தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 25, 2014-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
லேவியராகமம் 18:3-லிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? [ஜூலை 7, காவற்கோபுரம் 10 6/15 பக். 8 பாரா 15]
லேவியராகமம் 19:2-ல் கொடுக்கப்பட்ட கட்டளையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? [ஜூலை 7, காவற்கோபுரம் 10 7/15 பக். 19 பாரா 16]
கதிர் பொறுக்குவது பற்றிய கடவுளுடைய சட்டத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (லேவி. 19:9, 10) [ஜூலை 7, காவற்கோபுரம் 06 6/15 பக். 22-23 பாரா 13]
“கண்ணுக்குக் கண்” என்ற கடவுளுடைய சட்டம் பழிவாங்கும் மனப்பான்மையை ஆதரிப்பதில்லை என்று எப்படிச் சொல்லலாம்? (லேவி. 24:19, 20) [ஜூலை 14, காவற்கோபுரம் 09 9/1 பக். 22 பாரா. 3-4]
இஸ்ரவேலர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வட்டி வாங்குவது தவறு? ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாங்கலாம்? (லேவி. 25:35-37) [ஜூலை 21, காவற்கோபுரம் 04 5/15 பக். 24 பாரா 4]
வனாந்தரத்தில் மூன்று கோத்திரத்தாரும் ‘கொடிகளை’ சுற்றி கூடாரம் போட வேண்டியிருந்தது; அந்தக் ‘கொடிகள்’ யாவை? (எண். 2:1, 2) [ஜூலை 28, காவற்கோபுரம் 04 8/1 பக். 24 பாரா 5]
எண்ணாகமம் 8:25, 26-ல் குறிப்பிடப்பட்டுள்ள லேவியரின் கட்டாய சேவையிலிருந்து வயதானவர்களுக்குக் கரிசனை காட்டுவது சம்பந்தமாக என்ன கற்றுக்கொள்ளலாம்? [ஆக. 11, காவற்கோபுரம் 04 8/1 பக். 25 பாரா 1]
எகிப்திலிருந்து அற்புதமாக விடுதலையான பிறகு, இஸ்ரவேலர்கள் ஏன் குறைகூற ஆரம்பித்தார்கள்? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எண். 11:4-6) [ஆக. 18, காவற்கோபுரம் 95 3/1 பக். 15-16 பாரா 10]
எல்தாதும் மேதாதும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தபோது மோசே என்ன செய்தார்? அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எண். 11:27-29) [ஆக. 18, காவற்கோபுரம் 04 8/1 பக். 26 பாரா 4]
“தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை” உண்டாக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (எண். 15:37-39) [ஆக. 25, காவற்கோபுரம் 04 8/1 பக். 26 பாரா 7]