வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
மார்ச் 2009
மார்ச் மாதத்தில் பிரஸ்தாபிகள் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டதை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். நினைவுநாள் அனுசரிப்புக்கான விசேஷ அழைப்பிதழை ஏற்று, அந்நிகழ்ச்சிக்கு 78,170 பேர் ஆஜராயினர். பிரஸ்தாபிகள் மற்றும் ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையில் என்றுமில்லாத உச்சநிலையை எட்டியிருக்கிறோம்: பிரஸ்தாபிகள் 30,410; ஒழுங்கான பயனியர்கள் 2,759. அந்த மாதத்தின்போது நாம் ஊழியத்தில் 5,67,953 மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறோம், 1,90,491 மறுசந்திப்புகளைச் செய்திருக்கிறோம், 33,882 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறோம். இவை யாவும் இதுவரை எட்டாத புதிய உச்சநிலை.