ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 24; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 18 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 15–18 (10 நிமி.)
எண் 1: யாத்திராகமம் 15:20–16:5 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்தவர்கள் ஏன் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டியதில்லை?—நியாயங்காட்டி பக். 345–பக். 346 பாரா 3 (5 நிமி.)
எண் 3: கருச்சிதைவு—உயிர் கடவுள் கொடுத்த ஓர் அருமையான பரிசு! (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: கடினமாக உழைப்பவர்கள். (1 தெ. 5:12, 13) இரண்டு மூப்பர்களைப் பேட்டி காணுங்கள். சபையில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றியும் மற்ற தேவராஜ்ய பொறுப்புகளைப் பற்றியும் சொல்ல முடியுமா? மற்ற கடமைகளோடு இவற்றையும் நீங்கள் எப்படி நிறைவேற்றுகிறீர்கள்? ஊழியத்திற்கு நீங்கள் எப்படி முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? குடும்பத்தார் உங்களுக்கு எப்படிப் பக்கபலமாக இருக்கிறார்கள்?
15 நிமி: விடுமுறைக்குப் பின் ஸ்கூலுக்கு போக தயாரா? சபையாருடன் கலந்தாலோசிப்பு. இளம் பிள்ளைகள் பள்ளியில் எதிர்ப்படப்போகும் சில சவால்களைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். சோதனைகளைச் சமாளிக்கவும் தங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கவும் பிள்ளைகளுக்கு உதவ, ஆராய்ச்சி கையேடு, இளைஞர் கேட்கும் கேள்விகள் போன்ற புத்தகங்களை குடும்ப வழிபாட்டில் பெற்றோர் எப்படி பயன்படுத்தலாம் என்று விளக்குங்கள். (1 பே. 3:15) ஓரிரு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி நம் பிரசுரங்களிலுள்ள சில பயனுள்ள குறிப்புகளைப் பிள்ளைகளோடு சிந்தியுங்கள். பள்ளியில் எப்படி சாட்சி கொடுத்தார்கள் என்று சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 91; ஜெபம்