உங்களுக்குத் தெரியுமா?
(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம், விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 27-ல் காணப்படுகிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. தேவ பக்தியற்றவர்களுக்கும் விசுவாச துரோகிகளுக்கும் எது ‘என்றென்றைக்கும் வைக்கப்பட்டிருப்பதாக’ வேதவசனம் சொல்கிறது? (யூதா 13)
2. மூன்றாவது சிருஷ்டிப்பு நாளில் தாவரங்கள் முளைப்பதற்கு முன்பு என்ன அதுவரை சம்பவிக்கவில்லை? (ஆதியாகமம் 2:5)
3. இஸ்ரவேலர்கள் மத்தியில் யெகோவா ஏன் விஷப்பாம்புகளை அனுப்பினார்? (எண்ணாகமம் 21:5-7)
4. முழுமையான கருத்தில், யெகோவா மட்டுமே என்னவென்று அழைக்கப்படுகிறார்? (சங்கீதம் 18:30, NW)
5. அன்பு எதில் சந்தோஷப்படாது என்று பவுல் சொல்கிறார்? (1 கொரிந்தியர் 13:6)
6. அப்சலோமின் கலகத்தனத்தால் தாவீது எருசலேமை விட்டு தப்பியோட வேண்டிய சூழ்நிலையில் அவருக்கு அதிகம் தேவைப்பட்ட பொருட்களை எந்த மூன்று மனிதர் கொண்டுவந்தனர்? (2 சாமுவேல் 17:27-29)
7. யெகோவா அவருடைய ஜனங்களின் உயர்ந்த அடைக்கலமும் புகலிடமுமாய் இருப்பதால் அவர் என்னவென்று அழைக்கப்படுகிறார்? (சங்கீதம் 62:7)
8. எப்பிராயீம், புதிதாய் பிறந்திருந்த தன்னுடைய குழந்தைக்கு ‘தீமையுடன்’ என்று பொருள்படும் பெரீயா என்ற பெயரை ஏன் சூட்டினான்? (1 நாளாகமம் 7:20-23, NW)
9. அவருடைய ஊழியக்காரர்கள் உடுத்தியிருக்கும்படி கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற உண்மையை இயேசு எவ்வாறு விளக்கினார்? (லூக்கா 12:27, 28)
10. ஆசாவிற்கு முன்பாக யெகோவா தேவன் முறியடித்த எத்தியோப்பியனான சேராவின் கீழிருந்த இராணுவப்படை எவ்வளவு பெரியது? (2 நாளாகமம் 14:9, 12)
11. ஒருவருடைய கூட்டாளிகளைப் பற்றி என்ன எச்சரிக்கையை பவுல் கொடுத்தார்? (1 கொரிந்தியர் 15:33, NW)
12. மனிதன் ஏற்படுத்திய எல்லா ராஜ்யங்களுக்கு கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்யும்? (தானியேல் 2:44)
13. எரிகோ பட்டணம் அழிக்கப்பட்டபோது ராகாபும் அவளுடைய குடும்பத்தாரும் பாதுகாக்கப்படும்படி எவ்வாறு அவளுடைய வீடு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது? (யோசுவா 2:17)
14. ஆயி பட்டணத்தை யோசுவா எவ்வாறு கைப்பற்றினார்? (யோசுவா 8:3-7)
15. எதிர்கால சந்ததியினருக்கு எவ்வளவு மன்னாவை எடுத்துவைக்கும்படி யெகோவா மோசேயிடம் கட்டளையிட்டார்? (யாத்திராகமம் 16:32-34)
வினாடிவினாவுக்கான விடைகள்
1. ‘காரிருள்’
2. மழை
3. ஏனென்றால் அவர்கள் யெகோவாவிற்கு எதிராக கலகம் செய்து குறைகூறினார்கள்
4. பரிபூரணமானவர்
5. அநியாயத்தில்
6. சோபி, மாகீர் மற்றும் பர்சிலா
7. கன்மலை
8. ஏனென்றால், காத் ஊரார் அந்த குழந்தையின் அண்ணன்களை கொன்றுவிட்டிருந்தனர்
9. காட்டுப்புஷ்பங்களின் அலங்கரிப்பை குறித்து பேசினார்
10. பத்து லட்சம் ஆண்கள்
11. “கெட்ட கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்”
12. அவற்றை நொறுக்கி நிர்மூலமாக்கிவிடும்
13. அவள் ஒரு சிவப்புநூல் கயிற்றை ஜன்னலிலே கட்டினாள்
14. பட்டணத்திற்கு பின்னால் அவருடைய வீரர்களை பதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு, பட்டணத்தினுள் இருந்தவர்களை வெளியே கொண்டுவருவதற்காக அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அவர்களுடைய கோட்டையைவிட்டு வெகுதூரம் வரும்வரை போலியாக பின்வாங்கினார்
15. ஒரு ஓமர் அளவு