அறிவிப்புகள்
◼ ஊழியத்தில் என்ன கொடுக்கலாம்?—மே, ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? அல்லது கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதி. ஜூலை, ஆகஸ்ட்: கடவுளிடமிருந்து வரும் நற்செய்தி! அல்லது 32 பக்க சிறு புத்தகங்களில் ஒன்று.
◼ சபையைத் தொடர்புகொள்ள கிளை அலுவலகத்திடம் சரியான முகவரியும் ஃபோன் நம்பரும் இருக்கிறதா என்று ஊழியக் குழு உறுதி செய்துகொள்ள வேண்டும். மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அல்லது சபை செயலருடைய முகவரியில் மாற்றம் இருந்தால் S-29 படிவத்தை பூர்த்தி செய்து உடனே கிளை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். சபைக்கு பிரசுரங்களை அனுப்ப வேண்டிய முகவரியில் மாற்றம் இருந்தால் ஷிப்பிங் இன்ஃபர்மேஷன் ஃபார்ம் (S-36) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கிளை அலுவலகம் இந்த இரண்டு முகவரியையும் தனித்தனியாக பதிவு செய்து வைத்திருக்கிறது. இவற்றில் மாற்றம் இருந்தால் உடனே அதை கிளை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.