ஜூன் மாத ஊழியக் கூட்டங்கள்
ஜூன் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 9 (19)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து சபைக்குப் பொருத்தமான அறிவிப்புகளும். மிகவும் சமீபத்தில் வெளிவந்த பத்திரிகைகளை இந்த வார இறுதியில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எவ்வாறு அளிக்கலாம் என்பதைப்பற்றிய ஒரு சுருக்கமான நடிப்பைக் கொண்டிருக்கவும். இவ்வாறு இறுதியில் ஊழியத்தில் உபயோகிக்க மிகப் பெரிய மனிதர் மற்றும் படைப்பு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளும்படி சபையாருக்கு நினைவுப்படுத்துங்கள்.
20 நிமி:“நீங்கள் பெருக விதைக்கிறீர்களா?” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, தங்களுடைய சேவையின் ஏதாவதொரு அம்சத்தில் எவ்வாறு கூடுதலான முயற்சியெடுத்து அதற்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று காண்பிக்கும் சொந்த அனுபவங்களை சபையாரிடமிருந்து கேட்கவும்.
15 நிமி:“நம் படைப்பாளரை கனப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். ஆலோசனை அளிக்கப்பட்டுள்ள பிரசங்கங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளைக் கொண்டிருக்கவும்.
பாட்டு 30 (58), முடிவு ஜெபம்.
ஜூன் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 28 (5)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைக்காக சங்கத்திலிருந்து வந்த நன்றிதெரிவிப்புகளையும் வாசியுங்கள். தாராள மனமுடைய ஒருவர் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டும் சுருக்கமான குறிப்புகளை சொல்லுங்கள்.—நீதி. 11:24அ.
15 நிமி:“மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரில் விசுவாசத்தைக் கட்டுதல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கும் மறுசந்திப்புகளில் ஒன்றை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
20 நிமி:“சபை புத்தகப்படிப்பு கல்வி புகட்டும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.” படிப்பு நடத்துனர் ஒருவர் சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். அந்தக் கட்டுரை (1) புத்தகப்படிப்புக்கு ஆஜராவது அதிகரித்தல், (2) படிப்பின்போது அதிக குறிப்புகளைச் சொல்லுதல், (3) ஊழியத்துக்கான கூட்டங்களை நன்கு ஆதரித்தல் போன்றவற்றை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது என்பதை அழுத்திக்காட்டுங்கள்.
பாட்டு 65 (36), முடிவு ஜெபம்.
ஜூன் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 31 (51)
10 நிமி:சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். இன்னும் பள்ளி விடுமுறையில் இருக்கும் இளைஞர், ஊழியத்தில் அவர்கள் தங்களுடைய பங்கை அதிகரிப்பதற்காக இருக்கும் வாய்ப்புகளை மறுபார்வை செய்யவேண்டும். சிலரால் துணைப் பயனியர் சேவை செய்யமுடியலாம். பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறவர்கள், ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைக்கும் நோக்கோடு எதிர்காலத்திற்கான தங்களுடைய திட்டங்களை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
15 நிமி:சபையின் தேவைகள். அல்லது காவற்கோபுரம் ஜூன் 1, 1994-ன் எல்லா பதிப்புகளிலும் பக்கங்கள் 3-7-ல் உள்ள இரண்டு கட்டுரைகளின் அடிப்படையில் ‘சரியான மதம்’ என்ற ஒரு பேச்சு.
20 நிமி:“கடவுளுடைய சித்தத்தை நீங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்களா?” காவற்கோபுரம் (மாதம் இருமுறை வெளியாகும் பதிப்புகள்) மார்ச் 1, 1994, பக்கங்கள் 28-30-ன் அடிப்படையில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
பாட்டு 223 (22), முடிவு ஜெபம்.
ஜூன் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 174 (90)
10 நிமி:சபை அறிவிப்புகள். வார இறுதிக்காக திட்டமிடப்பட்டிருக்கும் வெளி ஊழிய ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். “தேவ பயம்” மாநாட்டுக்கான தங்களுடைய அறை வேண்டுதல் விண்ணப்பங்களை சரியான சமயத்தில் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். செயலாளர் அவற்றைச் சேகரித்து இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவர்களின் பொருத்தமான முகவரிக்கு அனுப்பிவைப்பார்.
15 நிமி:“வெளி ஊழியத்திற்கான அர்த்தமுள்ள கூட்டங்கள்.” ஊழியக் கண்காணியால் நடத்தப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாரா 3-ஐ சிந்திக்கையில், இந்த வார இறுதியில் பயன்படுத்துவதற்காக நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து ஓரிரு அறிமுகங்களைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். பாரா 5-ஐ சிந்திக்கையில், வெளி ஊழியத்தில் நடத்தைச் சம்பந்தமாக உள்ளூர் சபையில் கவனிக்கப்பட்டிருக்கும் பிரச்னைகள் ஏதாவது இருக்குமானால் குறிப்பிடுங்கள். முன்னேற்றத்திற்கான அன்பான ஆலோசனைகளைக் கொடுங்கள்.
20 நிமி:ஜூலை மாதத்திற்கான அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். சபை கையிருப்பில் வைத்திருக்கும் சிறுபுத்தகங்களின் பிரதிகளை பார்வைக்காக வையுங்கள். உரையாடல்களைத் தொடங்குவதற்காக பயன்படுத்தப்படக்கூடிய சில ஆர்வமூட்டும் அம்சங்களையும் படங்களையும் மறுபார்வை செய்யுங்கள். வித்தியாசப்பட்ட வீட்டுக்காரர்களோடு பைபிள் படிப்புகளைத் தொடங்குவதற்கு மிகப் பொருத்தமான சிறுபுத்தகங்கள் எவை என்பதைக் குறிப்பிடுங்கள். பைபிள் பொருள் ஒன்றின் பேரில் ஒரு கலந்தாலோசிப்பைத் தொடங்குவது எவ்வாறு என்பதைக் காட்டும் இரண்டு நடிப்பைக் கொண்டிருங்கள். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 12-ல் “எதிர்காலம்/பாதுகாப்பு,” மற்றும் பக்கங்கள் 12-13-ல் “ராஜ்யம்” ஆகியவற்றில் உள்ள ஆலோசனைகளை உபயோகியுங்கள்.) ஒரு பைபிள் படிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகளுடன் நடிப்புகள் முடிவடையவேண்டும்.
பாட்டு 118 (99), முடிவு ஜெபம்.