நீங்கள் எவ்வாறு நடக்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள்
1. 1990-ம் ஊழிய ஆண்டிற்கான புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல் ஜனவரி 1-க்கு பிறகு துவங்கும். நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதைக் குறித்து கவனமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும், சமாதானத்துக்கடுத்தவைகளை நாடுவதைப் பற்றியும், சாத்தான் மற்றும் ஆவியாட்களும் மனிதரும் அடங்கிய அவனுடைய சேனைகளும் நம்முடைய பாதையின் குறுக்கே வைக்கப்படக்கூடிய அநேக படுகுழிகளை தவிர்ப்பது பற்றியும் வலியுறுத்திக் காட்டும்.
2. நீதிமான் பாதையில் நடப்பது இந்தக் கடைசிநாட்களில் சுலபமானதாக இல்லை. எனவே இரண்டு நாள் வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலானது யெகோவாவின் ஜனங்கள் தங்களுடைய ஆவிக்குரிய சமநிலையையும் உத்தமத்தையும் காத்துக்கொள்வதற்கு உற்சாகமூட்டுதலையும் நடைமுறையான அறிவுரையையும் கொடுக்கும்.
3. “நீங்கள் எவ்வாறு நடக்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள்” என்ற இந்த மாநாட்டு பொருள் எபேசியர் 5:16-ன் பேரில் சார்ந்திருக்கிறது. இது தயாரிக்கப்பட்டுள்ள தகவலைப் படிப்படியாக விளக்குவதற்கும் மற்றும் எடுத்துரைப்பதற்கும் அதி பொருத்தமானதாக இருக்கிறது. பேச்சுகள், நடிப்புகள், அனுபவங்கள், நேர்முக பேட்டிகள் மற்றும் சில நடிப்புகள், அனுபவங்கள், நேர்முக பேட்டிகள், மற்றும் சிறு நடிப்புகள் மூலமாக போதனை கொடுக்கப்படும். சனிக்கிழமையன்று புதிதாக ஒப்புக்கொடுத்துள்ளவர்கள் முழுக்காட்டுதல் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். ஆகையால் இந்த வட்டார மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற திட்டமிடக்கூடியவர்கள் முழுக்காட்டுதலுக்கு முன்பாக சிந்திக்கப்பட வேண்டிய கேள்விகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு போதி அளவுக்கு முன்னதாகவே நடத்தும் கண்காணிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
4. ஒரு வட்டார மாநாட்டில் முக்கிய பேச்சு மாவட்ட கண்காணியால் கொடுக்கப்படும் பொதுப் பேச்சே ஆகும். அவருடைய பேச்சின் பொருள் “இருளான ஓர் உலகில் சுடர்களைத் தாங்கியவர்கள்.” இந்தப் பைபிள் பேச்சு புதிதாக ஆர்வமுள்ள ஆட்களுக்கு இன்றியமையாத தகவலைக் கொண்டிருக்கும். மற்றும் ஏற்கெனவே ராஜ்ய ஊழியர்களாக சேவை செய்துகொண்டிருப்பவர்களுக்கும் உற்சாகமூட்டுதலாக இருக்கும்.—மத். 24:14.
5. எங்கே, எப்பொழுது உங்கள் வட்டார மாநாடு நடக்கும் என்பதை உங்கள் வட்டார கண்காணி உங்களுக்குத் தெரியப்படுத்துவார். இரண்டு நாட்களுக்கும் எல்லா நிகழ்ச்சி நிரலுக்கும் ஆஜராயிருக்க திட்டவட்டமான ஆயத்தங்களை செய்யுங்கள். நிகழ்ச்சிநிரலின் எந்த ஒரு பகுதியையும் இழக்க இயலாது. நீங்கள் எவ்வாறு நடக்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருப்பதற்கு உதவி செய்வதன் மூலம் யெகோவா உங்கள் பிரயாசைகளுக்குப் பலனளிப்பார்.