ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “நாம் நற்செய்தியை பிரசங்கிக்கிறோம்.” அறிமுக குறிப்புகளை ஒரு நிமிடத்திற்குள் முடித்துவிட்டு கேள்வி பதில் அடிப்படையில் சிந்தியுங்கள். ஊழியத்தில் அறிவு புத்தகத்தை அளிக்கையில், அதிலுள்ள சாதகமான வசன குறிப்புகளை எடுத்துக் காண்பிக்க சில உதாரணங்களை சொல்லுங்கள்.
20 நிமி: “ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்க முடியுமா?” (பாராக்கள் 1-11) கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. உங்கள் சபை சமீபத்தில் எட்டிய துணைப் பயனியர் உச்ச எண்ணிக்கையை சொல்லுங்கள். அவர்களில் சிலரை ஊழியத்தில் தங்களுடைய பங்கை அதிகரித்ததால் கிடைத்த தனிப்பட்ட பலன்களை சபையாருக்கு சொல்லச் சொல்லுங்கள். ஏப்ரல் மாதத்தின்போது துணைப் பயனியரில் ஒரு புதிய உச்சநிலையை எட்டிப்பிடிக்க முயற்சிக்குமாறு சபையார் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். நம் ஊழியம் புத்தகத்தின் பக்கங்கள் 113-114-ல் கொடுக்கப்பட்டிருக்கும் துணைப் பயனியருக்கான தகுதிகளை மறுபார்வை செய்யுங்கள். துணைப் பயனியர் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள், கூட்டம் முடிந்த பிறகு அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
பாட்டு 187, முடிவு ஜெபம்.
மார்ச் 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “நான் என்ன செய்ய வேண்டும்?” ஒரு புத்தகப் படிப்பு நடத்துனர், ஓரிரு உதவி ஊழியர்களுடன் அந்த கட்டுரையை கலந்தாலோசிக்கிறார். அநேக தடைகள் அல்லது குறைபாடுகளின் காரணமாக, சபை நடவடிக்கைகளுக்கு தங்களால் அதிகத்தை செய்ய முடியவில்லை என ஒருவேளை சில பிரஸ்தாபிகள் உணரலாம். சபையை பலப்படுத்துவதற்கும், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை அதிகரிப்பதற்கும் நமக்கிருக்கும் அநேக மதிப்புமிக்க வழிகளில் சிலவற்றை மறுபார்வை செய்யுங்கள். கடைசியில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு “கடைசி அறிக்கை செய்தலில்” பங்குகொள்ள முடியும் என்பதை காண்பியுங்கள்.—நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 108-10-ஐ பார்க்கவும்.
20 நிமி: “ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்க முடியுமா?” (பாராக்கள் 12-18) கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. நமக்கு பரிச்சயமான ஒருவரை எப்படி நினைவு ஆசரிப்பிற்கு அழைப்பது என்பதைப் பற்றிய சுருக்கமான ஒரு நடிப்பை செய்து காட்டுங்கள். 2000 காலண்டரிலுள்ள ஏப்ரல் மாதத்தை மறுபார்வை செய்யுங்கள். ஊழியத்திற்காக திட்டமிடப்பட்டிருக்கும் கூட்டங்களைப் பற்றி சொல்லுங்கள். அந்த மாதத்தின்போது ஊழியத்தில் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வதற்கு ஒரு சரியான அட்டவணையை போடும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள். அதன் மூலம் சபையில் உள்ள அனைவரும் (100 சதவீதம்) ஊழியத்தில் பங்குகொள்ள இலக்கு வைக்கலாம். துணைப் பயனியர் செய்ய முடிந்த எல்லோரையும் அதை செய்யவும், கூட்டம் முடிந்தவுடன் அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளவும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 65, முடிவு ஜெபம்.
மார்ச் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை போடும்படி எல்லோருக்கும் நினைப்பூட்டுங்கள். ஏப்ரல் மாதத்தின்போது துணைப் பயனியர் செய்யப்போகிறவர்களின் பெயர்களை அறிவிக்கவும். துணைப் பயனியர் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுக்க இன்னமும் நேரம் இருக்கிறது என விளக்குங்கள். அந்த மாத வெளி ஊழிய கூட்டத்திற்கான அட்டவணையை குறிப்பிடுங்கள். ஏப்ரல் மாதத்தை ஊழியத்தோடு துவக்க இந்த வார இறுதி நாட்களின்போது ஊழியத்தில் கலந்துகொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். அந்த மாதத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகளை அளிப்போம். ஊழியத்தில் பயன்படுத்த ஒவ்வொரு சமீபத்திய இதழ்களிலுள்ள ஒரு கட்டுரையையும், பேச்சுப் பொருளையும் முக்கியப்படுத்திக் காட்டுங்கள். ஒவ்வொருவரும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டுப் பிரதிகளை கொண்டிருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி ஆர்வமுள்ளோருக்கு பைபிள் படிப்பை துவங்க முயற்சிக்க வேண்டும்.
13 நிமி: “உதவிக்காக கேளுங்கள்.” ஒரு மூப்பரின் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். நம் எல்லோருக்கும் அவ்வப்போது ஏதாவது ஒருவிதத்தில் உதவி எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை விளக்குங்கள். ஒவ்வொருவரும் தன்தன் பாரத்தை சுமக்க வேண்டும் என்பது உண்மைதான். (கலா. 6:5) இருப்பினும், பிரச்சினையை சமாளிக்க முடியாதபோது, சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ச்சிவாய்ந்த அங்கத்தினர்களிடம் உதவிக்காக நாட தயங்கவே கூடாது. மற்றவர்கள் கொடுத்த அன்பான உதவி எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்தியது என்பதைப் பற்றி சில அனுபவங்களை சொல்லும்படி சபையாரை அழையுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
12 நிமி: 2000 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) மறுபார்வை. சபையார் கலந்தாலோசிப்பும், பக்கம் 31-ல் உள்ள “1999 மொத்த எண்ணிக்கை”யின் சிறப்பு அம்சங்களை மறுபார்வை செய்தலும். பக்கங்கள் 3-5-ல் உள்ள “ஆளும் குழுவின் கடித”த்தை கலந்தாலோசியுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை அவர்கள் எவ்வாறு பின்பற்றுவார்கள் என சிலரை சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 195, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகளும், வெளி ஊழிய அனுபவங்களும். மற்றவர்களும் ஊழியத்தில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தும் விதத்திலான, சமீபத்தில் உங்கள் பிராந்தியத்தில் கிடைத்த அனுபவங்களில் சிலவற்றை தெரிந்தெடுத்து சொல்லுங்கள்.
17 நிமி: “தானியேல் தீர்க்கதரிசனத்தை படித்தல்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பைபிள் புத்தகமாகிய தானியேலை படிப்பதன் மூலம் நாம் எவ்வாறு நல்ல பலன்களை பெற்றுக்கொள்ளலாம் என சுருக்கமாக சொல்லுங்கள். (தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்தில் அதிகாரம் 1, பாராக்கள் 15-17-ஐ பார்க்கவும்.) சபை புத்தகப் படிப்பிற்கு தவறாமல் ஆஜராகும்படி அனைவரையும் தூண்டுவியுங்கள்.
18 நிமி: வினைமையான தவறுகளை நான் தெரிவிக்க வேண்டுமா? இளைஞர்களை கருத்தில் கொண்டு ஒரு மூப்பரால் கொடுக்கப்படும் கருத்தார்ந்த பேச்சு. இன்றைய சமுதாயத்தில் உருவெடுத்துள்ள அநேக பிரச்சினைகள், இளைஞர்கள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவற்றுள் சில: சீரழியும் ஒழுக்க தராதரங்கள், அதிகரிக்கும் வன்முறை, போதை மருந்திற்கு அடிமையாதல், அதிகாரங்களுக்கு மரியாதையின்மை. சில இளைஞர்கள் தங்களுடைய மோசமான நடத்தையை மற்றவர்களிடமிருந்து மறைத்து இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். இது அந்த முழு சபையின் ஆவிக்குரிய நிலையை ஆபத்திற்குள்ளாக்குகிறது. சிலர் வினைமையான சில தவறுகளை செய்கின்றனர், அவற்றை இரகசியமாக மறைத்துவிட வேண்டும் என்றும் விரும்புகின்றனர். சபையிலுள்ள ஒரு சகோதரனோ சகோதரியோ கடவுளுடைய சட்டத்தை மீறி வினைமையான தவறை செய்திருப்பது உங்களுக்கு தெரியவந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? லேவியராகமம் 5:1-ல் கொடுக்கப்பட்டுள்ள நியமத்தை சிந்தியுங்கள். (ஆகஸ்ட் 15, 1997 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 27-30-ஐ பார்க்கவும்.) இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கங்கள் 68-9 வரையுள்ள குறிப்புகளை எடுத்துச்சொல்லி, அப்படிப்பட்ட சமயத்தில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்குங்கள்.
பாட்டு 68, முடிவு ஜெபம்.