிறது?

அரசியல் பிரிவினைகள்—முன்பே சொல்லப்பட்டது

நம்முடைய காலத்தில், அதாவது “கடைசி நாட்களில்,” மக்களுடைய மனப்பான்மையால் அவர்கள் எதற்குமே ஒத்துப்போக மாட்டார்கள், அதனால் வன்முறைகள் வெடிக்கும் என்று பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது.

  • “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும். . . . ஏனென்றால், மனிதர்கள் . . . நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, . . . எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, . . . கொடூரமானவர்களாக, . . . நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-4.

இந்தக் காலத்தில், அரசியல் கலவரங்களும் புரட்சிகளும் சர்வசாதாரணமாக நடக்கும் என்றுகூட பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. (லூக்கா 21:9) அதேசமயத்தில், இதுபோன்ற அரசியல் வன்முறைகளும் பிரிவினைகளும் என்றென்றைக்குமே இருக்கப்போவதில்லை.

அரசியல் வன்முறைக்கு முடிவு

பரலோகத்தில் இருக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம், மனித அரசாங்கங்களை எல்லாம் கடவுள் நீக்கிவிடுவார் என்று பைபிள் சொல்கிறது.

  • “பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். . . . அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44.

கடவுளுடைய அரசாங்கம் மனிதர்கள் எல்லாரையும் ஒற்றுமையாக வாழ வைக்கும், உலகம் முழுவதும் சமாதானத்தைக் கொண்டுவரும்.

  • அதன் ராஜா இயேசு கிறிஸ்து, “சமாதானத்தின் அதிபதி” என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஆட்சியில் ‘சமாதானத்துக்கு முடிவே இருக்காது.’—ஏசாயா 9:6, 7.

  • இன்றைக்கே, அதன் குடிமக்கள் சமாதானமாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—ஏசாயா 2:3, 4.

இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?” என்ற கட்டுரையையும் கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவையும் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்