உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/09 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
  • இதே தகவல்
  • நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • கூட்டங்கள் தரும் நன்மைகள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • தொலைபேசியில் சாட்சிகொடுப்பது பயனளிக்கிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • கிறிஸ்தவக் கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருப்பதில் உங்கள் பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 11/09 பக். 7

கேள்விப் பெட்டி

◼ சபை கூட்ட நிகழ்ச்சிகளைத் தொலைபேசி மூலம் கேட்கும் ஏற்பாட்டைப் பயன்படுத்துவதில் ஏன் விவேகம் அவசியம்?

சுகவீனத்தினாலோ தவிர்க்க முடியாத காரணங்களாலோ சில சமயங்களில் ராஜ்ய மன்றத்திற்கு வரமுடியாத சகோதர சகோதரிகள் கூட்ட நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தே தொலைபேசி மூலம் கேட்பதற்கு அநேக சபைகள் ஏற்பாடு செய்திருக்கின்றன. இருந்தாலும், நியாயமான காரணங்களால் கூட்டத்திற்கு வர முடியாமல் போகிறவர்கள் மட்டுமே இந்த அன்பான ஏற்பாட்டைப் பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்; இதற்கு, விவேகமும் நல்ல ஒழுங்கமைப்பும் அவசியம். எனவே, இதை மேற்பார்வை செய்யும் மூப்பர்கள், இது பயன்படுத்தப்படும் விதத்தை ஒழுங்கமைக்கவும் கண்காணிக்கவும் வேண்டும்; அப்போதுதான், ‘எல்லாக் காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடைபெறும்.’—1 கொ. 14:40.

அந்த ஏற்பாட்டிலிருந்து பயனடைய, தீரா வியாதியினால், வயோதிபத்தினால், அல்லது வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் இருக்கிற பிரஸ்தாபிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்படி மூப்பர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், தற்காலிகமாக நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது இயலாத நிலையிலிருக்கிற பிரஸ்தாபி, அல்லது வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் அடைபட்டுக் கிடக்கிற முன்னேறுகிற பைபிள் மாணாக்கர் போன்றவர்கள் அந்த ஏற்பாட்டிலிருந்து பயனடையலாம்; அவர்களையும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களாகக் கணக்கிடலாம். இப்படிப்பட்ட நியாயமான காரணங்களால் வர முடியாத நிலையிலிருப்பவர்கள் கூட்ட நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குப் போதுமான தொலைபேசி ‘லைன்கள்’ இல்லாவிட்டால், நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து கொடுப்பது போன்ற வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

சொல்லப்போனால், கூட்ட நிகழ்ச்சிகளை எப்படிக் கேட்டாலும் நம்முடைய கூட்டங்களில் நேரில் கலந்துகொண்டு பயனடைவதைப் போல் இருக்காது. ராஜ்ய மன்றத்தில் நம் சகோதரர்களுடன் கூட்டுறவுகொள்வது, “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெறவும்,” அப்படிக் கூடிவருவதன் அவசியத்தை புதியவர்கள் நன்கு புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. கூட்டங்களுக்குச் செல்லும்போது, நடிப்புகளிலிருந்து இன்னும் அதிகத்தைக் கற்றுக்கொள்ளவும், மூப்பர்கள் தனிப்பட்ட விதத்தில் நமக்கு உதவி செய்யவும், சகோதரர்களுடைய கனிவான அன்பை நேரில் ருசிக்கவும் முடிகிறது. ராஜ்ய மன்றத்தை விட்டு வெளியே வந்த ஒரு வயதான சகோதரியை ஆரத்தழுவி விடைகொடுத்தபோது அவர், “தொலைபேசி ‘லைனில்’ கூட்ட நிகழ்ச்சியைக் கேட்டிருந்தால் இதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்காதே!” என்று உணர்ச்சி பொங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை.—ரோ. 1:11, 12.

‘ஆலயத்திற்கு வரத் தவறாத’ அன்னாளைப் போல் இன்று அநேக வயதானவர்கள், தங்கள் உடல்நலமும் சூழ்நிலையும் அனுமதிப்பதற்கு ஏற்ப கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள். (லூக். 2:36, 37) தேவையான சமயத்தில் அந்தத் தொலைபேசி ஏற்பாட்டை அவர்கள் பயன்படுத்திக் கொண்டாலும், ராஜ்ய மன்றத்திற்குச் செல்லாமல் கூட்ட நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குரிய மாற்று வழியாக அதை அவர்கள் கருதுவதில்லை. அவர்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றி, நம்முடைய மகா கடவுளான யெகோவாவை வழிபடுவதற்காகக் கூட்டங்களுக்கு நேரில் செல்ல எப்போதும் ஊக்கமாய் முயற்சி எடுப்போமாக.—சங். 95:1-3, 6; 122:1.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்