டிசம்பர் 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 14-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 6-8
எண் 1: யோசுவா 8:1-17
எண் 2: தண்ணீர் உலகை அழித்தது—மறுபடியும் அழிக்குமா? (lr அதி. 46)
எண் 3: பிரசங்கி 7:21, 22-லுள்ள அறிவுரை ஏன் நடைமுறையானது?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேச ஏன் பயப்படுகிறேன்? விழித்தெழு!, அக்டோபர்-டிசம்பர் 2009, பக்கங்கள் 26-29-ன் அடிப்படையில் பேச்சு. குடும்ப வழிபாட்டின்போது, பள்ளியில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பிள்ளைக்குப் பெற்றோர் உதவுவதைக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு, பக்கம் 27-ல் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் ஒன்றைக் கலந்து பேசுகிறார்கள்; அதன் பிறகு, பிள்ளை அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் ஒத்திகை பார்க்கிறார்கள்.
15 நிமி: “அவசர உணர்வுடன் பிரசங்கியுங்கள்!” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐச் சிந்திக்கையில், பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி பக்திவைராக்கியமுள்ள ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி காணுங்கள்: அநாவசியமான உலகக் காரியங்களால் பாரமடையாதிருக்க நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? அவசர உணர்வுடன் பிரசங்கிப்பதால் நீங்கள் எவ்வழிகளில் பயனடைந்திருக்கிறீர்கள்?