நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
வியாபார பிராந்தியங்களில் தைரியமாக சாட்சிக் கொடுப்பதன்மூலம்
1. நற்செய்தியை அறிமுகப்படுத்துவதில் தைரியம் அவசியமாக இருக்கிறது. வியாபார பிராந்தியங்களில் சாட்சி கொடுப்பதில் இது உண்மையாக இருக்கிறது. சில பிரஸ்தாபிகள் வியாபார பிராந்தியங்களில் சாட்சி கொடுக்க தயங்குகிறார்கள். இது அனுபவ குறைவின் காரணமாக இருக்கக்கூடும் அல்லது ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டிய’ அவசியத்தை ஏற்படுத்தும் ஒரு பிராந்தியமாகவும் அது இருக்கக்கூடும்.—1 தெச. 2:2.
2. அநேக பிரஸ்தாபிகள் வியாபார பிராந்தியங்களில் சாட்சிகொடுத்ததிலிருந்து நல்ல பலன்களை அடைந்திருக்கிறார்கள். ஒரு வட்டாரக் கண்காணி குறிப்பிட்டதாவது வியாபார ஸ்தலங்களில் காலைதோறும் ஒன்பது நாட்களுக்கு ஊழியம் செய்தபோது மொத்தம் 177 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இன்னும் அதிகம் விநியோகிக்கப்பட்டிருக்கும் ஆனால் கையிருப்பு தீர்ந்துவிட்டது. வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்வதில் பங்குகொள்ள பிரயாசப்படுவீர்களானால் நீங்களும்கூட வெற்றி காணலாம்.
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்
3. வெற்றி பெரும்பாலும் நம்முடைய மனநிலையின் பேரில் சார்ந்திருக்கிறது. சில பிரஸ்தாபிகள் கடை கடையாக ஊழியம் செய்வது அதிக கஷ்டமானது என்று நினைக்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த மனநிலையைக் கொண்டிருந்த ஒரு பிரஸ்தாபி சொன்னதாவது: “பிரதிபலிப்பு எதிர்மறையாக இருக்கும் என்று நான் நினைத்தேன் என்றபோதிலும் என்னுடைய வியப்புக்கேதுவாய், ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிப்பு நன்றாக இருந்தது. அவர்கள் மெய்யாகவே அமைதலானவர்களாகவும் சிநேகப்பான்மையுள்ளவர்களாகவும் இருந்தார்கள். பெரும்பாலும் எல்லாச் சமயங்களிலும் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டார்கள்.” ஆம், வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் கலந்துகொள்பவர்கள் அதை ஒரு பலன்மிகுந்த வேலை என்றும் ஆசீர்வாதங்கள் கொண்டுவருகிறதென்றும் குறிப்பிடுகின்றனர்.
4. மூப்பர்கள் முக்கியமாக ஊழியக்கண்காணி தலைமைத் தாங்கி வழிநடத்த வேண்டும். வியாபார நிறுவனங்களால் நிறைந்திருக்கக்கூடிய இடங்களைக் குறித்து ஒரு விசேஷித்த பிராந்திய வரைபடத்தை தயாரிப்பது பயனுள்ளதாக இருக்கக்கூடும். மற்ற இடங்களில் வியாபார ஸ்தலங்கள் குடியிருப்பு பிராந்தியங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யப்படலாம். கடைகள், அலுவலகங்கள் தொழிற்சாலைகள் மற்றும் போன்றவைகள் கவனியாது விட்டுவிடக்கூடாது. வியாபார நிறுவனங்களால் நிறைந்திருக்கும் பிராந்தியங்களில் ஊழியம் செய்வதற்கு தகுதிவாய்ந்த பிரஸ்தாபிகளை தேர்ந்தெடுப்பதை மூப்பர்கள் பொருத்தமானதாக காணக்கூடும்.
5. இந்த வேலையில் உட்படக்கூடியவர்கள் நேர்த்தியாக ஆடை அணிந்திருக்க வேண்டும். வியாபார தொழிலிலிருக்கும் ஆட்களை சந்திக்கும்போது சுருக்கமாகவும் குறிப்பாகவும் பேசுவதற்கு முயற்சி செய்யவேண்டும். நீளத்தில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக இல்லாத அறிமுக வார்த்தைகள் அதிக பொருத்தமாக இருக்கும். வியாபார ஸ்தலங்களில் ஊழியம் செய்யும்போது மேம்பட்ட நற்பலன்களை பெறுவதற்கு அதிக வேலையாயிராத நேரங்களையும் நாட்களையும் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. சனிக்கிழமை காலை நேரங்களில் ஆரம்ப மணிநேரங்கள் பொருத்தமானதாக இருப்பதாக சிலர் கண்டிருக்கின்றனர். மறுபட்சத்தில் ஒரு சிலர் வார நாட்களில் எஜமானர்கள் அவ்வளவாக வேலையில் ஆழ்ந்திராத சமயங்களில் கடைகள் பெருங்கூட்டம் இராத ஆரம்ப மணிநேரங்கள் அனுகூலமாக இருப்பதை கண்டிருக்கின்றனர்.
நாம் என்ன சொல்லலாம்
6. வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்கையில் பத்திரிகைகளையோ அந்த மாதத்துக்குரிய பிரசுர அளிப்பையோ துண்டுபிரதிகளையோ அளிக்கலாம். நம்முடைய அணுகுமுறையும் பிரசுர அளிப்பும் சூழ்நிலைமைக்கு ஏற்றார்போல் வித்தியாசப்படக்கூடும். பத்திரிகைகளை அளிக்கையில் நாம் பின்வருமாறு சொல்லலாம்: “வியாபார தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை வீடுகளில் காண்பது அதிக கடினமாக இருப்பதனால் இன்று உங்களை சந்திப்பதற்கு நாங்கள் இந்த முயற்சி எடுக்கிறோம். இந்த புதிய காவற்கோபுர இதழில் [கட்டுரையின் தலைப்பைச் சொல்லுங்கள்] என்ற கட்டுரை இருக்கிறது. உங்களை தனிப்பட்ட விதத்தில் பாதிக்கக்கூடிய தகவல்கள் இதில் இருக்கின்றன. இந்தக் கட்டுரையையும் அத்துடன் மற்ற கட்டுரைகளையும் நீங்கள் வாசித்து மகிழ்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காவற்கோபுரம் பத்திரிகையுடன் விழித்தெழு!-பையும் சேர்த்து ரூ4 நன்கொடைக்கு அளிக்கிறோம்.”
7. இந்த மாதம் நமது பிரசுர அளிப்பு உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? வியாபார பிராந்தியங்களில் இந்தப் பிரசுரத்தை அளிக்கையில் நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “வியாபார தொழிலில் இருக்கும் நீங்கள் இதில் வெற்றிப் பெறுவதற்கு அதிக சிந்தனையோடுகூடிய பிரயாசை அவசியம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் உயிரையும் இந்தப் பிரபஞ்சத்தையும் கொண்டுவருவதில் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சி வெற்றியடைந்திருக்கக்கூடுமா? இந்தப் புத்தகமானது கடவுளே உயிரை சிருஷ்டித்தார் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான அத்தாட்சியை கொடுக்கிறது. மனிதனை சிருஷ்டிப்பதில் கடவுளுடைய ஆழ்ந்த சிந்தனைக்குரிய நோக்கத்தையும்கூட அது காட்டுகிறது. இந்த மாதத்தின்போது நாங்கள் உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற தலைப்புள்ள புத்தகத்தை அளிக்கிறோம். உயிரைப்பற்றியும் மனிகவர்க்கத்திற்கு எதிர்காலம் எதைக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் அதிகத்தை இது சொல்லுகிறது. இதை நாங்கள் சிறு நன்கொடை ரூ30-க்கு விட்டுச் செல்கிறோம்.” (சிறிய அளவு பக்கம் ரூ15.)
8. ஜீவனை காக்கும் நற்செய்தியோடு ஜனங்களை எட்டும் நமது ஊக்கமான முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதை குறித்ததில் நாம் நம்பிக்கையுடனிருக்கலாம். நமது சாட்சிகொடுக்கும் வேலையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. (அப். 20:24) வியாபார தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆட்களை வீடுகளில் சந்திப்பது பெரும்பாலும் கடினமானதாக இருப்பதால் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களுடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் அனுகூலப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபார ஸ்தலங்களில் ஊழியஞ்செய்வது ஒரு சவாலாக இருக்கக்கூடுமென்றாலும், ‘கடவுளுடைய நற்செய்தியைப் பேசுவதற்கு நாம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டால்’ வெற்றியடையலாம்.