உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 6/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இதே தகவல்
  • மரண தண்டனையை கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • மேலான அதிகாரங்கள் வகிக்கும் பாகம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • கடவுளும் இராயனும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 6/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைக் குறித்து பைபிள் என்ன சுட்டிக்காட்டுகிறது?

வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்ட அனுபவம் அல்லது சூழ்நிலைமையின் அடிப்படையில் நம் ஒவ்வொருவருக்கும் இதன் சம்பந்தமாக தனிப்பட்ட உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளாக, மரண தண்டனையைப் பற்றிய நம்முடைய எண்ணம் கடவுளுடைய எண்ணங்களுக்கு இசைவாக இருக்க நாம் முயற்சிசெய்ய வேண்டும். இந்த விவாதத்தைக் குறித்ததில் பலர் அரசியல் ரீதியாக நிலைநிற்கை எடுக்கிறபோதிலும் நாம் நடுநிலை வகிக்க வேண்டும்.

குறிப்பாக சொல்லப்போனால், கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில், மரண தண்டனை தவறு என்று சொல்லவில்லை.

மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், ஆதியாகமம் 9-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறபடி, இந்த விஷயத்தின் பேரில் யெகோவா தம்முடைய எண்ணங்களை தெரிவித்தார். முழு மனித குடும்பத்திற்கும் மூதாதையர்களான நோவாவின் குடும்பத்தினரை இது உட்படுத்தியது. பேழையிலிருந்து அவர்கள் வெளியே வந்த பிறகு, கடவுள் அவர்களிடம் மிருகங்களைப் புசிக்கலாம்—அதாவது, மிருகங்களைக் கொன்று, அவற்றின் இரத்தத்தை வடித்துவிட்டு புசிக்கலாம்—என்று சொன்னார். பின்பு, ஆதியாகமம் 9:5, 6-ல் கடவுள் சொன்னார்: “உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷரிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷருடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” ஆகவே, கொலைகாரர்களின் விஷயத்தில் மரண தண்டனை விதிக்க யெகோவா அங்கீகாரம் கொடுத்தார்.

கடவுள் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுடன் செயல்தொடர்புகொண்டு வந்தபோது, கடவுளுடைய சட்டத்திற்கு எதிராக செய்யப்பட்ட பல்வேறு விதமான மற்ற பெருங்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எண்ணாகமம் 15:30-ல், பொதுவான இந்தக் கூற்றை நாம் வாசிக்கிறோம்: “தேசத்திலே பிறந்தவர்களாகிலும் அந்நியர்களாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டு போக வேண்டும்.”

ஆனால், கிறிஸ்தவ சபை ஏற்படுத்தப்பட்ட பிறகு என்ன ஆனது? மனித அரசாங்கங்கள் இருக்கும்படி யெகோவா அங்கீகாரம் அளித்து, அவற்றை மேலான அதிகாரங்களாக அவர் அழைத்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால், இப்படிப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கொடுத்த பிறகு, பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவ ஊழியக்காரனாயிருக்கிறான்; நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாய் [இருக்கிறான்].’—ரோமர் 13:1-4.

பெருங்குற்றங்களைச் செய்கிறவர்களை மரணத்திற்கு உட்படுத்துவதற்கும்கூட அரசாங்கங்கள் அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? 1 பேதுரு 4:15-ல் உள்ள வார்த்தைகளிலிருந்து ஆம் என்ற முடிவுக்கு வருவோம். அந்த வசனங்களில் அப்போஸ்தலன் தன்னுடைய சகோதரர்களுக்கு இவ்வாறு புத்திமதி கொடுத்தார்: “உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.” ‘உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது . . . பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது’ என்று சொன்னதை கவனித்தீர்களா? கொலைபாதகன் தன்னுடைய குற்றத்திற்காக பாடனுபவிக்கும்படி செய்வதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையுமில்லை என்று பேதுரு கூறவில்லை. அதற்கு மாறாக, கொலைபாதகன் சரியாகவே தகுந்த தண்டனையைப் பெறக்கூடும் என்பதையே அவர் சுட்டிக்காண்பித்தார். அது மரண தண்டனையையும் உட்படுத்துமா?

உட்படுத்தும். அப்போஸ்தலர் 25-ம் அதிகாரத்தில் காணப்படும் பவுலின் வார்த்தைகளிலிருந்து இது தெளிவாக தெரிகிறது. நியாயப்பிரமாண சட்டத்திற்கு விரோதமான குற்றங்களுக்காக யூதர்கள் பவுலை குற்றஞ்சாட்டி இருந்தார்கள். இராணுவ தளபதி தன்னுடைய கைதியாக இருந்த பவுலை ரோம ஆளுநரிடம் அனுப்புகையில், அப்போஸ்தலர் 23:29-ல் இவ்வாறு அறிக்கை செய்தார்: ‘இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக் குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.’ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதிபதி பெஸ்துவுக்கு முன்பாக பவுல் நிற்கிறார். அப்போஸ்தலர் 25:8-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அதற்கு அவன் [பவுல்] உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.” ஆனால் இப்பொழுது தண்டனைக்குரிய, மரண தண்டனைக்குரிய அவருடைய குறிப்புகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அப்போஸ்தலர் 25:10, 11-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

‘அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர். நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.’

தவறுசெய்தவர்களைத் தண்டிப்பதற்கும், அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கும்கூட இராயனுக்கு உரிமை உண்டு என்பதை, தகுந்த விதத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு முன்பாக நின்றுகொண்டு பவுல் ஒப்புக்கொண்டார். தன்னுடைய விஷயத்தில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கு தண்டனை அளிப்பதைக் குறித்து அந்த அப்போஸ்தலன் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கொலையாளிக்கு மாத்திரம்தான் இராயன் மரண தண்டனையை விதிக்க முடியும் என்றும் சொல்லவில்லை.

ரோம நியாயவிசாரணை முறையில் குறையில்லாமல் இல்லை, இன்றுள்ள நீதிமன்ற முறைகளிலும் குறையில்லாமல் இல்லை என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. ஒருபாவமும் அறியாதவர்கள் சிலர் அன்றும் இன்றும் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுவைக் குறித்து பிலாத்துவும்கூட இவ்வாறு சொன்னார்: “மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே, ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன்.” ஆம், இயேசு ஒரு பாவமும் செய்யவில்லை என்று அரசாங்க அதிகாரி ஒத்துக்கொண்டபோதிலும்கூட, ஒரு பாவமும் செய்யாத இந்த மனிதர் கொலைசெய்யப்பட்டார்.—லூக்கா 23:22-25.

இப்படிப்பட்ட அநீதிகள், அடிப்படையில் மரண தண்டனை நெறிமுறையற்றது என்று பவுலையோ பேதுருவையோ விவாதிக்கும்படி செய்யவில்லை. அதற்குப் பதிலாக, இந்தக் காரியத்தின் பேரில் கடவுளுடைய எண்ணம் என்னவென்றால், இராயனுக்குரிய மேலான அதிகாரங்கள் இருக்கும்வரை, ‘தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, [அவர்கள்] பட்டயத்தைப் பிடித்திருக்கிறார்கள்.’ அது மரண தண்டனை கொடுக்கும் கருத்தில் பட்டயத்தைப் பிரயோகிப்பதையும் உட்படுத்துகிறது. ஆனால், கொலையாளிகளை கொலைசெய்வதற்காக இந்த உலகத்தின் எந்த அரசாங்கமும் அதன் உரிமையை பயன்படுத்த வேண்டுமா என்ற வாக்குவாதத்திற்குரிய கேள்விக்கு வருகையில், உண்மை கிறிஸ்தவர்கள் கவனமாக நடுநிலைமை வகிக்கிறார்கள். கிறிஸ்தவமண்டலத்தின் பாதிரிமாரைப் போலில்லாமல், இந்தப் பொருளின்பேரில் அவர்கள் எந்த வாக்குவாதத்திலிருந்தும் விலகியிருக்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்