தேவராஜ்ய செய்திகள்
இந்தியா: பிப்ரவரி மாதம் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் எல்லா காலத்துக்கும் மேலான தொடர்ந்து மூன்றாவது உச்சநிலையைக் கொண்டிருந்து, சிறுபுத்தகங்கள் அளிப்பிலும் மறுசந்திப்புகள் நடத்துவதிலும் பைபிள் படிப்புகள் நடத்துவதிலும் புதிய உச்சநிலைகளை உருவாக்கியிருக்கிறது.
சுமார் இருபது தனி பிராந்தியத் தொகுதிகளை முன்னேற்றுவித்ததனால், இந்தியாவிலுள்ள சபைகளின் எண்ணிக்கை இப்போது 400-ஐக் கடந்துவிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை, இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 70-க்கும் அதிகமான தனி பிராந்தியத் தொகுதிகளை உட்படுத்தாது.