மே 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 25-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 34-37
எண் 1: யாத்திராகமம் 37:1-24
எண் 2: சண்டை போடுவது சரியா? (lr-TL அதி. 19)
எண் 3: கண்டிக்காமல் இருப்பது என்றால் என்ன, அதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் அளித்தல். இப்பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளைப் பற்றி சுருக்கமாக விவரியுங்கள். அதன் பிறகு, ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு என்னென்ன கட்டுரைகளை சபையார் தயாரித்திருக்கிறார்கள் என்றும் ஏன் அவ்வாறு தயாரித்திருக்கிறார்கள் என்றும் கேளுங்கள். உதாரணமாக, ஒரு கட்டுரையை அறிமுகப்படுத்துவதற்கு என்ன கேள்வியையும் வசனத்தையும் பயன்படுத்தலாமென கேளுங்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் ஊழியத்தில் எப்படி அளிக்கலாமென நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: இயேசுவைக் குறித்து சாட்சி பகர்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 275-ல் இந்தத் தலைப்பின்கீழ் வருகிற மூன்று பாராக்களையும் பக்கம் 276-ல் உள்ள முதல் பாராவையும் அடிப்படையாகக் கொண்ட பேச்சு.
10 நிமி: “பிரசுரங்களை நன்கு பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஆர்டர் செய்யப்பட்டுள்ள பிரசுரங்களின் எண்ணிக்கைக்கும் ஊழிய அறிக்கை காட்டுகிற எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைச் சபையாருக்குத் தெரிவியுங்கள்.