‘எஜமானராகிய கிறிஸ்துவுக்கே அடிமைகளாயிருங்கள்’
வரலாறு முழுவதிலுமாக, கோடிக்கணக்கான மக்கள் அடிமைத்தனத்தின் சுமையைச் சகித்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்ரவேலர்கள் எகிப்திய அதிகாரிகளின் கைகளில் பெரும் துன்பப்பட்டார்கள். பைபிள் சொல்கிற விதமாக, ‘இஸ்ரவேலரைச் சுமைசுமக்கிற வேலையினால்,’ குறிப்பாக செங்கற்களை அறுக்கும் வேலையினால், ‘ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்.’—யாத்திராகமம் 1:11.
இன்று அநேக தேசங்களில், மக்கள் சொல்லர்த்தமான கருத்தில் ஒருவேளை அடிமைகளாக இருக்கமாட்டார்கள்; ஆனால் அநேகர் நீண்ட மணிநேரங்களாக அதிக கடினமான வேலைகளை—சில சமயங்களில் வசதி இல்லாத நிலைமைகளில்—செய்ய வேண்டியதாக உள்ளது. பொருளாதார அடிமைத்தனம் என்பதாக அழைக்கப்படக்கூடிய கடினமான சுமையின்கீழ் அவர்கள் இருக்கிறார்கள்.
என்றபோதிலும், சுமையாக இல்லாத ஒரே ஒரு வகையான அடிமைத்தனம் இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் உடன் விசுவாசிகளை இவ்வாறு துரிதப்படுத்தினார்: ‘எஜமானராகிய கிறிஸ்துவுக்கே அடிமைகளாயிருங்கள்.’ (கொலோசெயர் 3:24, NW) கிறிஸ்துவுக்கு அடிமைகளாவதைத் தெரிந்தெடுப்பவர்கள் தங்கள் பாரமான சுமைகளிலிருந்து இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்கள். இயேசுதாமே இவ்விதமாகச் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
கிறிஸ்துவின் நுகத்தை ஏற்றுக்கொள்வது என்பது ஒருவரை அவருடைய குடும்பத்துக்கு தேவையான பொருள் சம்பந்தமான காரியங்களை அளிக்கும் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுவது கிடையாது. (1 தீமோத்தேயு 5:8) என்றபோதிலும், அது பொருளாசைமிக்க நாட்டங்களால் வரும் அநேக சிக்கல்களிலிருந்து நிச்சயமாகவே விடுதலையைக் கொண்டுவருகிறது. பொருளாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வதையே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக கொள்வதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் அடிப்படை தேவைகளில் திருப்தியைக் காண்கிறார்கள்.—1 தீமோத்தேயு 6:6-10; 1 கொரிந்தியர் 7:31-ஐ ஒப்பிடுக.
கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் “நற்செய்தி”யைப் பிரசங்கிக்க வேண்டிய தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுவதிலும்கூட இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்கள். (மத்தேயு 24:14, NW) இது உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் கொண்டுவருகிறது!
‘எஜமானராகிய கிறிஸ்துவுக்கே அடிமைகளாயிரு’ப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்!
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.