நவம்பர் 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 23-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 28-31
எண் 1: உபாகமம் 30:1-14
எண் 2: நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்? (lr அதி. 42)
எண் 3: ‘திரள்கூட்டத்தாருக்கு’ பைபிள் என்ன நம்பிக்கை அளிக்கிறது? (rs பக். 167 பாரா. 3–5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
5 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு என்னென்ன கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென சொல்லுங்கள். பத்திரிகை ஊழியத்திற்குத் தயாரிக்க ஒரு புதிய பிரஸ்தாபிக்கு அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபி எப்படி உதவலாமென காட்டும் ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
25 நிமி: “பிற மொழி பேசுபவர்களுக்கு உதவுதல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐச் சிந்தித்த பிறகு, கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையைப் பயன்படுத்தி, ஒரு பிரஸ்தாபியை நடித்துக்காட்டச் சொல்லுங்கள்.