செப்டம்பர் 1-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 15; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 1, 2 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 17-21 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 17:1-13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பிசாசு உண்மையிலேயே இருக்கிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்?—நியாயங்காட்டி பக். 361 பாரா 3-பக். 362 பாரா 3 (5 நிமி.)
எண் 3: பெரிய ஜலப்பிரளயம்—பைபிள் கதைகள் கதை 10 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: செப்டம்பர் மாதத்தில் பத்திரிகைகளை அளியுங்கள். கலந்தாலோசிப்பு. இந்தப் பக்கத்தில் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜூலை-செப்டம்பர் விழித்தெழு!-ஐ எப்படி அளிப்பதென நடித்துக் காட்டுங்கள். பிறகு அந்த அணுகுமுறையை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: எப்படிச் செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தைரியமாகப் பேசுங்கள்” கட்டுரையின்படி செய்து சபையார் எப்படிப் பலனடைந்தார்கள் என்று கேளுங்கள். நல்ல அனுபவங்களைச் சொல்லச் சொல்லுங்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசியபோது எதிர்ப்பட்ட சவால்களையும், அதை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்றும் கேளுங்கள்.
10 நிமி: விசேஷ விநியோகிப்பைப் பற்றிய அறிக்கை. ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. கடவுளுடைய அரசாங்கத்தைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டியது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி இதே நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள முக்கிய குறிப்புகளை சுருக்கமாகச் சொல்லுங்கள். இந்த விசேஷ விநியோகிப்பைச் சபையார் எப்படிச் செய்தார்கள்? இந்த விநியோகிப்பின் சிறப்பம்சங்கள் சில யாவை?
பாட்டு 45; ஜெபம்