தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 23, 2009-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 5 முதல் பிப்ரவரி 23, 2009 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. நான்காம் நாள் வரையிலும் சுடர்கள் உண்டாக்கப்படாதபோது, முதலாம் நாளில் கடவுளால் எப்படி வெளிச்சத்தை வரச் செய்ய முடிந்தது? (ஆதி. 1:3, 16) [w04 1/1 பக். 28 பாரா 5]
2. பூமியைக் கீழ்ப்படுத்திக்கொள்ளும்படி யெகோவா பரிபூரண ஆதாமிடம் சொன்னது போல் நோவாவிடம் சொல்லாதது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆதி. 9:1) [it-2 பக். 1095 பாரா 6]
3. ஆபிரகாமிய உடன்படிக்கை எப்போது அமலுக்கு வந்தது, அது எவ்வளவு காலத்திற்கு இருந்தது? (ஆதி. 12:1-4) [w04 1/15 பக். 26 பாரா 4; w01 8/15 பக். 17 பாரா 13]
4. ‘தங்களுக்குப் புகழ் உண்டாக்கும்’ முயற்சியில் நிம்ரோதும் அவனைச் சேர்ந்தவர்களும் தோல்வி கண்டார்கள் என்பதை எது காட்டுகிறது? (ஆதி. 11:4, கத்தோலிக்க பைபிள்) [w98 3/15 பக். 25]
5. ‘நீதிமான்’ என லோத்து 2 பேதுரு 2:8-ல் அழைக்கப்பட்டபோதிலும் அவர் ஏன் தன்னுடைய மகள்களை வக்கிரமான பாலுறவு ஆசைபிடித்த கும்பலிடம் கொடுக்க முன்வந்தார்? (ஆதி. 19:8) [w05 2/1 பக். 26 பாரா. 15-16; w04 1/15 பக். 27 பாரா 3]
6. குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பு கடவுள் பயமுள்ள கணவர்களுக்கு இருக்கிறபோதிலும் ஆகாரையும் இஸ்மவேலையும் ஆபிரகாமால் எப்படி வனாந்தரத்திற்கு அனுப்ப முடிந்தது? (ஆதி. 21:10-21; 1 தீ. 5:8) [w88 2/15 பக். 31]
7. ஈசாக்குக்கு மனைவியைக் கண்டுபிடிப்பதில் யெகோவாவின் வழியைப் பின்பற்றுவதற்கு எலியேசர் எடுத்த முயற்சியிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆதி. 24:14, 15, 17-19, 26, 27) [w97 1/1 பக். 31 பாரா 2]
8. ஏணியில் ‘தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்ததை’ யாக்கோபு கனவில் பார்த்ததன் அர்த்தமென்ன? (ஆதி. 28:10-13) [w03 10/15 பக். 29 பாரா 1; it-2 பக். 189]
9. லேயாளின் மகனிடமிருந்து தூதாயீம் கனிகளைப் பெறுவதில் ராகேல் ஏன் அதிக ஆர்வம் காட்டினாள்? (ஆதி. 30:14, 15) [w04 1/15 பக். 28 பாரா 7]
10. இருவருக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் யாக்கோபின் உதாரணம் ஏன் சிறந்ததாய் இருக்கிறது? (ஆதி. 33:3, 4) [g82 2/22 பக். 19 பாரா. 8-10]