பிப்ரவரி 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 23-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 32-35
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். மார்ச் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்.
10 நிமி: ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். பத்திரிகைகளிலுள்ள முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரும் என்றும், ஏன் என்றும் சபையாரைக் கேளுங்கள். வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைப் பகுத்துணர அல்லது உரையாடலை ஆரம்பிக்க என்ன கேள்வியைக் கேட்பார்கள் எனவும், எந்த வசனத்தை வாசித்துப் பத்திரிகைகளை அளிப்பார்கள் எனவும் சபையாரைக் கேளுங்கள். இந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் அளிப்பதுபோல் காட்டுகிற நடிப்புகளோடு பேச்சை நிறைவு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2009 புத்தகத்தின் முகவுரையிலிருந்து பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். ஒவ்வொரு நாளும் தினவசனத்தையும் அதற்கான குறிப்புகளையும் சிந்திப்பதற்குச் சில நிமிடங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தைக் கலந்தாலோசியுங்கள். தினவசனத்தை எப்போது எப்படிச் சிந்திக்கிறார்கள் என்றும், அதனால் அவர்கள் என்ன நன்மைகளை அடைந்திருக்கிறார்கள் என்றும் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.