ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 12-ல் துவங்கும் வாரம்
13 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) ஆகஸ்ட் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ‘நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?’ என சொல்லி உரையாடலை நிறுத்துவோருக்கு வெவ்வேறு விதங்களில் பதிலளிப்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 20-ஐக் காண்க.
20 நிமி: “ஆன்மீக இலக்குகளை வையுங்கள்.”a பாரா 5-ஐ கலந்தாலோசிக்கும்போது, நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 114, 116-லிருந்து ஒழுங்கான பயனியர் சேவை மற்றும் பெத்தேல் சேவை பற்றி உற்சாகமூட்டும் குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
12 நிமி: சபை அனுபவங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பயன்படுத்தியதால் கிடைத்த அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பைபிள் படிப்பை தொடங்கியிருக்கிறார்களா? அப்படியானால், அதை எப்படி தொடங்கினார்கள் என்று விவரிக்க அல்லது ஓரிரு நிஜ அனுபவங்களை மீண்டும் நடித்துக் காட்ட சொல்லவும். நவம்பர் 2001, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-லுள்ள “துண்டுப்பிரதியை விநியோகிக்கும் சந்தர்ப்பங்கள்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யவும்.
பாட்டு 123, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
17 நிமி: அவர்களை தடுப்பது எது? சபையாருடன் கலந்தாலோசிப்பும் நடிப்பும். தங்கள் நம்பிக்கைகளைக் குறித்து கலந்து பேச விருப்பமற்றவர்களை நாம் ஊழியத்தில் பொதுவாக சந்திக்கிறோம். ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு இது ஒரு தடையாக உள்ளது. ஒருவர் கலந்து பேச விரும்பாததற்கான காரணத்தைப் புரிந்துகொண்டால், அந்த நபரை மனம்விட்டு பேச வைக்கும் விதத்தில் தயாரிப்பது நமக்கு எளிதாக இருக்கும். பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களை சந்திக்கையில் நம் பிரசங்க அளிப்பை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று கலந்தாலோசிக்கவும்: (1) தங்கள் சொந்த மதம் உட்பட எந்த மதத்திலும் பற்று இல்லாதவர்கள். (2) தங்கள் குடும்பத்தாரும் முன்னோர்களும் கடைப்பிடித்த மத பழக்கவழக்கங்களுடன் உணர்ச்சிப்பூர்வ பற்றுள்ளவர்கள். (3) குறைந்தளவு வேதப்பூர்வ ஆதாரமே இருப்பதால் தங்கள் சொந்த நம்பிக்கைகளைக் குறித்து பேச சங்கடமாக உணருகிறவர்கள். (4) எதிர்க்கிறவர்கள் சொல்லும் தவறான கருத்துகளைக் கேட்டு நம்மீது தப்பெண்ணத்தை வளர்த்திருப்பவர்கள். உள்ளூர் பிராந்தியத்துக்கு பொருந்தும் வகையில் இந்தப் பட்டியலை மாற்றியமைத்து பொதுவாக என்னென்ன மனநிலையுள்ளவர்களை சந்திப்போமோ அப்படிப்பட்டவர்களுக்கு கவனம் செலுத்தவும். ஒரு வேதப்பூர்வ உரையாடலில் ஒருவரை பங்கெடுக்க வைப்பது எப்படி என காட்டும் சுருக்கமான ஒரு நடிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி: “உறவினர் சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ உண்மைப்பற்றுறுதியைக் காட்டுங்கள்.”b (பாராக்கள் 1-8) கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை பயன்படுத்தி தகுதி வாய்ந்த ஒரு மூப்பர் இதைக் கையாள வேண்டும். திறம்பட வாசிக்கும் ஒரு சகோதரர் ஒவ்வொரு பாராவையும் சத்தமாக வாசிக்க ஏற்பாடு செய்யவும்.
பாட்டு 136, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 8, (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) விழித்தெழு!-வை சபை பிரஸ்தாபியும் செப்டம்பர் 1, காவற்கோபுரத்தை ஒழுங்கான அல்லது துணைப் பயனியரும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். தங்கள் அளிப்பில் ஒரு வசனத்தை பயன்படுத்தும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துங்கள்.
17 நிமி: “பேச்சுத்தொடர்பு கொள்பவராய் இருங்கள்!”c முடிவாக, பள்ளி துணைநூல், பக்கங்கள் 5-9-ஐ மறுபார்வை செய்யும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “உறவினர் சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ உண்மைப்பற்றுறுதியைக் காட்டுங்கள்.”d (பாராக்கள் 9-14) கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை பயன்படுத்தி தகுதி வாய்ந்த ஒரு மூப்பர் இதைக் கையாள வேண்டும். திறம்பட வாசிக்கும் ஒரு சகோதரர் ஒவ்வொரு பாராவையும் சத்தமாக வாசிக்க ஏற்பாடு செய்யவும்.
பாட்டு 125, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவூட்டவும். மே 1, 1999, காவற்கோபுரம், பக்கம் 25-லுள்ள “உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசியுங்கள்” என்ற கட்டுரையை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: போகுமுன் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பும் நடிப்பும். திறம்பட்ட ஊழியத்திற்கு நல்ல தயாரிப்பு உதவியாக இருக்கும். ஆகவே, முன்னதாகவே: (1) தேவையான பிரசுரங்களை வாங்கி வையுங்கள். (2) போதுமான அளவில் வீட்டுக்கு வீடு பதிவு சீட்டுகள், பேனா அல்லது பென்சிலை வைத்திருங்கள். (3) போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், அவசியமான பயண ஏற்பாடுகளை செய்யுங்கள். (4) நீங்கள் செய்ய திட்டமிடும் மறுசந்திப்புகளைக் குறித்து சிந்தியுங்கள். (5) என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தயாரியுங்கள். வெளி ஊழிய கூட்டம் நடத்தப்போவதாக இருந்தால், போதுமான பிராந்தியம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். செப்டம்பரில் படைப்பு, மிகப் பெரிய மனிதர் அல்லது இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகங்களை அளிப்பதற்கு இரண்டோ மூன்றோ வழிகளை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். ஏதாவதொரு பிரசுரத்தை அளிப்பதை நடித்துக் காட்டவும், அந்த கலந்தாலோசிப்பில் ஒரு வசனத்தை சேர்க்கவும்.—நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 1995, பக்கம் 4, ஜூன் 1998, பக்கம் 8, மார்ச் 1994, பக்கம் 8 ஆகியவற்றிலுள்ள ஆலோசனைகளைக் காண்க.
15 நிமி: “சாதுரியத்தோடு நற்செய்தியை அறிவித்தல்.”e பள்ளி துணைநூல், பக்கங்கள் 70-2, பாராக்கள் 4-8-லிருந்து பொருத்தமான குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். வெளி ஊழியத்தில் எதிர்ப்படும் சூழ்நிலைகளை சாதுரியமாக கையாளுவது எப்படி என்பது குறித்து சபையாரின் குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 99, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.