ஜூன் 8-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 8-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 49; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 52 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 19-21 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 19:24-37 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும்?—அறிமுகம் பக். 22 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: காய்பா—தலைப்பு: யெகோவாவின் ஊழியர்களை எதிர்ப்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது—மத் 26:65; 27:20, 21; யோவா 11:49-53; 18:12-14; 19:6, 11, 15, 21 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.’—உபா. 32:7.
10 நிமி: “பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.” இந்த மாதத்திற்கான வசனத்தின் அடிப்படையில் பேச்சு. உபாகமம் 4:9; 32:7 மற்றும் சங்கீதம் 71:15-18-ஐ படித்து விளக்குங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த சகோதர சகோதரிகளைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் காவற்கோபுர படிப்பு இதழில் “நம் வரலாற்றுச் சுவடுகள்” என்ற தலைப்பில் வெளிவருகின்றன; அதை படிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று விளக்குங்கள். அதைப் பற்றி குடும்ப வழிபாட்டில் கலந்து பேசும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள். நம் ராஜ்ய ஊழியத்தில் இந்த மாதத்திற்கான வசனத்தின் அடிப்படையில் இருக்கும் ஊழியக் கூட்டப் பகுதிகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... நற்செய்தி சிறுபுத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு ஆரம்பியுங்கள்.” கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணி நடத்துவார். சபையின் ஊழிய அறிக்கையிலிருந்து மறுசந்திப்புகள், பத்திரிகைகள், புத்தகங்களை எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். பைபிள் படிப்பு ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லுங்கள். நற்செய்தி சிறுபுத்தகத்தை வைத்து பைபிள் படிப்பு ஆரம்பிப்பதுபோல் நடித்துக்காட்டுங்கள். எப்படிச் செய்யலாம் என்று கடைசி பக்கத்தில் இருக்கிறது. ஒரு அனுபவமுள்ள சகோதரர் அல்லது சகோதரி இதைச் செய்ய வேண்டும். பைபிள் படிப்பை ஆரம்பிக்க சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 29; ஜெபம்