நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களில்
1. உங்களுடைய பிராந்தியங்களில் எந்தளவுக்கு நீங்கள் அடிக்கடி ஊழியம் செய்கிறீர்கள்? பிராந்தியம் அடிக்கடி செய்து முடிக்கப்படுகிறதென்றால், நீங்கள் பிரத்தியேகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏன்? ஏனெனில் அடிக்கடி தங்கள் பிராந்தியங்களில் ஊழியம் செய்யும் சபைகளே பொதுவாக தீவிர வளர்ச்சியை அனுபவிக்கின்றன. இதுவே பெரிய நகரங்களிலுள்ள பல சபைகளின் அனுபவமாயிருந்திருக்கிறது. உதாரணமாக, பெரும்பாலான பிராந்தியம் அடிக்கடி ஊழியம் செய்யப்படும் நியு யார்க் நகரில் இப்பொழுது 340-க்கும் மேற்பட்ட சபைகள் இருக்கின்றன.
2. வாரந்தோறும் செய்து முடிக்கப்படும் ஒரு பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில், தன்னை இதற்கு முன் ஒருவருமே சந்தித்ததில்லை என்று சொன்ன ஒரு பெண்ணை ஒரு சகோதரர் எதிர்பட்டார். அவள் அதிக ஆவலோடு இலக்கியத்தை எடுத்துக்கொண்டால். ஒருவர் தன்னை கண்டு பிடித்ததற்காக அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆகவே இப்படிப்பட்ட பிராந்தியங்களில் நற்செய்தியை கேட்பதற்கு வாய்ப்பை பெற்றிராத ஆட்கள் இன்னும் இருக்கின்றனர். (2 பேதுரு 3:9-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்) செம்மறியாட்டைப் போன்ற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களை முழுமையாய் செய்து முடிப்பது முக்கியம்.—மத். 10:11
சவாலை எதிர்படுதல்
3. அடிக்கடி செய்யப்படும் பிராந்தியங்களில் வீட்டுக்கு வீடு பதிவு சீட்டில் திருத்தமான பதிவைக் கொண்டிருப்பது அத்தியாவசியமானது. வேறொரு பிராந்தியம் இல்லாதபோது தொகுதியினரை ஊழியத்தில் சுறுசுறுப்பாய் வைத்திருப்பதற்கு வீட்டில் இல்லாத ஆட்களைப் பற்றிய பட்டியல் பயன்படுத்தப்படலாம். நாளின் பகல் வேலையில் வீட்டில் காணப்படாத ஆட்களைச் சந்திப்பதற்கு மாலைப் பொழுதில் சாட்சிகொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? பகல்வேளையிலும் வார இறுதிநாட்களிலும் வீட்டில் இல்லாத ஆட்கள் பெரும்பாலும் மாலை வேளைகளில் ஓய்வாக இருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
4. சம்பாஷணைக்கான ஒரு பேச்சு பொருளைப் பயன்படுத்தி உங்கள் பிராந்தியத்தை பலமுறை செய்வீர்களானால் உங்கள் முன்னுரையில் நீங்கள் வேறுபடுவது பயனுள்ளதாக இருக்கும். நியாயங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 9-15-ல் பொருத்தமான முன்னுரைகளை நீங்கள் காணலாம். நீங்கள் வெளி ஊழியத்தில் சந்திக்கக்கூடிய ஆட்களிடம் உரையாடலை துவங்குவதற்கு உதவிபெற அவற்றை பயன்படுத்துங்கள்.—நீதி. 1:5.
5. வித்தியாசப்பட்ட முன்னுரையை கொடுப்பதற்கு மற்றொரு வழியானது துண்டுப்பிரதிகளை அளிப்பதாகும். துண்டுப்பிரதியின் பொருளைச் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளுடன் இணையுங்கள். அதோடு அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களின் செய்திகளையும் பயன்படுத்துங்கள். இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து கேள்விகளைக் கேட்பதானது வீட்டுக்காரரின் சிந்தனைகளைத் தூண்டக்கூடும். இவ்வாறாக சிறந்த ஒரு சம்பாஷணைக்கு அஸ்திபாரத்தை அளிக்கக்கூடும்.
எல்லாருக்கும் சாட்சி கொடுத்தல்
6. உங்களுடைய 50 சதவிகிதமான ஊழிய நேரத்தை மறு சந்திப்புகள் செய்வதிலும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதிலும் நீங்கள் செலவிடுகிறீர்களா? அக்கறை காட்டுபவர்களைச் சந்திப்பதற்கு நீங்கள் தனி வீட்டுக்கு வீடு பதிவு சீட்டைக் கொண்டிருங்கள். அப்பொழுது வீட்டில் இல்லாத ஆட்கள் பற்றிய பதிவு சீட்டை அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்யக்கூடியவரிடம் உங்களால் கொடுக்க முடியும், பிரசுரங்களை வாங்கக்கூடிய ஆட்களையும் அதோடு ராஜ்ய செய்தியில் ஆர்வம் காட்டக்கூடிய ஆட்களையும் உடனடியாக திரும்பவும் போய் சந்திப்பதற்கு நிச்சயமாயிருங்கள்.
7. சாட்சி கொடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளுக்கும் நாம் விழிப்புள்ளவர்களாக இருந்தால் நாம் நற்செய்தியை கொண்டும் இன்னும் அதிகமான ஆட்களை எட்ட முடியும். உதாரணமாக, ஒரு பிராந்தியத்தில் ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு செல்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். எங்கெல்லாம் கூடுமோ அல்லது பொருத்தமானதோ அங்கெல்லாம், ஏன் ஒரு சுருக்கமான பத்திரிகை அல்லது துண்டுப்பிரதி அளிப்பை செய்யக்கூடாது?
8. ஒவ்வொரு வாரமும் ஊழியம் செய்யப்படக்கூடிய பிராந்தியங்களிலும்கூட இன்னும் கண்டுபிடிக்கப்படாத நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இருக்கக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களை சந்திப்பதற்கு நாம் பல முறை முயற்சி எடுத்தபோதிலும் அவ்வாறு கண்டுபிடிக்கப்படாத ஆட்கள் இருக்கக்கூடும். முன்பு நீங்கள் அதே வீட்டில் சாட்சி கொடுத்திருந்த போதிலும் இந்த முறை நீங்கள் வேறொரு ஆளை சந்திக்கக்கூடும். ஆகையால், அப்போஸ்தலர்களைப் போன்று நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில் நாம் முழுமையாக சாட்சி கொடுப்போமாக—அப். 8:14, 25; 20:20,21.