உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/22 பக். 7-9
  • போருக்கு குட்-பை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போருக்கு குட்-பை
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலகளாவிய சமாதானத்தின் தத்ரூபக் காட்சி
  • கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்தல்—ஏன், எப்படி?
  • பூமியில் சமாதானம்—எப்படி வரும்?
    பைபிள் தரும் பதில்கள்
  • கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “என்றென்றைக்கும் அழியாத” ஒரு ராஜ்யம்
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 9/22 பக். 7-9

போருக்கு குட்-பை

எல்லா மக்களும் காலங்காலமாக போரில்லா ஓர் உலகத்திற்காக ஏங்கி தவிக்கின்றனர். அவர்களுக்குள், கரைபுரண்டோடும் இந்த ஆசை பகல் கனவாகவே இருந்துவருகிறது. நாம் முந்தின கட்டுரையில் பார்த்த வண்ணம், உலகளாவிய சமாதானம் உலகத்திலுள்ள எல்லா மக்களையும் பாரபட்சமின்றி பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசாங்கத்தால், ஒரு உலக அரசாங்கத்தால் மட்டும்தான் முடியும் என்று அநேகர் நம்புகின்றனர். இருப்பினும், இன்றுள்ள மனித ஆட்சியாளர்கள், உலகத்திலுள்ள அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசாங்கத்திற்கு தங்களுடைய ஆட்சியுரிமையை முழு விருப்பத்துடன் ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள் என்பதை அநேகர் உணர்ந்திருக்கின்றனர். அப்படியானால் உலக அரசாங்கம் ஒருபோதும் வராது என இது அர்த்தப்படுத்துமா?

ஒருவேளை அவ்வாறு தோன்றலாம். இருப்பினும், உலகமுழுவதையும் ஆட்சிசெய்யும் ஓர் அரசாங்கம் விரைவில் இந்த பூமிக்கு சமாதானத்தை கொண்டுவரும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது. இது மனித பேச்சு வார்த்தையினாலோ அல்லது சர்வதேச ஒப்பந்தத்தினாலோ வரப்போவதில்லை. தீர்க்கதரிசியாகிய தானியேல் இவ்வாறு எழுதும்படியாக ஏவப்பட்டார்: ‘பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்.’​—⁠தானியேல் 2:⁠44.

இன்றுள்ள கோடிக்கணக்கானோருக்கு பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தரின் ஜெபம் தெரிந்திருக்கும். இயேசு இந்த ஜெபத்தில் தம்மை பின்பற்றினவர்களை ஒரு ராஜ்யத்திற்காக ஜெபம் செய்யும்படியாக சொன்னார் அல்லவா! அந்த ராஜ்யமே இது. பைபிளில் மத்தேயு 6:9, 10-⁠ல் காணப்படும் அந்த ஜெபம் ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த ஜெபத்தின் ஒரு பகுதி கடவுளிடமாக இந்த விண்ணப்பத்தை விடுக்கிறது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” இந்த ஜெபத்திற்கு கடவுள் நிச்சயம் பதிலளிப்பார். பூமியைப் பற்றிய கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்ற அந்த ராஜ்யம் விரைவில் “வரும்.” இந்த பூகோளத்தை சமாதானமான பரதீஸாக மாற்றுவதும் கடவுளுடைய சித்தத்தில் உட்பட்டிருக்கிறது.

உலகளாவிய சமாதானத்தின் தத்ரூபக் காட்சி

மனித அரசாங்கங்களைவிட கடவுளுடைய ராஜ்யம் அதிகத்தை சாதிக்கும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? அந்த ஆட்சியின் கீழுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நிரந்தர சமாதானத்தை நிச்சயப்படுத்தும் வகையில் உள்ள அந்த கடவுளுடைய ராஜ்யத்தின் எட்டு அம்சங்களை கவனியுங்கள்.

1. அந்த ராஜ்யம் “சமாதானப் பிரபு”வான மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை கடவுளால் நியமிக்கப்பட்ட தலைவராக கொண்டிருக்கும். (ஏசாயா 9:6) இயேசு பூமியில் இருந்தபோது, தம் ஊழியக்காரர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சொல்லர்த்தமான சண்டைகளில் ஈடுபடுவதில்லை என்று சுட்டிக்காட்டினார். அவர் பேதுருவிடம் இவ்வாறு சொன்னார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.”​—⁠மத்தேயு 26:⁠52.

2. அந்த ராஜ்யம் உண்மையில் ஒரு உலக அரசாங்கமாக இருக்கும். இயேசுவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை குறித்து தானியேல் இவ்வாறு முன்னுரைத்தார்: “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது.”​—⁠தானியேல் 7:⁠14.

3. அந்த ராஜ்யம் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும். “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வந்த “பூமியிலே அரசாளு”ம் உடன் ஆட்சியாளர்களை இயேசு கொண்டிருப்பார்.—வெளிப்படுத்துதல் 5:9, 10.

4. அந்த கடவுளுடைய ராஜ்யம் அதன் அதிகாரத்தை எதிர்க்கும் எல்லா மனித அரசாங்கங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். “அந்த ராஜ்யம் . . . [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”​—⁠தானியேல் 2:⁠44.

5. பூமியின் குடிகள் அனைவரும் சர்வதேச சட்டத்தால் ஆளப்படுவார்கள். அதைப் பற்றி ஏசாயா இவ்வாறு முன்னுரைத்தார்: ‘சீயோனிலிருந்து சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிப்படும். தேசங்களினூடே அவர் நிச்சயமாய் நியாந்தீர்த்து, திரளான ஜனங்களின் காரியங்களை சரிசெய்வார்.’​—⁠ஏசாயா 2:3, 4, NW.

6. அந்த ராஜ்யத்தின் குடிமக்கள் சமாதானத்தின் வழிகளை கற்றுக்கொள்வார்கள். ஏசாயா தொடர்ந்தார்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”​—⁠ஏசாயா 2:4.

7. வன்முறைப் பிரியர்கள் முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவார்கள். ‘கர்த்தர் நீதிமானையும் துன்மார்க்கனையும் சோதித்தறிகிறார்; வன்முறையில் பிரியமுள்ள அனைவரையும் அவர் உள்ளம் வெறுக்கிறது. துன்மார்க்கர் மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.’​—⁠சங்கீதம் 11:5, 6, NW.

8. ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.

கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்தல்—ஏன், எப்படி?

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பைபிள் மேலும் அநேக விவரங்களை கொடுக்கிறது. உதாரணமாக, இயேசு கிறிஸ்து ஆளுகை செய்யும்போது அவருடன் சேர்ந்து யார் பூமியின் விவகாரங்களை கவனித்துக்கொள்வார்கள் என்பதைப் பற்றி விவரிக்கிறது. மேலும் அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் என்ன தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்கிறது. பெரும்பாலும் சண்டைகளுக்கு வழிநடத்தியிருக்கும் பொறாமை, பேராசை போன்ற குணங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் செழுமையையும் சந்தோஷத்தையும் முன்னேற்றுவிக்க அந்த ராஜ்யம் எவ்வாறு இந்த பூமியின் வளங்களை நிர்வகிக்கும் என்பதைப் பற்றியும் பைபிள் சொல்கிறது.

இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை நாம் நம்பலாமா? யெகோவாதாமே இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11) இந்த வாக்கியம் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று உறுதியளிப்பதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா எல்லாம் வல்லவர், ஆகவே உலகளாவிய சமாதானத்தை நிலைநாட்ட அவருக்கு வல்லமை இருக்கிறது. அவரால் புரிந்துகொள்ள முடியாது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை; ஆதலால், சமாதானத்தை காத்துவர அவருக்கு ஞானம் இருக்கிறது. (ஏசாயா 40:13, 14) அது மட்டுமல்லாமல், யெகோவா அன்பே உருவானவர், அதனால் உலக சமாதானத்தை கொண்டுவர இந்த சர்வலோகத்தில் அவரைவிட வேறு எவரும் அதிகமாக விரும்ப முடியாது.​—⁠1 யோவான் 4:⁠8.

கடவுளுடைய வாக்குறுதிகளை நம்ப விசுவாசம் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. விசுவாசம் அறிவின் பேரில் சார்ந்துள்ளதோடு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படிப்பதன் மூலம் அது வளர்கிறது. (பிலிப்பியர் 1:9-11) கடவுளுடைய ஆள்தன்மையை பற்றியும் நோக்கங்களை பற்றியும் படிக்க படிக்க கடவுளுடைய ராஜ்யத்தின் மெய்மை மேலுமாக உறுதிப்படும். ஆம், போர் இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்படும், இது மனித முயற்சிகளினால் அல்ல ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் தெய்வீக வழிநடத்துதலினால் மகிமை பொருந்திய அவருடைய உலக அரசாங்கத்தின் மூலம்.

[பக்கம் 8, 9-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யத்தில், அதன் குடிமக்கள் சமாதானத்தை கற்றுக்கொள்வார்கள் மேலும் போராயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்