ஆகஸ்ட் 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 16-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 1-4
எண் 1: 2 இராஜாக்கள் 1:1-10
எண் 2: சொத்துசுகங்கள் ஏன் நிரந்தர சந்தோஷத்தைத் தரமுடியாது (பிர. 5:10)
எண் 3: இன்று பொதுவாய்ப் பயன்படுத்தும் பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் எங்கே காணப்படுகிறது? (rs-TL பக். 191 பாரா 3–பக். 193 பாரா 8)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: உங்களுடைய ஆன்மீக இலக்குகள் யாவை? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 117, பாரா 2-லிருந்து அந்த அதிகாரத்தின் முடிவுவரை உள்ள தகவலின் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. முழுநேர ஊழியத்தைத் தங்கள் இலக்காகக் கொண்டிருப்பதற்கு பெற்றோர்களும் மற்றவர்களும் தங்களுக்கு எவ்வாறு உதவினார்கள் என்பதைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
10 நிமி: நற்செய்தியின் நடைமுறைப் பயனைச் சிறப்பித்துக் காட்டுங்கள். தேவராஜ்ய ஊழியப்பள்ளி புத்தகத்தில் பக்கம் 159-ல் உள்ள தகவலின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. சபைப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் எந்த விஷயங்களின் பேரில் அக்கறையாய் இருக்கிறார்கள் என்று சபையாரைக் கேளுங்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல் நம்முடைய அறிமுகத்தை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்லுங்கள்.
10 நிமி: “‘ஏற்ற வேளையில் உணவு.’” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. வரவிருக்கும் விசேஷ மாநாட்டு தினம் நடைபெறும் தேதி தெரிந்திருந்தால் அதை அறிவியுங்கள்.