“இரத்தமேற்றுதல் மரணம் அல்ல, ஜீவன் என்று நினைத்தேன்”
அவை, டிசம்பர் 11, 1986 அன்று 20/20 அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் தகப்பனார் சால் சிரெல்லா சொன்ன வார்த்தைகள். பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக இருந்தபோதிலும் “மருத்துவமனையின் விதிமுறை” என்ற அடிப்படையில் அவருடைய மகள் ட்ரேஸிக்கு இரத்தமேற்றப்பட்டது. (அவர்கள், மத அடிப்படையில் இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அல்ல.) அவள் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு மாற்று ஈரல் பொருத்தப்பட்டதால் காப்பாற்றப்பட்டாள்.
A அல்லாத/B அல்லாத கல்லீரல் அழற்சியால் ட்ரேஸி பாதிக்கப்பட்டாள். இதே தொலைக்காட்சி நிகழ்ச்சி பின்வருமாறு அறிக்கை கொடுத்தது: “இரத்தமேற்றிக்கொள்வதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 1,90,000-க்கும் அதிகமான அமெரிக்க மக்கள் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஈரலில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது அல்லது ஒவ்வொரு ஆண்டும் ஏற்க்குறைய 10,000 பேரைக் கொல்லுகிறது. ட்ரேஸியைக் கொல்லும் நிலைக்குக் கொண்டுசென்றது.”
இரத்தமின்றி 14,000 அறுவை சிகிச்சைகளை செய்த ஒரு மருத்துவருங்கூட பின்வருமாறு சொன்னார்: “இரத்தமேற்றுதல் அவசியப்படாத ஆட்களுக்கெல்லாம் கண்மூடித்தனமாக இரத்தமேற்றும் ஆட்களை நான் பார்க்கிறேன். அரைகுறையான தங்களுடைய சிகிச்சையின் தவற்றை மறைப்பதற்கு, வேறொன்றும் கிடைக்காவிட்டால், இரத்தமேற்றுதல் மூலம் அதை மறைத்துவிடுகின்றனர். அது முற்றிலும் ஏற்கத்தகுந்ததல்ல என்று நினைக்கிறேன்.’ முன்னாள் ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாயிருந்த மற்றொரு மருத்துவர் பின்வருமாறு கூறினார்: “இரத்தம் சம்பந்தப்பட்ட எல்லா மருந்துகளும் மிதமிஞ்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். அதை உறுதிபடுத்த போதுமான அத்தாட்சி இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்றப்பட வேண்டிய நடத்தைமுறை மருத்துவரின் நடத்தை முறையாகும். நோயாளிக்காக அவர்கள் என்ன தருவிக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் இரத்தத்தை அளவுக்கு மிஞ்சி தருவிக்கிறார்கள்.” (g87 8⁄8)