சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்
1. மே 1977 நம் ராஜ்ய ஊழியம் “சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்” என்ற ஓர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அது எவ்வாறு திறம்பட்ட முறையில் பயன்படுத்தப்படலாம் என்ற யோசனையும் கூறியது. கடந்த 12 ஆண்டுகாலத்தின்போது இந்த அம்சத்திலிருந்து நாம் அனைவரும் நன்மையடைந்திருக்கிறோம். நற்செய்தியை அறிமுகப்படுத்துவதில் தங்கள் திறமையை விருத்திசெய்வதற்கு அது அநேகருக்கு உதவியிருக்கிறது.
2. கடந்த ஒருசில ஆண்டுகளின்போது, புதிய சம்பாஷணைக்குப் பேச்சு பொருளானது ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் வரவிருக்கும் நாட்களில், நம் ராஜ்ய ஊழியம் சிபார்சு செய்யும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை அடிக்கடி மாற்றம் செய்யும். பொதுவாக, பிரசுர அளிப்ப மாறுபடும் ஒவ்வொரு சமயமும் வித்தியாசப்பட்ட பொருள் இருக்கும். இதனால் நாம் நமது பிரசங்கத்துக்கும் பிரசுர அளிப்பிற்கும் இடையில் சுமூகமான இணைப்பைச் செய்வதற்கு உதவும் இது நம்முடைய ஊழியத்துக்குக் கூடுதலான பல்சுவையை கூட்டும்.
சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை மாறிமாறி பயன்படுத்துதல்
3. சாதாரணமாக, அடிப்படையாக சிபார்சு செய்யப்பட்டிருக்கும் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் காணக்கூடும். ஆகிலும் அவசியப்படுமானால் வேறு பொருளின்பேரில் பேசுவதற்கோ வித்தியாசப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்துவதற்கோ எவரும் தயங்கக்கூடாது. புதியவர்களையோ அல்லது இளைஞரையோ பயிற்றுவிக்கும்போது சிபார்சு செய்யப்பட்டிருக்கும் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை நெருங்க பின்பற்றுவது நல்லது.
4. சந்தேகமில்லாமல், பயனியர்களும் தங்கள் பிராந்தியத்தில் அடிக்கடி ஊழியம் செய்யக்கூடியவர்களும் தங்கள் பிரசங்கங்கள் ஒரேவிதமாய் அமைந்துவிடுவதை தவிர்ப்பதற்காக சிபார்சு செய்யப்பட்டுள்ள பலதரப்பட்ட பேச்சுப் பொருளைப் பயன்படுத்துவதை பிரயோஜனமுள்ளதாக காணக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வித்தியாசப்பட்ட சூழ்நிலைமைகளின் காரணமாக நம் ராஜ்ய ஊழியத்தில் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் ஒன்றிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு பேச்சுப்பொருளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
பிரசுரங்களுக்கான பொருளின் ஊற்றுமூலம்
5. சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்தால் பயன்படுத்துவதற்குரிய வேறு பேச்சுப் பொருளை எங்கிருந்து பெறலாம்? நம் ராஜ்ய ஊழியத்தின் கடந்தகால பிரதிகள் பயனுள்ளவையாக இருக்கக்கூடும். நீங்கள் அளிக்கவிருக்கும் பிரசுரமும்கூட உங்கள் சம்பாஷணைக்குரிய பேச்சுப் பொருளின் ஊற்றுமூலமாக பயன்படுத்தப்படலாம். ஒரு படத்தை ஒரு வேதவசனத்தை அல்லது ஓர் அத்தியாயத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். பின்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு சுருக்கமான பிரசங்கம் கொடுங்கள். எதிர்கால வாசகரின் கைகளில் புத்தகத்தை கொடுத்துவிடுங்கள். அப்பொழுது அவரே அதைப் புரட்டிப் பார்ப்பார். இந்த முறையில் புத்தகத்தை விநியோகிப்பது எவ்வளவு சுலபம் என்பதை நீங்கள் காணக்கூடும். பின்னர், மறுசந்திப்பு செய்யும்போது நீங்கள் கூடுதலான விவரங்களைக் கொடுக்கலாம். எனவே முதல் சந்திப்பு பிரசங்கத்தை ஓரளவிற்கு சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்
6. நாம் அனைவரும் யெகோவா தேவனிடம் “கல்விமானின் தந்தருளும்படி” கேட்டுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நம்முடைய பிராந்தியத்தில் நாம் சந்திக்கக்கூடிய ஆட்களுக்கு எப்படிக் கற்பிக்கலாம் என்பதை நாம் அறிந்திருப்போம். (ஏசா. 50:4) சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதே நம்முடைய உள்ளப்பூர்வமான ஆவலாக இருக்கிறது. உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன.—1 தீமோ. 4:16
.