ஏப்ரல் 8-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 37; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 17 பாரா. 1-7 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 10-12 (10 நிமி.)
எண் 1: லூக்கா 12:1-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பல்வேறு மரபுப் பண்புகளை எது விளக்குகிறது?—நியாயங்காட்டி பக். 302 பாரா 2-பக். 303 பாரா 2 (5 நிமி.)
எண் 3: நாம் ஏன் யெகோவாவை நம் தகப்பனாகக் கருதுகிறோம்?—மத். 6:9 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊக்கமளிக்கும் ஊற்றாகத் திகழுங்கள். (ரோ. 1:11, 12) கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். சபையிலுள்ள ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுங்கள். அவர்களுக்குச் சபையார் எப்படி ஊக்கமளிக்கலாம் எனச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு, பாராட்டலாம், சேர்ந்து ஊழியம் செய்யலாம், பயணச் செலவிற்கு உதவலாம், உணவுக்காக அழைக்கலாம் எனச் சொல்லுங்கள். மற்றவர்கள் எப்படி ஊக்கமளித்தார்கள் என்று பயனியர்களிடம் கேளுங்கள். ஒழுங்கான பயனியர்கள் இல்லாவிட்டால் துணை பயனியர்களுக்கு ஏற்றாற்போல் இந்தப் பகுதியைக் கையாளுங்கள்.
10 நிமி: கடைசி நாட்களைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில். நியாயங்காட்டி பக். 241 பாரா 5-லிருந்து பக். 243 பாரா 1 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—யோனா.” கேள்வி-பதில்.
பாட்டு 13; ஜெபம்