தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 28, 2014-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
(தொடர்ச்சி பக்கம் 9, பத்தி 1)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (பக்கம் 2-ன் தொடர்ச்சி)
போத்திபாரின் மனைவியோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாதிருக்க யோசேப்புக்கு எது உதவியது? (ஆதி. 39:7-12) [மார்ச் 3, காவற்கோபுரம் 13 2/15 பக். 4 பாரா 6; காவற்கோபுரம் 07 10/15 பக். 23 பாரா 16]
நமக்கு அநீதி இழைக்கப்படும்போது அல்லது கஷ்டம் வரும்போது யோசேப்பை எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 41:14, 39, 40) [மார்ச் 10, காவற்கோபுரம் 04 1/15 பக். 29 பாரா 6; காவற்கோபுரம் 04 6/1 பக். 20 பாரா 4]
எதன் அடிப்படையில் யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இரக்கம் காண்பித்தார்? [மார்ச் 17, காவற்கோபுரம் 99 1/1 பக். 30 பாரா. 6-7]
ஆதியாகமம் 49:19-ல் உள்ள வார்த்தைகள் இன்று நமக்கு எப்படிப் பொருந்துகின்றன? [மார்ச் 24, காவற்கோபுரம் 04 6/1 பக். 15-16, பாரா. 5-8]
யாத்திராகமம் 3:7-10-லிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? [மார்ச் 31, காவற்கோபுரம் 09 7/1 பக். 32 பாரா. 3-6]
மோசேயின் காலத்தில் யெகோவா எவ்வாறு தமது பெயருக்கேற்ப செயல்பட்டார்? (யாத். 3:14, 15) [மார்ச் 31, காவற்கோபுரம் 13 3/15 பக். 25-26 பாரா. 5-6]
யாத்திராகமம் 7:1-ல் சொல்லப்பட்டுள்ளபடி மோசே எப்படி ‘பார்வோனுக்கு தேவனாக’ ஆக்கப்பட்டார்? [ஏப். 7, காவற்கோபுரம் 04 3/15 பக். 25 பாரா 9]
எகிப்திலிருந்து விடுதலையானபோது யெகோவாவின் காக்கும் வல்லமையை இஸ்ரவேலர் கண்ணாரக் கண்டும்கூட, பிற்பாடு எப்படி நடந்துகொண்டார்கள்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யாத். 14:30, 31) [ஏப். 14, காவற்கோபுரம் 12 3/15 பக். 26-27 பாரா. 8-10]
புதிதாக உருவாகிய இஸ்ரவேல் தேசத்தை யெகோவா அன்புடன் கவனித்துக்கொண்டதை விவரிக்க “கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து” என்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? (யாத். 19:4) [ஏப். 28, காவற்கோபுரம் 96 6/15 பக். 10 பாரா 5–பக். 11 பாரா 2]
‘பிதாக்களுடைய அக்கிரமங்களுக்காக’ பிற்கால சந்ததியாரை யெகோவா தண்டிப்பது எப்படி? (யாத். 20:5) [ஏப். 28, காவற்கோபுரம் 04 3/15 பக். 27 பாரா 1]