டிசம்பர் 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 7-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 1-5
எண் 1: யோசுவா 5:1-15
எண் 2: நம் நண்பர்கள் கடவுளை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் (lr அதி. 44)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்று எப்படி காட்டலாம்? (lr அதி. 45)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்படுதல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 102-104-ல் “பிராந்தியம்” என்ற உபதலைப்பின்கீழ் உள்ள ஆறு பாராக்களை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். ஜனவரி 2008 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 5, பாராக்கள் 14-17-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சபையின் ஊழிய ஏற்பாடுகள் சம்பந்தமாக ஊழியக் கண்காணியைப் பேட்டி காணுங்கள். “சந்திக்க வராதீர்கள்” என்று சொல்பவர்களின் வீடுகளைக் குறித்து வைத்துக்கொள்வதன் அவசியத்தை விளக்குங்கள்; அதற்காகச் சபையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
15 நிமி: கேள்வி கேட்பவரின் கண்ணோட்டத்தை கண்டுணர்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 66-68-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.