கேள்விப் பெட்டி
◼ ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டாம் என்று எப்போது முடிவு செய்யலாம்?
உங்களோடு பைபிள் படிப்பவர் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால் படிப்பை நிறுத்திவிடலாம். ஆனால், அதை ரொம்ப கவனமாக யோசித்து செய்யுங்கள். (மத். 10:11) அப்படி செய்வதற்கு முன் இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: சாக்குப்போக்கு சொல்லாமல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படிக்கிறாரா? படிப்புக்காக முன்பே தயாரிக்கிறாரா? கூட்டத்துக்கு வர முயற்சி செய்கிறாரா? பைபிளில் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்கிறாரா? பைபிள் சொல்கிறபடி வாழ முயற்சி செய்கிறாரா? ஒவ்வொருவருடைய திறமையும், வயதும் வித்தியாசப்படுவதால், சிலருக்கு மாற்றங்கள் செய்ய நேரம் எடுக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். படிப்பை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தாலும், அவர் எப்போது படிக்க விரும்பினாலும் நீங்கள் வர தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள்.—1 தீ. 2:4.