Thai Liang Lim/E+ via Getty Images
விழிப்புடன் இருங்கள்!
சோஷியல் மீடியாவும் இளம் பிள்ளைகளும்—உலகத்தின் கவலை
2025-ல், உலகம் முழுவதும் இருக்கும் அரசாங்கங்கள் சோஷியல் மீடியாவால் இளம் பிள்ளைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலை தெரிவித்தார்கள். 16 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நாட்டில் சட்டம் போட்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளும், இதே மாதிரி சில நடவடிக்கைகளை எடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றன
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சில டீனேஜர்களுக்கு கூட சோஷியல் மீடியாவால் அவர்களுக்கு ஆபத்து வரும் என்று தெரிந்திருக்கிறது. ஏப்ரல் 2025-ல் அமெரிக்காவில் இருக்கிற பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின் அறிக்கை இப்படி சொன்னது: “கிட்டத்தட்ட பாதி டீனேஜர்கள் (48%), டீனேஜில் இருப்பவர்களுக்கு [சோஷியல் மீடியாவால்] பெரும்பாலும் மோசமான பாதிப்புகள் வருகிறது என்று சொன்னார்கள்.”
சோஷியல் மீடியாவால், இளம் பிள்ளைகளுடைய மனநலம் பாதிக்கப்படுகிறது என்று ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். “இளம் பிள்ளைகள் மத்தியில் மன அழுத்தம் ஒரு மோசமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு சோஷியல் மீடியா ஒரு முக்கியமான காரணம்” என்று அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சையாளராக இருந்த டாக்டர் விவேக் மூர்த்தி, 2024-ல் சொன்னார்.
சோஷியல் மீடியாவால் வரும் ஆபத்துகளிலிருந்து அப்பா-அம்மா பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ சில டிப்ஸ்:
பெற்றோர் என்ன செய்யலாம்?
இந்த பைபிள் ஆலோசனைகளை யோசித்துப் பாருங்கள்.
“சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
இவ்வளவு ஆபத்துகள் இருப்பதால், அவசரப்பட்டு உங்கள் பிள்ளைகள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த அனுமதித்துவிடாதீர்கள். சோஷியல் மீடியாவை பயன்படுத்த பிள்ளைகளை அனுமதிப்பதற்கு முன், பின்வருபவற்றை செய்ய உங்கள் பிள்ளை பக்குவப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்: உங்கள் மகன் அல்லது மகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் சோஷியல் மீடியாவை பயன்படுத்துவான்(ள்), நல்ல நண்பர்களோடு மட்டும்தான் பழகுவான்(ள்), தவறான விஷயங்களை அதில் பார்க்க மாட்டான்(ள்).
கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?” என்ற கட்டுரையையும் “சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
“உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:16.
உங்கள் பிள்ளை சோஷியல் மீடியாவைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்றால், சில சட்டங்களை போடுங்கள். அது எப்படி அவர்களை பாதுகாக்கும் என்பதையும் புரிய வையுங்கள். அதேசமயம் பிள்ளைகள்மேல் உங்கள் கவனம் இருக்கட்டும்! அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், சோஷியல் மீடியாவை அளவாகப் பயன்படுத்த நீங்கள் அவர்களுக்கு வரம்புகள் வைக்க வேண்டும் என்று அர்த்தம்.
வரம்புகளை வைப்பது பிள்ளைகளுடைய நல்லதுக்குதான் என்பதை புரிய வைக்க, சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள்.
அப்பா-அம்மா என்ன செய்யலாம் என்பதற்கு கூடுதலான பைபிள் ஆலோசனைகளை தெரிந்துகொள்ள, “இளைஞர்கள்மீது சோஷியல் மீடியா ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி அரசாங்க உயர் அதிகாரி எச்சரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
“சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) அதேசமயத்தில், அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு தேவையான நிறைய நல்ல நல்ல ஆலோசனைகளையும் கொடுக்கிறது. அது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே உதவும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உதவுகிற 20-க்கும் அதிகமான கட்டுரைகளும் வீடியோக்களும், “சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்” என்ற கட்டுரையில் இருக்கின்றன.