“நன்றியறிதலுள்ளவர்களாக உங்களைக் காண்பியுங்கள்”
“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது . . . நன்றியறிதலுள்ளவர்களாக உங்களைக் காண்பியுங்கள்.”—கொலோசெயர் 3:15, NW.
அநேக ஆட்கள் எவ்விதமாக நன்றியுள்ளவர்களாக இருப்பது என்பதை மறந்துவிட்டிருக்கும் ஒரு கட்டத்தை தொல்லைகள் நிறைந்த இந்த 20-ம் நூற்றாண்டு எட்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்து போகையில் “தயவு செய்து”, “உங்களுக்கு நன்றி” போன்ற போற்றுதலுள்ள வார்த்தைகள் மிகக்குறைவாகவே கேட்கப்படுகிறது. நன்றிகெட்ட தன்மையானது இந்த உலகிலுள்ள ஜனங்களின் மீது செல்வாக்கு செலுத்திவரும் சுயநலமான ஆவியாகிய “அந்தக் காற்றின்” பாகமாக ஆகிவிட்டிருக்கிறது. (எபேசியர் 2:1, 2) கிறிஸ்தவர்கள் “உலகத்தாரல்லாத”வர்களாக இருந்தபோதிலும், தற்போதைய காரிய ஒழுங்கு நீடித்திருக்கும் வரையாக அதில் அவர்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். (யோவான் 17:11, 16) ஆகவே இந்த நன்றிகெட்ட ஆவி அவர்களையும் பாதித்து அவர்களுடைய நன்றியறிதலை குறைத்துவிடாதபடிக்கு அவர்கள் கவனமாயிருக்க வேண்டும்.
2 கடவுளுடைய நற்குணத்துக்கான போற்றுதல் உடன் விசுவாசிகளுடன் உரையாடுகையில் வெளிப்படுத்தப்படக்கூடும். ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ஜெபத்தில் ஒருவேளை ஒரு நாளில் பலதடவைகள் தங்கள் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு அவருடைய நற்குணத்துக்காக நன்றி செலுத்தக்கூடும். சபையில் செய்யப்படும் ஜெபங்களிலும் கிறிஸ்தவ கூட்டங்களில் பாடப்படும் ராஜ்யப் பாடல்களிலும்கூட நன்றியறிதல் வெளிக்காட்டப்படுகிறது. நிச்சயமாகவே ஒப்பிடும்போது, நன்றியறிதலை வார்த்தைகளில் வெளியிடுவது சுலபமான காரியமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயிலிருந்த தன்னுடைய சகோதரர்களை அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதாக வெறுமென சொல்வதோடில்லாமல் அவர்களுடைய நன்றியறிதலை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் காண்பிக்கும்படியாக அல்லது நிரூபிக்கும்படியாகவும் கூட உற்சாகப்படுத்தினான். அவன் எழுதினான்: “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். நன்றியறிதலுள்ளவர்களாக உங்களைக் காண்பியுங்கள்.”—கொலோசெயர் 3:15, NW.
நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு நிறைவான காரணம்
3 உயிரோடிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் பிரதானமானது ஜீவனை அனுபவிப்பதே ஆகும். ஏனென்றால் நாம் நம்முடைய ஜீவனை இழந்துவிடுவோமேயானால் நமக்கிருப்பதும் அல்லது நாம் திட்டமிடும் அனைத்துமே மதிப்பற்றவையாகிவிடும். சங்கீதக்காரனாகிய தாவீது “ஜீவ ஊற்று உம்மிடத்தில் [யெகோவா தேவன்] இருக்கிறது” என்பதை நினைவுக்கூரும்படி எல்லா மனிதர்களையும் துரிதப்படுத்தினான். (சங்கீதம் 36:9) அப்போஸ்தலனாகிய பவுலும்கூட மார்ஸ் மேடையில் பேசுகையில் அதே நித்திய சத்தியத்தை தானே அத்தேனே பட்டணத்தாருக்கு நினைவுபடுத்தினான். (அப்போஸ்தலர் 17:28) ஆம், உயிரோடிருப்பதுதானே நன்றியுள்ளவர்களாயிருக்க நிறைவான காரணமாயிருக்கிறது. நாம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள சிருஷ்டிப்பின் கண்ணுக்கினிய காட்சிகளையும் அனுபவிக்கும் பொருட்டு கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை—சுவை, தொடுதல் உணர்வு, நுகர்வது, பார்வை மற்றும் கேட்பது போன்ற உணர்ச்சிகளை நாம் சிந்திக்கையில் நம்முடைய மதித்துணர்வு அதிகமாகிறது.
4 இருந்த போதிலும் அநேகர் இந்த நல்ல காரியங்களை பொது நிகழ்ச்சிகளாக எடுத்துக் கொள்கின்றனர். கண் பார்வை அல்லது கேட்டு உணரும் திறமை போன்ற ஒரு திறமையை இழந்துவிடும் போது தானே அநேகர் தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கையில் மதித்துணர தவறிய ஆசீர்வாதங்களை உணருகிறார்கள். ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் இதுபோன்ற போற்றுதல் இல்லாத ஒரு போக்கிற்குள் சென்றுவிடாதபடி எப்போதும் கவனமுள்ளவர்களாயிருப்பது அவசியமாகும். பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரன் காண்பித்த அதே நன்றியறிதலான மனநிலையை காத்துக் கொள்ள அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்: “என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்கள் நிமித்தஞ் செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்ல முடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.”—சங்கீதம் 40:5.
5 சங்கீதம் 106-ம் அதிகாரம் யெகோவா தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் சார்பாக செய்த வல்லமையான செயல்களின் சுருக்கத்தை கவிதை நடையில் கொடுக்கிறது. கடவுள் அவர்களோடு கொண்டிருந்த செயல்தொடர்புகள் மனிதவர்க்கத்துக்கு பொதுவாக அவர் செய்திருக்கும் நன்மைகளோடும் இயற்கையான ஆசீர்வாதங்களோடும்கூட கூடுதலானவையாக இருந்தன. ஆனால் இந்த அனுகூலங்களின் மத்தியில் இஸ்ரவேலர் அவர்களுடைய ஈடிணையற்ற ஆசீர்வாதங்களுக்காக தொடர்ந்து போற்றுதலை காண்பிக்கவில்லை என்பதாக சங்கீதக்காரன் சுட்டிக் காண்பிக்கிறான். வசனம் 13 சொல்லுகிறது: “ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.” இல்லை, காலம் கடந்து சென்றதானது அவர்களுடைய நன்றியறிதலை படிப்படியாக குறைத்துவிடவில்லை. பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடவுள் அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அவர்கள் மறந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் சீக்கிரமாய்—சிவந்த சமுத்திரத்தில் அவர்களின் சார்பாக யெகோவா நடப்பித்திருந்த அந்தக் குறிப்பிடத்தக்க அற்புதங்கள் நடந்து சில வாரங்களுக்குள்ளே அவர்கள் மறந்து போனார்கள். (யாத்திராகமம் 16:1–3) விசனகரமாக, நன்றிக்கெட்ட தன்மையானது அவர்களுடைய வாழ்க்கையில் வழக்கமான நடத்தையாக ஆனதை எதிர்கால சம்பவங்கள் காண்பித்தன.
நன்றியறிதலை காண்பிப்பது எப்படி
6 இஸ்ரவேலர் தம்முடைய நற்குணத்துக்காக உண்மையான போற்றுதலைக் காண்பிக்க மூன்று திட்டவட்டமான வழிகளை யெகோவா விளக்கமாக விவரித்திருந்தார். அதில் ஒன்று, விளைச்சலிலும் கால்நடைகளிலும் யெகோவாவுக்குப் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதன் மூலம் தசம பாக ஏற்பாட்டை கடைப்பிடிப்பதாக இருந்தது. (லேவியராகமம் 27:30–32) இது சுமையாக இருக்காது. ஏனென்றால் சூரியனுக்கும், வளமான மண்ணுக்கும், மழைக்கும், வளர்ச்சி என்ற வியப்புக்குரிய காரியத்துக்கும் கடவுள் பொறுப்புள்ளவராக இருந்தார். ஆகவே யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரியர்களிடம் பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பது யெகோவாவுக்குத் தானே நன்றியறிதலை காண்பிக்கும் ஒரு செயலாக இருந்தது.
7 மற்றொரு தேவை ஒவ்வொரு தனிப்பட்ட இஸ்ரவேலனின் இருதய மனநிலையால் தீர்மானிக்கப்படும் ஒரு தொகையை கடவுளுக்கு நன்கொடையாக செலுத்துவதாக இருந்தது. குறிப்பிட்ட ஒரு தொகை நிர்ணயிக்கப்படாவிட்டாலும் நன்கொடைகள் முதற்பலன்களாக இருக்க வேண்டியதாக இருந்தன—தானியத்தில், திராட்சரசத்தில், ஆட்டுரோமத்தில் முதற்பலன். (எண்ணாகமம் 15:17–21; உபாகமம் 18:4) மேலுமாக, யெகோவா தம்முடைய ஜனங்கள், ‘தாமதிக்காமலும்’ “முதல் விளைச்சல்களில் முதற்கனியை” கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்திருந்தார். (யாத்திராகமம் 22:29; 23:19) இது யெகோவாவுக்கு தங்கள் நன்றியறிதலை தெளிவான ஒரு வழியில் காண்பிப்பதற்கு இஸ்ரவேலருக்கு வாய்ப்புகளை கொடுத்தது. அவர்கள் அளிக்கும் நன்கொடைகளின் அளவின் மூலமாக அவர்கள் தங்களுடைய நன்றியறிதலின் ஆழத்தை வெளிப்படுத்தக்கூடும். அவர்கள் ஒரே ஒரு குலை திராட்சப்பழங்களை நன்கொடையாக அளிப்பார்களா? அல்லது தாராளமான ஓர் இருதயம் ஒரு முழு கூடையை அளிக்கும்படியாக அவர்களை தூண்டுமா? இவ்விதமாக ஒவ்வொரு நபரும் அல்லது குடும்பமும் எந்தவித கட்டாயப்படுத்துதலுமின்றி நன்றியறிதலை காட்டமுடியும்.
8 நன்றியறிதலை காட்டுவதற்கு மூன்றாவது திட்டவட்டமான வழியானது அறுப்புக்கான கடவுளுடைய ஏற்பாட்டோடு சம்பந்தப்பட்டதாயிருந்தது. அறுவடைக் காலத்தில், வயலின் ஒரு சிலப் பகுதிகள் அறுக்கப்படாமல் எளியவர்களுக்காக விடப்படவேண்டியதாக இருந்தது. இது எளியவர்களுக்கு இரக்கத்தையும் கரிசனையையும் காண்பிப்பதை கற்பித்ததோடில்லாமல், அவர்களுடைய பங்கில் விநியோகம் செய்கையில் ஏற்படக்கூடிய ஊழல் தொடர்ந்து இல்லாமலிருப்பதையும்கூட இது நிச்சயப்படுத்திக் கொண்டது. (லேவியராகமம் 19:9, 10) ஆனால் எளியவர்களுக்கு எவ்வளவு விடப்படவேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இஸ்ரவேல விவசாயிகள் அவர்களுடைய வயலின் ஓரத்தில் அதிகமான பயிரை அறுக்காமல் விட்டுவைப்பதன் மூலம் உதாரகுணத்தைக் காண்பித்து இவ்விதமாக எளியவனுக்குத் தயை காண்பிப்பார்களேயானால் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள். (நீதிமொழிகள் 14:31) ஆகவே குறுகிய ஒரு பகுதியையா அல்லது அகலமான பகுதியையா அறுக்காமல் விட்டுவிடுவது என்பதை தீர்மானிப்பது அவர்களுக்கே விடப்பட்டது. ஆனால், வயலில் அறுக்க மறந்து போன ஓர் அரிக்கட்டு அல்லது ஒரு மரத்தில் அல்லது திராட்சத்தோட்டத்தில் கொம்பிலே தப்பியிருக்கும் பழங்கள் கதிர் பொறுக்குகிறவர்களுக்காகவிடப் படவேண்டும் என்பதாக கட்டளையிடுவதன் மூலம் உதார குணத்துக்கு உறுதியான உத்தரவுகளை கடவுள் கொடுத்தார். (உபாகமம் 24:19–22) கைமாறாக, கதிர் பொறுக்குகிறவர்கள் அவர்கள் பொறுக்கியதில் பத்தில் ஒரு பங்கை அவருடைய வணக்கத்துக்குரிய இடத்தில் செலுத்துவதன் மூலம் இந்த ஏற்பாட்டுக்காக யெகோவாவுக்குத் தங்களுடைய சொந்த நன்றியறிதலை காண்பிக்கலாம்.
இருதயத்தின் உதாரகுணம்
9 இஸ்ரவேலர் தாராளமாக காணிக்கைகளைச் செலுத்துவார்களேயானால் யெகோவாவின் ஆசீர்வாதம் அவர்களுடைய வீடுகளின் மேல் தங்கியிருக்கும். (எசேக்கியேல் 44:30; மல்கியா 3:10 ஒப்பிடவும்.) ஆனால் மிகுதியான அறுவடையின் மத்தியிலும் அடிக்கடி காணிக்கைகளை செலுத்த அவர்கள் தவறினார்கள். பின்னர் கடவுள் அவர்களுடைய நன்றியறிதலை மீண்டும் எழுப்புவதற்காக ராஜாக்கள் அல்லது தீர்க்கதரிசிகள் மூலமாக நினைப்பூட்டுதல்களைப் பயன்படுத்தினார். உண்மையில் சுயநலவாதிகளாயிருந்த இஸ்ரவேலரே இழப்பை அனுபவித்தார்கள். ஏனென்றால், யெகோவா அவருடைய வணக்கத்தோடு அல்லது எளியவர்களோடு சம்பந்தப்பட்ட நன்கொடைகளை கொடுக்க மறுப்பவர்களை ஆசீர்வதிக்கமுடியாது.
10 ஒரு சமயம் எசேக்கியா ராஜாவின் நினைப்பூட்டுதல்கள், எருசலேமில் 14-நாள் கொண்டாட்டத்தில் விளைவடைந்தது. முதலாவதாக, அவர்கள் விக்கிரக வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழித்து, பின்னர் “குவியல் குவியலாக வைத்தார்கள் . . . எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து அந்தக் குவியல்களைக் காணும் போது யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலை புகழ்ந்தார்கள்.” (2 நாளாகமம் 30:1, 21–23; 31:1, 6–8) ஆனால் விசனகரமாக, இடைஇடையே அவர்கள் மறந்ததை இப்படியாக நினைவுக்குக் கொண்டுவந்த சமயங்களுக்குப் பிறகு, ஜனங்கள் நன்றிகெட்ட பழைய நிலைக்குச் சென்றுவிட்டார்கள். கடைசியாக, கடவுளுடைய பொறுமை முடிவுக்கு வந்தபோது, அவர் தம்முடைய ஜனங்கள் பாபிலோனுக்குக் கைதிகளாக கொண்டு செல்லப்படுவதை அனுமதித்தார். அவர்களுடைய நகரமும் அழகான ஆலயமும் அழிக்கப்பட்டன. (2 நாளாகமம் 36:17–21) பின்னால், திரும்ப நிலைநாட்டப்பட்டபின்பு மறுபடியுமாக நிலைமை அத்தனைக் கவலைக்குரியதாக ஆனதால் யெகோவா யூதர்களின் கஞ்சத்தனத்தை, அவரிடமிருந்து திருடுவதற்கு, வஞ்சிப்பதற்கு ஒப்பிட்டுப் பேசினார்!—மல்கியா 3:8.
11 இஸ்ரவேலரின் ஏறுமாறான சரித்திரத்திலிருந்து என்ன நியமங்களைக் கற்றுக் கொள்ளலாம்? இதுவே: நன்றியுணர்வு அவர்களுடைய இருதயங்களில் பலமாக இருந்தவரையில், இதை அவர்கள் யெகோவாவுக்குக் “குவியல் குவியலாக”க் கொண்டுவருவதன் மூலம், சந்தோஷமாக செயல்களில் காட்டினார்கள். ஆனால் நன்றி மறக்கப்பட்டபோது அல்லது அது மிகவும் தாழ்ந்துவிட்டபோது பொருள் சம்பந்தமான காரியங்களைக் கொடுப்பது உண்மையில் நின்றே போனது. இப்படிப்பட்ட ஒரு மோசமான மனநிலையை ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் இன்று காண்பிக்கமுடியுமா? ஆம். ஏனென்றால் மனித அபூரணம் இன்னும் நம்மிடத்தில் இருக்கிறது. இந்தக் காரிய ஒழுங்கின் முடிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கற்று அவைகளிலிருந்து பயனடையும் பொருட்டு கடவுள் இஸ்ரவேலரோடு கொண்டிருந்த செயல்தொடர்புகளை பதிவு செய்திருப்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம்!—ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11.
12 இஸ்ரவேலரைப் போலவே, இன்று யெகோவாவின் ஜனங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. நாமும்கூட நம்முடைய உடன் மானிடர்கள் அனுபவிப்பதைக் காட்டிலும் அதிகமான ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறோம். உண்மையில், இஸ்ரவேல் ஜனங்களைக் காட்டிலும் யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி நாம் அதிகத்தை தெரிந்தவர்களாக இருக்கிறோம். கடவுள் எவ்விதமாக மனமுவந்து தம்முடைய குமாரனை பலியாகச் செலுத்தினார் என்பதை நாம் கற்றறிந்திருக்கிறோம். தெய்வீக அங்கீகாரம் பெற்றவர்களுக்கு இது கொண்டுவரக்கூடிய ஆசீர்வாதங்களைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். மேலுமாக, இன்று ஓர் ஆவிக்குரிய பரதீஸில் இருப்பதற்கு நாம் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் 1919 முதற்கொண்டு யெகோவா தம்முடைய மக்களுக்காக ஒரு மகத்தான ஆவிக்குரிய நிலைமையை உருவாக்கியிருக்கிறார். ஆம், யெகோவாவின் சாட்சிகள் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க அநேக கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. ஆகவே நாம் நம்மை பின்வருமாறு கேட்டுக் கொள்வது அவசியமாகும்: கடவுளுக்கு நம்முடைய நன்றியறிதல் எவ்வளவு ஆழமாக உள்ளது? இந்த 20-ம் நூற்றாண்டில் நாம் எவ்விதமாக நம்மை நன்றியுள்ளவர்களாக காண்பிக்கலாம்?
நவீன–நாளைய இணைப்பொருத்தங்கள்
13 கடவுளுக்கு எவ்விதமாக நன்றியறிதலைக் காண்பிப்பது என்பதை குறிப்பாக தெரிவித்த மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் கீழ் கிறிஸ்தவர்கள் இல்லை. (கலாத்தியர் 3:24, 25) யெகோவாவுக்கு நம்முடைய “ஸ்தோத்திர பலி அவருடைய நாமத்தை துதிக்கும் உதடுகளின் கனியாக” இருக்கிறது. (எபிரெயர் 13:15) அப்படியென்றால் ஒப்புக் கொடுத்த கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு நன்றியறிதலைக் காண்பிக்க இதுவே முக்கியமான ஒரு வழியாக இருக்கிறது. ஆனால் தசம பாகம், நன்கொடைகள் மற்றும் அறுப்பு சம்பந்தமான சட்டங்களிலிருந்து அக்கறையைத் தூண்டும் இணைப்பொருத்தங்களை காணமுடியும்.
14 தசம பாகம் என்பது பத்தில் ஒரு பாகம் என்ற குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுப்பதாக இருந்தது. இதில் விருப்பம் என்ற ஒன்றுக்கு இடமில்லை. அதேவிதமாகவே, இன்று விருப்பங்கள் என்பதற்கு இடமில்லாமல், யெகோவாவின் ஊழியர்கள் அனைவர் மீதும் தங்கியிருக்கும் திட்டவட்டமான சட்டங்கள் இருக்கின்றன. நாம் ஒழுங்காக ஒன்றுகூடி வரவேண்டியவர்களாகவும், யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை வெளியரங்கமாக பிரசங்கித்து கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.—எபிரெயர் 10:24, 25; மத்தேயு 24:14; 28:19, 20.
15 நன்கொடைகள் மற்றும் அறுப்பு ஏற்பாடுகளையும்கூட நினைவில் கொள்ளுங்கள். குறிப்பிட்ட தொகை தனிப்பட வற்புறுத்தப்படவில்லை. அதேவிதமாகவே வேதாகமம் பரிசுத்த சேவையில் ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் திட்டவட்டமாக செலவிட வேண்டிய மணிநேரங்களைப் பற்றி குறிப்பாகச் சொல்வதில்லை. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் அதை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கும் அர்ப்பணிக்கப்படும் நேரம், உதாரகுணமுள்ள, சுயநலமற்ற இருதயங்களின் தூண்டுதலுக்கு விடப்பட்டிருக்கிறது. அதேவிதமாக ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கான பொருள் சம்பந்தப்பட்ட நன்கொடைகளின் அளவும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் இருதய தூண்டுதலுக்கு விடப்படுகிறது. நன்றியறிதலின் ஆழமானது கடவுளுடைய ஊழியர்களில் ஒருவர் “குவியல் குவியலாக”வா அல்லது சமாளிப்பதற்கு வெறுமென போதுமானதையா கொண்டுவருவார் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். (2 நாளாகமம் 31:6) ஆனால் இஸ்ரவேலரின் விஷயத்திலிருந்தது போலவே ஒருவருடைய நன்றியறிதலின் வெளிக்காட்டுதல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிக அபரிமிதமான ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
நன்றியறிதலை காண்பிப்பதற்கான வழிகள்
16 யெகோவாவுக்கு நன்றியறிதலைக் காண்பிப்பதற்கு மிகப் பிரதானமான நேரடியான வழிகளில் ஒன்று முழு நேர ஊழியத்தில் ஈடுபடுவதாகும். உங்கள் இருதயம் அந்த ஆவலைக் கொண்டிருப்பதற்கு உங்கள் நன்றியறிதல் போதுமான அளவு உயர்ந்ததாக இருக்கிறதா? ஒரு வெற்றிகரமான பயனியருக்குச் சேவிப்பதற்கு முதலாவதாக ஆசையும் பின்னர் சரியான சூழ்நிலைமைகளும் அவசியம் என்பது நன்றாக கவனிக்கப்பட்டிருக்கிறது. நன்றியறிதல் பலமானதாக இருக்கையில் கடவுளை இன்னும் அதிக முழுமையாக சேவிப்பதற்கான உந்துவிக்கும் ஆசை போற்றுதலுள்ள ஓர் இருதயத்தில் பொங்கி வழிகிறது. நீங்கள் அவ்விதமாக உணருகிறீர்களா? உங்களுடைய தற்போதைய சூழ்நிலைமையானது முழு நேர ஊழியத்தில் நீங்கள் பங்கு கொள்வதை தடை செய்தாலும்கூட, இது பயனியர் ஆவியை தணித்துவிட வேண்டிய அவசியமில்லை. பயனியர்களுக்கு நீங்கள் இருதயப் பூர்வமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் கொடுக்கலாம்.
17 இப்பொழுது உங்களால் பயனியர் ஊழியம் செய்ய முடியாவிட்டாலும் அவ்வப்போது நீங்கள் துணைப்பயனியராக சேவிக்க முடியுமா? ஒவ்வொரு ஆண்டும் பிரசங்க வேலையில் வழக்கமானதைவிட அதிகமான முயற்சியை கிறிஸ்தவ சபை ஊக்குவிக்கும் விசேஷித்த சமயங்கள் உண்டு. உதாரணமாக கோடை கால மாதங்கள், அநேகருக்கு மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. அக்டோபர் மாதத்தில், விசேஷித்த பத்திரிகை சந்தாவின் சம்பந்தமாக கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசுத்த சேவைக்குக் கூடுதலான நேரத்தின் சம்பந்தமாக, நன்றியறிதலானது தாராளமாக கொடுக்கச் செய்கிறது என்ற நியமம் உண்மையாகவே பொருந்துகிறது.
18 நன்றியறிதலைக் காண்பிப்பதற்கு மற்றொரு திட்டவட்டமான வழி, பூமி முழுவதிலும் நடைபெறும் தேவராஜ்ய கட்டிட வேலையை ஆதரிப்பதன் மூலமாகும். அநேக தேசங்களில், புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டுவருகின்றன. ஜனப் பெருக்கத்தின் காரணமாக இருக்கின்ற மன்றங்கள் பெரிதாக்கப்பட்டு வருகின்றன. புதிய அசெம்ளி மன்றங்கள் கட்டப்பட்டுவருகின்றன. பெத்தேல் வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பழைய கட்டிடங்களோடு புதிய கட்டிடங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிட வேலைகளை கவனித்துக் கொள்வதற்காக உழைப்பை அல்லது நிதி உதவியைக் கொடுப்பது, யெகோவாவுக்கு நம்முடைய நன்றியறிதலைக் காண்பிப்பதற்கு நடைமுறையான ஒரு வழியாகும்!
ஏழை விதவையின் சிறந்த முன்மாதிரி
19 தாராளமாக பொருள் சம்பந்தமாகக் கொடுப்பதன் மூலம் நன்றியறிதலைக் காண்பிப்பதற்கு நன்கு அறியப்பட்ட பைபிள் முன்மாதிரி, இயேசுவால் விவரிக்கப்பட்ட விதவையாவாள். (லூக்கா 21:1–4) அத்தனை மிகக்குறைந்த மதிப்புள்ள அவளுடைய இரண்டு காசுகள், ஆலயத்தின் கட்டிடத்துக்கோ அங்கு சேவை செய்தவர்களுக்கோ எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஆலயத்தையும் அங்கு சேவித்து வந்த ஆசாரியர்களையும் பார்த்துவிட்டு ‘அவர்கள் என்னைவிட எவ்வளவோ மேன்மையாக வாழ்கிறார்கள். என்னுடைய எளிய வீட்டைக் காட்டிலும் மேன்மையான கட்டிடம் அவர்களுக்கிருக்கிறது’ என்று தனக்குத்தானே சிந்தித்துக் கொள்ளவில்லை. ஆம், ஆலயம் அதிக ஆடம்பரமாகவும் அழகாகவும் இருந்தது: “சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.” (லூக்கா 21:5) ஆனால் இது காணிக்கை செலுத்துவதிலிருந்து அந்த விதவையை தடை செய்யவில்லை. ஆலயத்தில் சேவை செய்து வந்த அந்த மனிதர்களுக்கல்ல, ஆனால் யெகோவாவுக்கு தன்னுடைய நன்றியறிதலைக் காண்பிக்க அவள் விரும்பினாள்.
20 யெகோவாவின் ஜனங்கள் இன்று இந்த முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள். ஏழை விதவையைப் போலவே, அவர்கள் செலுத்தும் நன்கொடைகள் பெரிய தொகையாக இருந்தாலும் அல்லது சிறிய தொகையாக இருந்தாலும் அவை கடவுளுக்குக் கொடுக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பானது, எந்தத் தனி ஒரு நபரும் ஒருபோதும் பொருள் சம்பந்தப்பட்ட ஆதாயத்தை பெற்றுக் கொள்ள முடியாதபடிக்கு அமைக்கப்பட்டிருப்பதை அறிவதன் மூலம் அவர்கள் மீண்டும் உறுதியளிக்கப்படுகிறார்கள். தரமான பைபிள்களையும் பைபிள் உதவி பிரசுரங்களையும் உற்பத்தி செய்வதற்கும், ராஜ்ய அக்கறைகளை சேவிப்பதிலும் உச்ச அளவு பலன்களைப் பெறுவதற்காக கடினமாக உழைப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சங்கத்தின் கட்டிடங்கள் கட்டப்பட்டு இயங்கிவருகின்றன. இது, ஒரு சில டெலிவிஷன் பிரசங்கிமார்கள் நன்கொடையாக அளிக்கப்பட்ட பணத்தை தவறாக கையாடல் செய்ததுப் பற்றி அண்மையில் வெளியான அறிக்கைக்குக் குறிப்பிடத்தக்க வகையில் நேர் எதிர்மாறாக உள்ளது.
நன்றியறிதலைக் காண்பிக்க நினைப்பூட்டுதல்கள் பிரயோஜனமானவை
21 இஸ்ரவேலர்களுக்கு யெகோவாவிடமாக அவர்களுடைய கடமையை, விசேஷமாக நன்றியறிதலான ஆவியை வெளிக்காட்டுவதற்கான தேவையைக்குறித்து இடைவிடாமல் நினைப்பூட்டப்படுவது அவசியமாயிருந்தது. பொதுவாக இந்த விஷயங்கள் அவர்களுடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, நன்றியறிதலானது அவர்களுடைய இருதயங்களில் புதிதாக தூண்டப்பட, இது அவர்கள் தங்களுடைய நன்றியறிதலான போற்றுதலை வார்த்தைகளுக்கு மேலாக வெளியிடுவதில் விளைவடைந்தது. அவர்கள் அவருடைய வணக்கத்துக்குரிய வீட்டில் விளைச்சலில் யெகோவாவுக்குக் “குவியல் குவியலாக” கொண்டுவர மனமுள்ளவர்களாக இருந்தார்கள்.
22 ஆகவே நவீன நாளைய “தேவனுடைய இஸ்ரவேலரை”ச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளான “திரளான கூட்டமாகிய ஜனங்களும்” எப்போதும் அதேவிதமாகவே உணருவார்களாக. (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:9) அவர்களுடைய நன்றியறிதலான இருதயங்கள் யெகோவாவுக்குக் “குவியல் குவியலான” துதிகளை ஏறெடுக்க அவர்களை தூண்டுவதாக. அப்பொழுது அவர்கள் உண்மையில் “உதார குணமும் அன்புள்ளவருமான தேவனாகிய யெகோவாவுக்கு நாங்கள்
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடைய நன்றியறிதலின் அளவை இடைவிடாமல் சரிபார்த்துக் கொண்டிருப்பது அவசியமாக இருக்கிறது?
◻ யெகோவாவின் ஜனங்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க ஏன் எப்பொழுதும் கூடுதலான காரணமிருந்திருக்கிறது?
◻ என்ன திட்டவட்டமான வழிகளில் இஸ்ரவேலர் தங்கள் நன்றியறிதலைக் காண்பிக்கக்கூடும்?
◻ இஸ்ரவேலரைப் போல, நன்றியறிதலை வெளிக்காட்ட நாம் என்ன திட்டவட்டமான காரியங்களைச் செய்யலாம்?
◻ ஆலயத்தில் ஏழை விதவையிடமிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ளலாம்?
[கேள்விகள்]
1. நன்றிகெட்ட இந்த உலகத்தில், கிறிஸ்தவர்கள் எதற்கு எதிராக எச்சரிப்பாயிருக்க வேண்டும்?
2. (எ) யெகோவாவின் ஊழியர்கள் அவருக்கு நன்றியறிதலை தெரிவிக்க சில வழிகள் யாவை? (பி) வெறுமென வாயால் நன்றி சொல்வதைக் காட்டிலும் எது தேவைப்படுகிறது?
3. நாம் அனைவருமே ஏன் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
4. வாழ்க்கையின் ஆசீர்வாதங்களை பொது நிகழ்ச்சிகளாக எடுத்துக் கொள்வதிலிருந்து எது நம்மைப் பாதுகாக்கும்?
5. யெகோவாவிடமிருந்து இஸ்ரவேலர் அனுபவித்த கூடுதலான ஆசீர்வாதங்களின் மத்தியிலும், என்ன வெட்கக்கேடான போக்கை அவர்கள் தொடர்ந்தார்கள்?
6. தசமபாகம் கேட்கப்பட்டது ஏன் ஒரு சுமையாக இல்லை?
7. (எ) தசமபாகத்துக்கும் யெகோவாவுக்கு நன்கொடையை ஏறெடுப்பதற்குமிடையே என்ன முக்கியமான வித்தியாசமிருந்தது? (பி) இது இஸ்ரவேலர்கள் தங்களைப் பற்றி என்ன வெளிப்படுத்துவதை அனுமதித்தது?
8. (எ) கதிர் பொறுக்கும் ஏற்பாட்டில், என்ன இரண்டு நன்மைகள் இருந்தன? (பி) கதிர் பொறுக்கும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் எவ்விதமாக உதாரகுணத்தையும் நன்றியறிதலையும் காண்பிக்கலாம்?
9. சுயநலமான ஆவியை வெளிகாட்டியவர்கள் உண்மையில் தங்களுக்கே ஏன் தீங்கிழைத்துக் கொண்டார்கள்?
10. (எ) நன்றியறிதலைப் பற்றிய எசேக்கியா ராஜாவின் நினைப்பூட்டுதல்களின் மகிழ்ச்சியான விளைவுகள் யாவை? (பி) இந்த நிலைமைகள் நீடித்தனவா?
11. இஸ்ரவேலின் சரித்திரத்திலிருந்து கற்றுக் கொண்ட என்ன நியமங்கள், இந்தக் காலத்தில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?
12. (எ) யெகோவாவின் மக்கள் இன்று எவ்விதமாக இஸ்ரவேலர்கள் இருந்த அதேப் போன்ற ஒரு நிலைமையில் இருக்கிறார்கள்? (பி) நாம் என்ன கேள்விகளை கேட்பது அவசியமாயிருக்கிறது?
13, 14. கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாவிட்டாலும், தசமபாகச் சட்டத்திலிருந்து ஏதாவது இணைப்பொருத்தங்களை காணமுடியுமா?
15. நவீன காலங்களில் உதார குணமுள்ள இருதயங்களின் என்ன வெளிக்காட்டல்கள், பூர்வ இஸ்ரவேலில் நன்கொடைகளாலும் கதிர் பொறுக்கும் ஏற்பாடுகளாலும் வெளிப்படுத்தப்பட்டதோடு இணைப்பொருத்தமுள்ளதாக இருக்கின்றன?
16–18. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் என்ன திட்டவட்டமான முறைகளில் தங்களை நன்றியறிதலுள்ளவர்களாக காண்பிக்கலாம்?
19. ஆலயத்தில் அந்த ஏழை விதவையைப் பற்றியதில் உங்களை வெகுவாக கவருவது என்ன?
20. ஏழை விதவைக் காண்பித்த அதே மெச்சத்தக்க மனநிலையை நாம் எவ்விதமாகக் காட்டக்கூடும்?
21, 22. போற்றுதலுள்ள இருதயங்களிலிருந்து நன்றியறிதலை வெளிவரும்படிச் செய்யும் தயவான நினைப்பூட்டுதல்கள் நம்மீது என்ன பாதிப்புடையதாக இருக்க வேண்டும்?
நன்றியறிதலுள்ளவர்களாய் எங்களைக் காண்பிக்கிறோம்” என்று சொல்லலாம். (w88 7⁄1)
[பக்கம் 18-ன் படம்]
இஸ்ரவேலர் தசமபாகத்தையும் முதற்கனிகளையும் செலுத்துவதன் மூலமும், எளியவர்கள் தங்கள் வயல்களில் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள ஏற்பாடு செய்வதன் மூலமும் நன்றியறிதலைக் காண்பித்தார்கள்.
[பக்கம் 19-ன் படம்]
சங்கீதக்காரன் யெகோவாவுக்கு அவருடைய அதிசயமான கிரியைகளுக்காகவும் தம்முடைய ஜனங்களிடமாக அவருடைய யோசனைக்காகவும் நன்றி செலுத்தினான்
[பக்கம் 20-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் இன்று வெளி ஊழியத்திலும் தேவராஜ்ய கட்டிட வேலைகளிலும் பங்கு கொள்வதன் மூலமும், பொருள் சம்பந்தப்பட்ட நன்கொடைகளை வழங்குவதன் மூலமும் நன்றியறிதலைக் காண்பிக்கிறார்கள்