நன்றியுள்ளவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
இந்தப் பத்திரிகையின் முன் அட்டையைப் பாருங்கள். நிச்சயமாகவே, எல்லா இடங்களிலும் காணப்படும் அழுக்கடைந்த தோற்றத்தையும் அருவருப்பான தோற்றத்தையும் ஈடு செய்ய அநேக அழகான காரியங்கள் உண்டு என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.
அழகான காரியங்களை நீங்கள் போற்றுகிறீர்களா? புயலின் இருட்டுக்குப் பின்பு அமைதியாக வண்ணங்கள் இனிதே ஒருங்கிணைந்து காணப்படும் ஒரு வானவில்லைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அருவியாக விழும் ஒரு நீர்வீழ்ச்சியை எண்ணிப்பாருங்கள். அல்லது மிருகங்கள் தங்கள் குட்டிகளோடு சேர்ந்து விளையாடுவதை கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்யுங்கள். மனமகிழ்வை ஏற்படுத்தும் ஒரு மலர்த் தோட்டத்தை அல்லது வளமான கோதுமை விளைச்சலைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அநேக ஆட்களுக்கு இவை சாதாரணமான காட்சிகளாகும். ஆனால் அவை உங்கள் மீது என்ன பாதிப்புடையதாக இருக்கிறது?
எளிதில் பொதுநிகழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது
பொதுவாக, எவ்வளவு அடிக்கடி ஒரு விஷயம் நேரில் காணப்படுகிறதோ அது அவ்வளவு பழமைப்பட்டுப் போகிறது—அதைப் பொது நிகழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது எளிதாக உள்ளது. இந்தக் குறைபாடு வேகமாக முன்னேறிச் செல்லும் இந்த இருபதாம் நூற்றாண்டில் மிக வெளிப்படையாகவே தெரியலாம். ஆனால் சிந்தனை செய்யவோ அல்லது நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு ஆசீர்வாதங்களையும் காரணங்களையும் எண்ணிப்பார்க்கவோ நேரத்தை எடுத்துக் கொள்ளாதிருப்பது எப்போதுமே அபூரணமான மனிதவர்க்கத்தின் குறைபாடுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
மறுபட்சத்தில், அடிக்கடி சங்கீதக்காரனாகிய தாவீது ஆவியின் ஏவுதலின் கீழ் பாடலில் நன்றியறிதலை வெளியிட்டான். தாவீது தன்னுடைய கடவுளை நோக்கி இனிய பாடல் ஒன்றில் சொல்லிய இந்த வார்த்தைகள் நன்றியுணர்வுக்கு மிக நேர்த்தியான முன்மாதிரியாக உள்ளது:
“உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்றேன்.
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும், அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, [யெகோவாவே, NW] உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!”—சங்கீதம் 8:3, 4, 6–9.
நன்றியுணர்வு துயரத்தை மறைத்துவிடக்கூடும்
அழகான காட்சிகளுக்கான சங்கீதக்காரனின் நன்றியுணர்வு வெறுப்பூட்டும் காட்சிகள் அல்லது கடினமான சூழ்நிலைமைகள் கொண்டு வந்த துயரத்தை ஈடு செய்ய உதவி செய்தது. நீங்களும்கூட அதே அனுபவத்தைக் கொண்டிருக்கலாம். எவ்விதமாக? நம்மைச் சுற்றியுள்ள மகிழ்ச்சிதரும் அநேக காரியங்களை அதிக முழுமையாக போற்ற முயற்சி செய்வதன் மூலம். இந்த விதத்தில் உங்களுடைய மகிழ்ச்சியையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடைய மகிழ்ச்சியையும் நீங்கள் கூட்டலாம்.
ஆகவே தினந்தோறும் காணப்படும், கண்ணுக்கு இனிய, வியப்பை ஏற்படுத்தும் காட்சிகள், நன்மை செய்துவரும் நம்முடைய சிருஷ்டிகரிடமாக இருதயப்பூர்வமான நன்றியுணர்வை எழச் செய்ய ஏன் அனுமதிக்கக்கூடாது? நன்றியுள்ளவராயிருப்பதற்கு இருக்கும் கூடுதலான காரணங்களை இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். (w88 7⁄1)