ஏப்ரல் 28-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 99; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 19 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 19–22 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: “புத்தம்புதிய வடிவத்தில் புதிய துண்டுப்பிரதிகள்!” கேள்வி-பதில். இரண்டு பாக நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் பாகத்தில், புதிய துண்டுப்பிரதி ஒன்றை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எப்படி அளிப்பது என்று நடித்துக்காட்டுங்கள். அடுத்த பாகத்தில், ஆர்வம் காட்டிய அந்த வீட்டுக்காரரை மறுபடியும் சந்தித்து, முன்பு பேசிய விஷயத்தைத் தொடர்ந்து பேசுவதுபோல் நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி: “மீண்டும் செல்ல மறவாதீர்கள்!” ஏப்ரல் 2000 நம் ராஜ்ய ஊழியத்தில், பக்கம் 8-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சு.
பாட்டு 75; ஜெபம்