டிசம்பர் 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 13; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 28 பாரா. 16-22 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 1-6 (10 நிமி.)
எண் 1: வெளிப்படுத்துதல் 3:14–4:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சரியான மதம் வெறும் விதிமுறை ஒழுங்கு அல்ல, அது ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கிறது—நியாயங்காட்டி பக். 329 பாரா 2 (5 நிமி.)
எண் 3: இயேசு எப்படித் தம்முடைய சீடர்களுக்கு ‘மாதிரியைக் காண்பித்தார்’?—யோவா. 13:15 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: இளைஞர்களே யெகோவாவைத் துதியுங்கள்! (சங். 148:12, 13) முன்மாதிரியான இரண்டு அல்லது மூன்று இளைஞர்களைப் பேட்டி காணுங்கள். பள்ளியில் என்னென்ன விசுவாசப் பரீட்சைகளை எதிர்ப்படுகிறார்கள்? அவற்றைச் சமாளிக்க பெற்றோரும் மற்றவர்களும் எப்படி உதவியிருக்கிறார்கள்? தங்கள் நம்பிக்கையைப் பற்றி தைரியமாகப் பேச எது அவர்களுக்கு உதவியது? தங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி கேளுங்கள்.
15 நிமி: “சிநேகப்பான்மையான பேச்சு இருதயத்தைத் தொடும்.” கேள்வி-பதில். சிநேகப்பான்மையாக நடந்துகொண்டதால் என்ன நல்ல அனுபவங்களைப் பெற்றார்கள் என்று ஓரிரண்டு பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள். பிறகு, ராஜ்ய செய்தி எண் 38-ன் விநியோகிப்பு எந்தளவு நடந்திருக்கிறது என்பதை அறிவியுங்கள்.
பாட்டு 75; ஜெபம்