உலகத்தைக் கவனித்தல்
மிகுதியின் மத்தியில் பசி பட்டினி
விவசாயத்தில் தெழில் நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் உலகின் தேவையைவிட அதிகமான உணவு அறுவடை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும், 1985-ல் உலகத்தில் பசி பட்டினியிலிருக்கும் மக்களின் எண்ணிக்கை 51 கோடியே 20 லட்சமாக அதிகரித்தது. “உலகம் மலிவான மிதமிஞ்சிய உணவால் நிறைந்திருக்கும் சமயத்தில் இந்தப் பசி பட்டினி என்ற நிலை வந்துள்ளது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கைச் செய்கிறது.
பிள்ளைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஐக்கிய நாடுகளின் உலக உணவு ஆலோசனைக் குழுவின் அறிக்கைபடி ஒவ்வொரு நாளும் 40,000 பிள்ளைகள் பசி பட்டினியுடன் சம்பந்தப்பட்ட நோயால் மரிக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைந்த அந்தப் பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பங்கு பிள்ளைகள் ஆசிய நாடுகளிலிருப்பவர்கள். இந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் உற்பத்தி செய்யப்படும் உணவை வாங்க முடியாமல் அதிக ஏழ்மை நிலையிலிருப்பதால், இந்த நாடுகள் உணவை ஏற்றுமதி செய்கின்றன. “இன்று உணவு பற்றாக்குறைவால் பசி பட்டினி நிலவுகிறது என்பதற்குப் பதிலாக அரசியல் சூழ்நிலைகளாலும் கொள்கை தீர்மானங்களாலுமே அந்நிலை நிலவுகிறது,” என்று டைம்ஸ் கூறுகிறது.
எதிர்பாராத ஒரு விபத்தால் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்
அணு ஆயுத தற்காப்புப் படை முறைகளில் பயன்படுத்தப்படும் மிக உயர்ந்த தொழில் நுட்பம் எதிர்பாராத ஒரு விபத்தால் போர் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டியிருக்கிறது என்று சோவியத் மற்றும் ஐக்கிய மாகாணங்களின் விஞ்ஞானிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். லண்டன் சண்டே டைம்ஸ் குறிப்பிடுகிறபடி, அணு ஆயுத முறைகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகளில் ஒரு மாற்றம் இருந்தாலொழிய எதிர்பாராத ஒரு விபத்தாக ஓர் அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது” என்று கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதுவரை, உலகின் 50,000 அணு ஆயுத ஏவுகணைகளைச் செலுத்திடச் செய்திருக்கும் எல்லா தவறுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இது எல்லா சமயத்தில் செய்யக்கூடிய காரியமல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் சென்றுகொண்டிருக்கும் இன்றைய பாதையில் தொடருவோமானால், நாம் நம்மையே வெடித்துக்கொள்ளப்போகிறோம்,” என்று முன்னறிவிக்கிறார் ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்டின் ஹெல்மன்.
பல் நிரப்புதலில் ஆரோக்கியமில்லையா?
பொதுவாக நிலவும் கருத்துக்கு முரணாக, ‘சில்வர்’ கலப்பு கொண்டு பல் அடைக்கப்படுவதில் அந்தக் கலப்பு உண்மையில் 50 சதவிகித பாதரசம்—அறியப்பட்டிருக்கும் ஒரு நச்சி—கொண்டது” என்று உங்கள் ஆரோக்கியம் கூறுகிறது. கொலேராடோவில் பல் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹால் ஹகின்ஸ் கூறுகிறபடி இந்த வஸ்துவின் சிறிய அளவு உடலில் கலந்து, களைப்பு, கடுமையான சோர்வு, கவலை, அளவு கடந்தவிதத்தில் உறுப்புகள் மரத்துவிடுதல், முகத்தசைகளில் கோளாறு ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். வலிப்பு நோயாளிகளின் பற்களைல் நிரப்பப்பட்டிருந்த பாதரசம் நீக்கப்படுகையில் அவர்கள் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது என்று குறிப்பிடுகிறார். ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய 10,000 முதல் 1,30,000 பல் மருத்துவர்கள் பாதரசம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கிடைக்கக்கூடிய மற்ற கூட்டுப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்று டாக்டர் ஹகின்ஸ் கணக்கிடுகிறார்.
கூடுதலான நன்மை
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதிலிருக்கும் நன்மைகளின் பட்டியலில் ஆராய்ச்சியாளர்கள் புதிய ஒன்றையும் சேர்த்திருக்கிறார்கள்—நேராக வளரும் பற்கள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பொதுநலப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குமிடையே பல் வளர்ச்சியில் வித்தியாசமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் குழந்தை தன் நாவையும் வாயையும் வித்தியாசமாக உபயோகிக்க வேண்டும். புட்டிப்பால் குடிக்கும் காரியத்தில், வாயிலுள்ள பாலை விழுங்கும்போது பால்புட்டிக் காம்பின் வழியே வரும் பாலை நிறுத்த நாக்கு முன்னால் நீட்டப்படுகிறது. தாய்ப்பால் குடிக்கும்போதா நாக்கு முன்னால் நீட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை, மற்றும் குழந்தைகள் தங்கள் வாயின் தசைகளை அதிக மும்முரமாகப் பயன்படுத்த வேண்டும். ஓராண்டுக்குமதிகமாகத் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்குப் பல் வரிசையாக வளருவதில் பிரச்னை அதிகமாகக் காணப்படவில்லை.
ஐந்நூறு கோடியை எட்டுதல்
யுகோஸ்லேவியாவில் ஸாக்ரெப் என்ற ஊரில் ஜூலை மத்தியில் பிறந்த ஆண் குழந்தை மெடெஜ் கேஸ்பர் உலகின் ஐந்நூறு கோடியாவது ஆள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஐந்நூறு கோடியாவது நபர் யார், பிறந்தது எங்கே என்று எவரும் நிச்சயமாக சொல்ல முடியாது. ஸாக்ரெப் பிறப்பிடமாகத் தெரிந்துகொள்ளப்பட்டது, ஏனெனில் பிறப்பு-இறப்பு புள்ளிவிவர ஆய்வாளர்கள் குறிப்பிட்ட அந்தச் சமயத்தில் ஐ.நா.-வின் தலைமை செயலாளர் ஜேவியர் பெரெஸ் டி ஸுலர் அந்த நகரில் இருந்தார். “அந்த வைபவத்தைக் குறிக்கும் வகையில் தான் ஆற்றிய சொற்பொழிவில், இந்த ஆண்டு பிறக்கும் 12 கோடி பிறப்புகளில் 90% உணவு, உடல் நல சேவை மற்றும் கல்வி குறைவுபட்டிருக்கும் நாடுகளிலே இருக்கும் என்ற உண்மைக்கு பெரெஸ் டி ஸுலர் கவனத்தைத் திருப்பினார்,” என்று டைம் பத்திரிகை கூறுகிறது. உலக மக்கள் தொகை 1974-ல் நாநூறு கோடியை எட்டியது.
ஜப்பானியரின் அச்சுறுத்தல்
ஜப்பானிய “பாதுகாப்புப்படை அமெரிக்கா செய்யும் விமானங்களை வாங்குவதற்கு பதில் முதன்முறையாக தன்னுடைய சொந்த ஜெட் போர்விமானங்களைச் செய்துகொள்வது குறித்து ஆலோசிக்கிறது,” என்று நியு யார்க் தினசரி நியுஸ்டே அறிக்கை செய்கிறது. “ஆலோசிக்கப்பட்டு வரும் ஜப்பானிய விமானம் தென்கிழக்கு ஆசியாவின் விமான வர்த்தகத்தின்மீது ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.மா.-வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை [பாதுகாப்புப் படை] ஆய்வாளர்கள் காண்கிறார்கள்.” ஹெலிகாப்டர் மற்றும் பயிற்சி விமானங்களைக் கட்டுவதில் ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தபோதிலும், தங்களுடைய தேசத்திலேயே கட்டும் போர்விமானம் இரண்டாம் உலக மாக யுத்தத்துக்குப் பின் அவர்களுக்கு முதல் விமானமாக இருக்கும். “காரிகள் சம்பந்தமாக ஜப்பானியர் என்ன செய்தார்கள் என்பதை அறிந்திருப்பதால், அவர்கள் விமானம் கட்டும் காரியம் ஐக்கிய மாகாணங்களின் விமானத் தொழில்துறையின் கடைசி விருப்பமாக இருக்கிறது,” என்று ஜர்னல் ஆப் டிஃபென்ஸ் ஆண்டு டிப்ளோமஸி என்ற வர்த்தகத் தொழில் பிரசுரத்தின் ஆசிரியர் டேவிட் ஸ்மில் கூறுகிறார்.
கண்பதிவுகள் காப்பு
தவறாக அடையாளங் காட்டப்படாதிருப்பதற்கு விரல் பதிவுகள் காக்கப்படுவதுபோல் அதனிடத்தை கண்பதிவுகள் எடுத்திருக்கின்றன. இந்தப் புதிக முறையை வியாபார உலகத்துக்கு அறிமுகம் செய்யும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி சக் ஃபார்கோ, “விசேஷமாக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் கையுறைகளைப் பயன்படுத்தி ஒருவருடைய விரல் பதிவுகள் நகலாக்கப்படக்கூடும் என்று கூறுகிறார். லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்ததுபோல, கண்களில் இரத்த நாளங்களின் அமைப்பை ஒரு நுண்ணிய கருவிகொண்டு அடையாளங் காண்கின்றனர். இதை எற்கனவே பதிபுக் கோப்பிலுள்ள அமைப்புடன் ஒப்பிடுவதன் மூலம் அடையாளங் காண்கின்றனர். விரல் பதிவுகளில் காணப்படுவது போலவே கண் பதிவுகளிலும், ஒவ்வொரு தனிப்பட்ட கண் பதிவின் மாதிரியமைப்பு தனிதன்மைவாய்ந்ததாக இருக்கிறது. கண்ணின் இரத்தநாள அமைப்புகளின் நன்மை என்னவென்றால், அவற்றை முன்கூறமுடியாது, நகலெடுக்க முடியாது மற்றும் மாற்றவும் முடியாது.
விவாகரத்துக்கு இன்னொரு காரணம்
விவாகங்கள் தோல்வியடைவது, எல்லா சமயத்திலுமே ஒத்துப்போகதத் தன்மையால் அல்லது தாங்களாகவே உருவாக்கிக்கொள்ளும் பிரச்னைகளால் அல்ல,” என்கிறது தி ஜெர்மன் ட்ரிபியூன். “துணைவரில் ஒருவர் பெற்றோரிடமிருந்து சற்று தூரமாக இல்லாதிருப்பதாலும் முடிவு ஏற்படக்கூடும்.” காட்டிங்கென் பல்கலைக்கழகத்தின் நான்கு ஆண்டு ஆய்வுகளின்பேரில் எழுதப்பட்ட கட்டுரை காட்டுவதென்னவெனில், “ஒரு துணைவர் அளவுக்கு மிஞ்சி பெற்றோரின் பிள்ளையாயிருந்து போதியளவுக்கு மனைவியாகவோ அல்லது கணவனாக இல்லாததனால்” வளரும் சமநிலையின்மையால் பிரச்னைகள் எழும்புகின்றன. மனதில் பெற்றோரைச் சார்ந்திருப்பது அநேக சமயங்களில் ஆழமாக வேர்கொண்டு தனக்குத் தெரியாமலேயே அதில் தன்னைப் பொருத்திக்கொள்ளுதல் விவாகரத்தில் முடிவடைகிறது. “தங்களுடைய துணைவரை மணந்தவர்களாக இருப்பதைவிட தங்கள் பெற்றோரை மணந்தவர்களாக” இருக்கும் ஆட்கள் அநேகமாய்த் தங்கள் துணைவரைக் குறித்து பெற்றோர் குறைகூறுவதை ஏற்றுக்கொள்கிறவர்களாயிருப்பார்கள்.
விமான நிலையத்தில் பறவைகளுக்காக சுற்று காவலர்
நியு யார்க் கென்னடி விமான நிலையத்தில் இறங்கும் விமானப் பயணிகள் விபத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒன்றைக் குறித்து அறியாதிருக்கிறார்கள்: பறவைகள் விமானங்களில் அடிப்படுவதால் அல்லது ஜெட் என்ஜின்களுக்குள் உறிஞ்சிக்கொள்ளப்படுவதால் இந்தப் பறவைகள் இந்த விமானங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி முதல் 4 கோடி டாலர் வரை செலவை உட்படுத்தும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஜமெய்க்கா கடல் வனவாழ்வுப் புகலிடமும் எட்ஜ்மெரே குப்பை மேடுமாகிய இந்த இரண்டுமே ஏராளமான பறவைகளைக் கவர்ந்திழுப்பதால், மற்ற விமான நிலையங்களைவிட கென்னடி விமான நிலையம், பறவைகளால் அதிக பிரச்னைகளை எதிர்ப்படுகிறது. கென்னடியில் கடற்பறவைகள்தான் பெரும்பாலான பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. விமானத்தில் சிக்கிக்கொள்ளும் பறவைகளில் இவை 90 சதவிகிதமாகும். எட்டுபேர் கொண்ட பறவைகளுக்கான சுற்றுக் காவலர் விமானங்கள் இறங்கும் பாதையிலிருந்து பறவைகளைத் தூரத்துவதற்குச் சிறிய வெடிச் சாதனங்களையும் கடற் பறவைகளை அச்சுறுத்தும் ஒலிகளை டேப் ரிக்கார்டர்களில் பதிவுசெய்து ஒலிப்பது போன்ற முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றைத் துரத்துவதற்கு மற்ற வழிகள் தோல்வியடையும்போது மட்டுமே கடைசி வழியாக அவற்றைச் சுட்டு வீழ்த்துகின்றனர்.
ராக் இசைக்கு அடிமையாதல்
கடுமையான ராக் இசை “பலமான போதைத்தரும் பாதிப்புடையதாயிருக்கிறது” என்று ரஷ்யாவின் பாஷ்கிரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் G.A. அமினெவ் கூறுகிறார். பெல்ஃபாஸ்ட் நியுஸ் லெட்டரில் அறிக்கைச் செய்ததுபோல் ராக் இசை ரசிகர்கள் கடுமையான ராக் இசையை இடைவிடாமல் கேட்க சந்தர்ப்பம் கிடைக்காதிருக்கும்போது, போதை மருந்துகளுக்கு அடிமையாகியிருப்பவர்கள் அது இல்லாமலிருக்கும்போது அவர்களில் காணப்படும் அறிகுறிகள் இவர்களிலும் காணப்படுகிறது. “அப்படிப்பட்ட இவையிலிருந்து அவர்களை ஒரு வாரத்துக்கு முற்றிலும் விலக்கி வைப்பீர்களானால், அவர்கள் அதிகக் கஷ்டமாக உணருகீறார்கள், எரிச்சலடைகிறார்கள், கைகள் நடுங்க ஆரம்பிக்கின்றன,” என்று சோவியத் உளநூல் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களில் சிலர் அந்த இசையில்லாமல் மூன்று நாட்களுக்குக்கூட அந்த அறிகுறிகளின்றி நிலைத்திருக்க முடியவில்லை. கடுமையான ராக் இசை ரசிகர்கள் அந்த இசையைக் கேட்காத மற்வர்களைவிட தங்கள் வேலைகளில் 50 சதவிகித திறமையுடையவர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள் என்றுங்கூட டாக்டர் அமினெவ் கண்டுபிடித்தார். (g87 10⁄22)