அறிவிப்புகள்
அக்டோபர்: “உயிர்—அதது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா?” நன்கொடை ரூ 30. சிறிய அளவு புத்தகம் ரூ15.
நவம்பர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே ஓராண்டு சந்தா, ஒன்றுக்கு ரூ40. ஆங்கிலத்தில் ஆறுமாத சந்தா, மற்றும் மாத பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தாவின் விலை ரூ20. மாத இதழ்களுக்கு ஆறு மாத சந்தா கிடையாது.
டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அத்துடன் பத்திரிகையளவான புரோஷூரும். பைபிள் எண் 12 (ஒத்துவாக்கிய பைபிள்) பயன்படுத்தப்படுகையில் புரோஷூருடன் சேர்த்து நன்கொடை ரூ43. 1971 அல்லது 1981 பதிப்பு பைபிள் அளிக்கையில், புரோஷூருடன் சேர்த்து அதன் நன்கொடை ரூ38.
ஜனவரி 1990: மெய்ச் சமாதானம் பாதுகாப்பு—நீங்கள் அதை எப்படி கண்டடையலாம்? (மெய்ச் சமாதானம் புத்தகம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கலாம்.
இது முதற்கொண்டு காவற்கோபுரம், விழித்தெழு! கட்டுரைகளைக் கொண்ட புரோஷூர்கள் வெளி ஊழிய அறிக்கைகளில் பத்திரிகைகளாக அறிக்கை செய்யப்பட வேண்டும். ஆகையால் அந்தப் புரோஷூர்களை சபைகள் துணைப்பயனியர்களுக்கு பயனியர் விலையில் கொடுக்கலாம். ஒழுங்கான பயனியர்கள் மற்றும் விசேஷ பயனியர்களுக்குக் கிரெடிட் கேட்பதைப் போன்றே துணைப்பயனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பத்திரிகைகளுக்கான கிரெடிட்டையும் லிட்ரேச்சர் S-20 நமூனாவில் கேட்கலாம். இது இந்தச் சிறந்த பிரசுரங்கள் அதிகப்படியாக விநியோகிக்கப்படுவதில் விளைவடையும்.
இப்பொழுது மராத்தி விழித்தெழு! புரோஷூர்களும்கூட கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. அவைகளையும் வழக்கமான முறையில் ஆர்டர் செய்யலாம்.
பெங்களூர் தமிழ் மாவட்ட மாநாட்டிற்கான தேதி இப்பொழுது டிசம்பர் 15-17, 1989-ற்கு மாற்றப்பட்டிருக்கிறது.