டிசம்பர் 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 131; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 12 பாரா. 9-13, பெட்டி பக். 97 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சகரியா 9–14 (10 நிமி.)
எண் 1: சகரியா 11:1-13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யாருடைய ஜெபங்களைக் கேட்க கடவுள் மனமுள்ளவராய் இருக்கிறார்?—நியாயங்காட்டி பக். 292 பாரா 1-பக். 293 பாரா 3 (5 நிமி.)
எண் 3: நீதிமொழிகள் 15:1-ஐ எந்தச் சூழ்நிலைகளில் கடைப்பிடிக்கலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
30 நிமி: நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை நாம் எப்படிச் சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம்? பக்கங்கள் 3-6-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. பக்கம் 4-ஐ சிந்திக்கும்போது மூன்று நிமிட நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில், ஒரு குடும்பம் தங்களுடைய குடும்ப வழிபாட்டை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார்கள். அடுத்த வாரம் என்ன படிக்கலாம் என்று குடும்பத் தலைவர் கேட்கிறார். பிள்ளைகள் நம் வெப்சைட்டிலுள்ள “Teenagers” என்ற பகுதியைக் காட்டி, அதைக் கலந்தாலோசிக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். jw.org-ஐ சபையார் எப்படித் தங்களுடைய தனிப்பட்ட படிப்பிலும் குடும்பப் படிப்பிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லது பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கேளுங்கள். பக்கம் 5-ஐ சிந்திக்கும்போது மூன்று நிமிட நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில், நம் நம்பிக்கையைப் பற்றி கேள்வி கேட்கும் ஒரு வீட்டுக்காரருக்குப் பதிலளிக்க பிரஸ்தாபி ஒருவர் தன்னுடைய செல்ஃபோனிலிருந்து நம் வெப்சைட்டை பயன்படுத்துகிறார். பக்கம் 6-ஐ சிந்திக்கும்போது நான்கு நிமிட நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். வேறு மொழியில் படிக்க விரும்புகிற வீட்டுக்காரரிடம் பிரஸ்தாபி தன்னுடைய செல்ஃபோனிலிருந்தோ வீட்டுக்காரரின் கம்ப்யூட்டரிலிருந்தோ உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியின் அல்லது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் ஒரு பக்கத்தை நம் வெப்சைட்டிலிருந்து காட்டி விளக்குகிறார். சபையார் தங்கள் ஊழியத்தில் jw.org-ஐ எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கேளுங்கள்.
பாட்டு 101; ஜெபம்