“என்னுடைய துக்கத்தில் நான் எப்படி வாழ முடியும்?
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாப் மற்றும் டயானே க்ரிஷ் என்பவர்களை பேரிழப்புக்குரிய ஒரு சம்பவம் தாக்கியது. அவர்களுடைய ஆறு வயது மகன் டேவிடுக்கு பிறப்பிலிருந்தே இருதய நோய் பிரச்னை இருந்தது. டயானே கதையை விவரிக்கிறாள்:
“ஓராண்டுக்குள்ளாக ஒரு பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர் எங்களுக்கு ஆலோசனைகூற, அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். டேவிட் ஆட்டம் பாட்டம் மிகுந்து காணப்பட்டான். ஜனவரி 25 என்று நினைக்கிறேன், டேவிட் அவனுடைய அக்காவின் அறையைத் தலைகீழாக்கிக் கொண்டிருந்தான், அது அவளுக்கு ஒரே நச்சரிப்பாக இருந்தது. தான் வெளியில் சென்று விளையாட அனுமதி கேட்டபோது, சரி என்று சொல்லிவிட்டேன்.
“சற்று நேரத்துக்குள் ஒரு ஆம்பிலன்ஸ் சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது பக்கத்துவீட்டடுக்காரர் ஒருவர் ஓடிவந்து, ‘டயானே, அது டேவிட், வந்துப் பார்,’ என்று உறக்கக் குரல் கொடுத்தாள். நான் வெளியே சென்று பார்த்தேன், டேவிட் மோதிய காரில் அவன் படுத்திருந்தான். என்னால் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைய முடியவில்லை. என் கைகால் விழுந்துவிட்டது போன்று உணர்ந்தேன். அவர்கள் அவனை ஆம்புலன்ஸில் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஆனால் பலனில்லை. அவனுடைய சின்ன இருதயம் செயலிழக்க, அவன் உயிர் பிரிந்தது.”
விழித்தெழு!: “இந்தப் பயங்கரமான இழப்பு உங்களை எப்படி பாதித்தது?”
டயானே: “என்னில் தொடர்ந்து வெவ்வேறு பிரதிபலிப்புகள் காணப்பட்டன—உடல் மறுத்தது, நம்பமுடியாத நிலை, குற்ற உணர்வு, என்னுடைய கணவர் பேரிலும், மருத்துவர் பேரிலும் ஒரே எரிச்சல், அவனுடைய நிலைமை எவ்வளவு மோசமாயிருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை. அன்று நான் டேவிடிடம் அவ்வளவு கோபமாயிருந்தேன். விருந்துக்கு விருந்தினரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததோடு கவனிக்க பத்து வார கைகுழந்தை ஒன்றும் இருந்தது. எனக்கு அளவுக்கு அதிகமான வேலை. அதுபோக எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் டேவிடை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர் என்பதே.
“அவன் மரித்துப்போனான் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. “மரித்தான்” என்ற வார்த்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப் பொருத்ததில், அவன் ஒரு பயணத்திலிருக்கிறான். ‘அவன் கடவுளுடைய ஞாபகத்தில் உயிரோடிருக்கிறான், அவன் திரும்பி வருவான்,’ என்று எண்ணினேன். எனவே அவன் மரித்து ஏறக்குறைய ஏழு வாரங்களுக்குப் பின் நான் அவனுக்குக் கடிதங்களை எழுத ஆரம்பித்தேன். அந்தக் கடிதங்களை 13 வருடங்களாக எழுதினேன்.!
துக்கம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?
டயானேவின் நீண்டநாள் துக்கம் உங்கள் துக்கத்தின்போது ஆதரவு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் டாக்டர் ஆர்த்தர் ஃப்ரீஸ் குறிப்பிட்டிருப்பதை ஆதரிக்கிறது: “ஒரு பிள்ளையை இழப்பது பெற்றோருக்கு, மிக முக்கியமாக தாய்க்கு நிரந்தர துக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அநேக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.”
“சுற்றிவரும் வருடத்தோடு துக்கமும் திரும்பி வருகிறது,” என்பது புலவர் ஷெல்லியின் உணர்ச்சி. இழக்கப்பட்ட அந்த அன்புக்குரியவரை ஆண்டுதோறும் நினைவுகூறுவது வேதனையைப் புதுப்பிக்கிறது. இன்றுள்ள இலட்சக்கணக்கான மக்கள் அதை ஆமோதித்து கேட்கும் கேள்வி, ‘என் துக்கத்தில் நான் எப்படி வாழக்கூடும்?’ என்றபோதிலும் துக்கம் ஆறக்கூடிய ஒன்று, ஒருவேளை முற்றுபெறாதிருக்கக்கூடும். இழப்பின் உணர்வு குன்றாவிட்டாலும் கடுமையான துயரம் குறைகிறது.
இந்தக் கருத்து பிரிட்டனைச் சேர்ந்த ஹெரால்டு மற்றும் மார்ஜரீ பர்டு என்பவர்களால் உறுதிசெய்யப்படுகிறது. இவர்கள் தங்களுடைய 19 வயது மகன் ஸ்டீபனை இழந்தார்கள். அவன் பத்து ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கி மரித்துவிட்டான். மிக வருத்தத்துக்குரிய காரியம், அவன் இவர்களுடைய ஒரே பிள்ளை, அவனுடைய உடலும் கிடைக்கவில்லை. ஹெரால்டு தன்னுடைய துக்கம் அடங்குகிறவிதத்தைப் பற்றி பின்வருமாறு கூறினார்: “காலம் ஆற்றிடும் என்று சொல்லப்படுகிறது, ஆனால் உண்மையில் அது அன்பானவனின் நினைவைத்தான் மங்கச்செய்கிறது. அவனை நாம் உயிர்த்தெழுதலில் மீண்டும் சந்திப்பது ஒன்றுதானே ஆற்றும் காரியமாக இருக்கும்.”
துக்கத்தில் ஆழ்ந்திருத்தல் சம்பந்தமான ஒரு விஞ்ஞான ஆய்வு இந்தத் துக்கத்தின் இயல்பான போக்கு குறித்து பின்வருமாறு விளக்கியது: “மரணத்தில் இழப்பின் காரணத்தால் துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர் ஓர் உணர்விலிருந்து மற்றொன்றுக்குத் திடீரெனவும் வேகமாகவும் ஊசலாடக்கூடும். மற்றும் இறந்துபோனவர்களை நினைவுகூருதலைத் தவிர்த்தலும் பழைய காரியங்களை நினைவுக்குக் கொண்டுவருதலும் ஒருசில காலத்துக்கு மாறி மாறி ஏற்படக்கூடும். மக்கள் பொதுவாக இழப்பை நம்பமுடியாத நிலையிலிருந்து மெதுமெதுவாக அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கடந்துவருகின்றனர்.”
இந்தத் துயரப் பொருளின்பேரில் டாக்டர் ஃப்ரீஸ் கூடுதல் விளக்கத்தை அறிமுகப்படுத்துகிறார்: “ஒருவர் எப்பொழுதுமே எதிர்பார்ப்பையுடையவராக இருக்க வேண்டும்.—துயரத்திலும் துக்கத்திலும் கடந்துசெல்லும் பெரும்பாண்மையினர் . . . மறுப்பமாக வருகிறார்கள், பழைய நிலைக்குத் திரும்புகிறார்கள், மற்றும் துயரத்தின் வருத்தமும் வேதனையும் துவங்கும்போதிருந்த அதே சரீர சம்பந்தமான நிலைக்கு வந்து அதில் தொடருகிறார்கள்.”
உண்மை என்னவெனில், அநேக சமயங்களில் அந்த நபர் அதிக பயமுள்ளவராக வெளிவருகிறார். அதற்குக் காரணம் என்ன? அவருடைய துக்க அனுபவம் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் காரியத்தைக் கற்பித்திருக்கிறது—துயரத்திலிருக்கும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் நிலையில் தன்னைக் காணவும் கற்பித்திருக்கிறது. பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் இந்தப் பண்பு அநுதாபம் காண்பிப்பதைவும் கடந்துசெல்வதால், துயரத்தைக் கடந்துவந்திருப்பவர் ஒரு சொத்தாக, ஓர் ஆலோசகராக, பிரியமான ஒருவரை இழந்திருக்கும் மற்றவர்களுக்கு ஆலோசகராக ஆகிறார். உதாரணமாக, மாரடைப்பால் மரித்த டேவிடின் தந்தை பாப் பின்வருமாறு சொன்னார்: “துயரத்தைத் தாங்கிக்கொள்வதற்காக மற்றவர்களுக்கு உதவுவது தங்களுடைய துக்கத்தையும் தாங்கிக்கொள்ள உதவியாயிருக்கிறது என்பதைக் காண்கிறோம்.”
குற்ற உணர்வு, கோபம் மற்றும் எதிர்த்துக் குற்றஞ்சாட்டுவது ஏன்?
மரணத்தில் ஒருவரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த நிலையுடன் குற்ற உணர்வு, கோபம் மற்றும் எதிர்த்துக் குற்றஞ்சாட்டுவது போன்ற பிரதிபலிப்புகள் சம்பந்தப்படுகிறது என்று துக்கம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நியாயமான அல்லது தர்க்கரீதியான காரியங்கள் கிடைக்காத சமயங்களில் உயிருடனிருப்பவர்கள் பொதுவாக மற்ற காரணங்களைக் காண முயலுகின்றனர். ‘அது ஏன் எனக்கு சம்பவிக்க வேண்டும்? எனக்கு அது ஏற்படுவதற்கு நான் என்ன செய்திருக்கிறேன்? நான் மட்டும் . . . ’ போன்ற பிரதிபலிப்புகள் சர்வ சாதாரணமானவை. ‘இது சம்பவிக்கக் கடவுள் எப்படி அனுமதித்தார்? கடவுள் ஏன் இதை எனக்குச் செய்யவேண்டும்?’
இந்தச் சமயத்தில் “சமயமும் எதிர்பாராத சம்பவமும் எல்லோருக்கும் நேரிடுகிறது,” என்ற பைபிள் விடைத்தான் மனதுக்கு வருகிறது. விபத்துகள் எந்த இடத்திலும் எந்த சமயத்திலும் நேரிடக்கூடும். மரணம் பாரபட்சம் பாராது. அன்புள்ள கடவுள் ஒருவருடைய பிள்ளையை எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த நபரை எரிச்சலடையச் செய்கிறவராய் இருக்கமாட்டார்.—பிரசங்கி 9:11; 1 யோவான் 4:8.
எமது முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆஸ்டினும் வாலன்டினாவும் தங்களுடைய மகன் ஜோனத்தானைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் பேசம்போதுங்கூட கண்ணீர்விடடனர். எதிர்க் குற்றஞ்சாட்டும் தன்மை அவர்களிடம் காணப்பட்டதா? வாலண்டீனா இப்படியாக பிரதிபலித்தாள்: “இன்னொருவருடைய வாகனத்தில் லாங் தீவுக்கு சென்றது எனக்குப் பிடிக்கவே இல்லை. உண்மை சொல்லவேண்டுமென்றால், நான் அகஸ்டீனைக் குற்றஞ்சாட்டினேன். அது நியாயமற்ற ஓர் பிரதிபலிப்பு என்பதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. ஆனால் அந்தச் சமயத்திலோ, ’அப்பா மட்டும் அவனை அனுப்பாமலிருந்திருந்தால், அவன் இன்னும் உயிருடனிருந்திருப்பான்.’ நான் அவரைக் குற்றப்படுத்திக் கொண்டிருந்தேன். நான் அப்படிச் சொல்ல வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அந்த எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டிருப்பது என்னைப் புண்படுத்தியது.”
டேவிடுக்கு ஏற்பட்ட அகால மரணத்தால் விளைந்த எரிச்சல் விலங்குளைக் கண்டால் எரிச்சலடையும் நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது. விழித்தெழு! நிருபரிடம் அவள் சொன்னதாவது: “தெருவில் ஒரு நாயோ அல்லது பூனையோ நடப்பதைக் கண்டால், ‘அந்த மிருகத்துக்கு ஒரு இருதயம் நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் என்னுடைய மகனுக்கு நன்கு இயங்கும் இருதயம் இருக்கக்கூடது? ஒரு மிருகம் நடந்துகொண்டிருக்க என்னுடைய மகன் ஏன் நடந்துகொண்டிருக்கக்கூடாது?‘”
இந்த அனைத்து பிரதிபலிப்புகளும் அநேக சமயங்களில் நியாயமற்றதாயிருந்தாலும் இயல்பானவை. இவ்விதமாகக் கேள்வி கேட்பது நியாயமான முடிவுக்கு வருவதற்கு ஒரு வழிமுறை, உண்மை நிலையுடன் ஒப்புரவாவதற்கான வழிமுறையின் ஒரு பாகம். கடைசியில் ஒரு நிலையான நோக்குநிலை பெறப்படுகிறதோடு, பகுத்தறிவு மேற்கொள்கிறது. இது டாக்டர் ஃபிரீஸ் இப்படியாகக் குறிப்பிட்டதற்கு இணங்க இருக்கிறது: “தகுந்த துக்கத்துக்குப் பரிசோதனை—துக்கம் துயரமாகிய உணர்ச்சி சம்பந்தமான பிரச்னைகள் மூலம் தகுந்தவாறு செயல்படுதல், மரணத்தை ஏற்று அதோடுகூட செல்லும் அனைத்து உணர்ச்சிகளையும் நேர்மையுடன் பார்த்தல்—துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர் கடைசியில் கடந்து செல்லும் வேதனையால் அல்லது மங்கிய துயர்தரும் சிந்தனைகளால் இந்தத் தீய சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்துக்கொள்கிறார்.”
இது காரியங்கள் சீர்ப்படுவதற்கு வழிவகுக்கிறது. டாக்டர் ஃப்ரீஸ் தொடந்து கூறுகிறார்: “வீட்டு நினைவுத் துயரமும் இன்ப நினைவுகளுமே இலட்சியம், மரித்துபோனவர்களைக் குறித்து நேர்மையாகவும் பாசத்துடனும் பேசும் ஒரு திறமையாக அது இருக்கிறது. இது கடைசியாக வேதனையூட்டும் வருத்தத்தின் துயரத்தின் மற்றும் துக்கத்தின் இடத்தை எடுத்துக்கொள்கிறது.” இந்தக் கட்டத்தில், பழைய நினைவுகள் துக்கத்தைவிட பாசத்தையே வளர்க்கிறது.
செத்துப்பிறந்த குழந்தையின் இழப்பை எதிர்ப்படுதல்
தனக்கு மற்ற பிள்ளைகள் இருந்தபோதிலும் மோனா தன்னுடைய அடுத்த குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பிறப்புக்கு முன்பே அது ‘நான் விளையாண்ட, பேசிய, கனவுகண்ட குழந்தையாக இருந்தது.’
தாய்க்கும் பிறவாத அந்த சேய்க்கும் இடையே வளரும் அந்தப் பாசப் பிணைப்பு அதிக வல்லமை வாய்ந்தது. அவள் தொடர்ந்து கூறுகிறாள்: “ரேச்சல் ஆனி என்னுடைய வயிற்றின் மீதிருந்த புத்தகங்களை உதைத்து தள்ளிய, என்னை அரவில் விழித்திருக்கச் செய்த ஒரு குழந்தை. அவளுடைய அந்தச் சின்ன சின்ன முதல் உதைகளை, என் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பிய அந்த மென்மையான சீண்டுதல்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அவள் அசைந்த ஒவ்வொரு சமயமும் அவவ்ளவு அன்பால் நிறப்பப்பட்டேன். அவள் எப்பொழுது வேதனைப்படுகிறாள், எப்பொழுது வியாதியாயிருக்கிறாள் என்பதை நான் அறிந்துகொள்ளுமளவுக்கு அவளை நான் அவ்வளவு நன்றாய் அறிந்திருந்தேன்.”
மோனாவின் அனுபவம் அரியதொன்றல்ல. ஃப்ரீட்மன் மற்றும் கிராட்ஸ்பீன் கருதரித்த குழந்தையின் இழப்பைக் கடந்து வாழ்தல் என்ற தங்களுடைய ஆங்கில புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தபடி ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஆண்டுதோறும் பத்து இலட்சம் பெண்கள் கருதரித்தும் வெற்றிகாணாதவர்களாயிருக்கின்றனர். ஒரு குழந்தை செத்து பிறக்கும்போது, அதன் தாய்க்கு அது ஒரு பெரும் இழப்பாக இருக்கிறது, அதற்காக அவள் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறாள்—ஒருவேளை வாழ்க்கை முழுவதுமே அதில் ஆழ்ந்துவிடக்கூடும் என்பதைப் பெரும்பாலான மக்கள் உணர தவறுகின்றனர். உதராணமாக, நியு யார்க் நகரில் வாழும் வெரோனிக்கா இப்பொழுது தனது 50-களில் இருக்கிறாள். தன் கருவில் வளர்ந்த குழந்தைகள் செத்து பிறந்த சமயங்களை நினவுபடுத்திப் பார்க்கிறாள், விசேஷமாக ஒன்பது மாதம் 13 பவுண்டு (6 கிலோ) இருந்து செத்துப் பிறந்த குழந்தையை அவள் மறக்க முடியவில்லை. கடைசி இரண்டு வாங்களுக்கு இறந்த குழந்தையை சுமந்துகொண்டிருந்தாள். அவள் சொல்வதாவது: இற்ந்துபோன ஒரு குழந்தையைப் பிறப்பிப்பது தாய்க்கு மிகவும் பயங்கரமான ஒன்று.”
சோர்வுற்ற இந்தத் தாய்மார்களின் பிரதிபலிப்புகள் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை, மற்ற பெண்களாலுங்கூட புரிந்துகொள்ளப்படுவதில்லை. தன் கருவில் வளர்ந்த குழந்தையைக் கருவிலேயே இழந்த ஓர் உளநூல் மருத்துவர் பின்வருமாறு எழுதினார்: “நான் அதிக கடினமான விதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்த ஒரு காரியம், இது எனக்கு சம்பவிக்கு முன்னே, என்னுடைய நண்பர்கள் என்ன காரியத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டியதாயிருந்தது என்பதை நான் புரியாமலிருந்தேன். இப்பொழுது என்னிடமாக ஆட்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ, அதுபோலவே நானும் அவர்கள் பேரில் அதிக உணர்ச்சியற்றவளாகவும் அறியாமையிலும் இருந்துவந்தேன்.”
துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தாய்க்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, ஏற்பட்டிருக்கும் இழப்பைத் தன்னுடைய கணவன் தன்னளவுக்கு உணர்வதில்லை என்ற எண்ணம். மனைவி ஒருத்தி இப்படியாக விவரித்தாள்: “அந்தச் சமயத்தில் என் கணவன்பேரில் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவரைக் குறித்ததில் அவர் கருதரிப்புக்கு நீங்கியவராயிருந்தார். என்னுடைய துயரமான அநுபவத்தை அவர் அநுபவிக்கவில்லை. என்னுடைய பயத்தை அவர் புரிந்துகொண்டார், ஆனால் என்னுடைய துயரத்தை அல்ல.”
இந்தப் பிரதிபலிப்பு கணவன்மார்களுக்கும் இயல்பான ஒன்று—கர்ப்பமாயிருக்கும் தன் மனைவியின் உடல் மற்றும் உணர்ச்சிப் பிணைப்பு அவருக்கு இருப்பதில்லை. இருந்தாலும் அவரும் இழப்பை வித்தியாசமான வழிகளில் உணர்கிறவர்களாக இருந்தாலும் தாங்கள் இருவரும் ஒன்றாக அந்த இழப்பை அநுபவிக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். தங்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கணவன் தன்னுடைய துக்கத்தை மறைத்தால், அவர் உணர்ச்சியற்றவராயிருக்கிறார் என்று நினைத்துவிடக்கூடும். (பக்கம் 12-ஐ பார்க்கவும்.) எனவே உங்கள் கண்ணீரையும், எண்ணங்களையும், கட்டித் தழுவுதல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். இதுவரை இருந்திராதளவுக்கு நீங்கள் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறீர்கள் என்பதைக் காண்பியுங்கள்.
தொட்டில் சாவின் இரகசியமும் துக்கமும்
இலட்சக்கணக்கான தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் ஒருவித இரகசிய பயத்தில் வாழ்கிறார்கள். ஒரு தாய் பின்வருமாறு கூறினாள்: “நான் காலையில் எழுந்திருக்கும்போது என்னுடைய குழந்தையை உயிரோடு பார்க்கவேண்டும் என்று ஒவ்வொரு இரவும் நான் ஜெபிக்கிறேன்.” அவர்கள் பயப்படுவதெல்லாம் அந்தத் தொட்டில் சாவுக்குத்தான். அது சிட்ஸ் [SIDS] என்ற குழந்தையைத் திடீரென்று கொல்லும் நோயாகும். ப்ளாரிடா மியாமி பல்கலைக்கழகத்தில் நோக்க்குறி ஆய்வுத் துறையில் பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் மாரி வேல்ட்ஸ்-டேபெனா குறிப்பிடுகிற பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஆண்டுக்கு 6,000 முதல் 7,000 சிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். அவர் மேலும் கூறியதாவது: “இது உண்மையிலேயே பொதுமக்கள் உடல்நலப் பிரச்னை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.”
தொட்டில் சாவு குழந்தைகளை ஒரே இரவில் மேற்கொண்டுவருகிறது, அநேகமாய் இரண்டு முதல் நான்கு மாத குழந்தைகளை பாதிக்கிறது. விஞ்ஞானம் இதற்கு தகுந்த விளக்கத்தை இன்னும் கொடுக்க முடியவில்லை. சாவுக்குப் பின் செய்யப்படும் ஆய்வுங்கூட இந்தத் திடீர் சாவுக்குக் காரணத்தைக் கொடுக்க முடியவில்லை. அது ஒரு இரகசியமாகவே இருக்கிறது.
இந்தத் தொட்டில் சாவைப் பின்தொடருவது பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு வன்மையான குற்ற உணர்வு. எனவே தொட்டில் சாவு சம்பவிக்கையில் பெற்றோருக்கு எது உதவும்? முதலாவதாக, அந்தப் பேரிழப்புதல்கள் தவிர்த்திருக்க முடியாத ஒன்று என்பதை அவர்கள் உணரவேண்டும். சிட்ஸ் நோய்க் குறியை முன்னறிந்திட முடியாது, தவிர்க்கவும் முடியாது. இரண்டாவது, பெற்றோர் ஒருவரையொருவர் ஆதரிப்பது, நம்புவது மற்றும் புரிந்துகொள்வது ஆகிய காரியங்கள் துக்கத்தை மேற்கொள்ள இருவருக்குமே உதவும். உங்கள் குழந்தையைக் குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள். உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தாத்தா பாட்டிமார்களுங்கூட துக்கிக்கிறார்கள்
தாத்தா பாட்டிமார்களுங்கூட ஒரு விசேஷ வழியில் துக்கிக்கிறார்கள். துக்கித்துக்கொண்டிருந்த ஒரு தகப்பன் பின்வருமாறு சொன்னார்: “அவர்கள் ஒரு பேரப்பிள்ளையின் சாவுக்குப் பிரதிபலிப்பது மட்டுமின்றி, தங்களுடைய சொந்த பிள்ளையின் துக்கத்துக்கும் அவ்விதமே பிரதிபலிக்கிறார்கள்.”
என்றபோதிலும், தாத்தா பாட்டிமார்கள் இழப்பை மேற்கொள்ள வழிகள் உண்டு. முதலாவதாக, அவர்களையும் உட்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுடைய பேரப்பிள்ளைகள் அவர்களுடைய தொடர்ச்சியாகவே இருக்கிறார்களே. எனவே தாத்தா பாட்டிமார்கள் அவர்களுடைய சொந்த வழியில் துக்கத்தில் பங்குகொள்ள அநுமதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் உட்பட விரும்பினால், சாதாரணமாக அவர்கள் விரும்புவதால், அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துக்கம் குறித்த இந்த சுருக்கமான கலந்தாலோசிப்பில் மரணத்தில் இழந்திருக்கும் அன்பானவர்களின் உணர்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறோம். ஆனாலும் சிந்திப்பதற்குரிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. மற்றவர்கள் விசேஷமாக தங்களுடைய பேச்சுகளில் எப்படி அவர்களுக்கு உதவராம்? கணவன்மார்கள் எப்படி தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்தலாம்? தயவுசெய்து அடுத்த கட்டுரையைப் பார்க்கவும். g87 8⁄8
[பக்கம் 7-ன் பெட்டி]
துக்கத்தின் இயல்பான போக்கு
துக்கம் அடங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட திட்ட முறையைக் கொண்டிருக்கிறது என்று இது குறிப்பதாயில்லை. துக்கத்தின் பிரதிபலிப்புகள் ஒத்திருக்கக்கூடும் மற்றும் தனிப்பட்டவர்களைப் பொருத்து கால அளவில் வித்தியாசம் இருக்கக்கூடும்.
ஆரம்ப பிரதிபலிப்புகள்
உடனடியான அதிர்ச்சி; நம்பாமலிருப்பது, மறுப்பது; உணர்ச்சியிழத்தல்; குற்ற உணர்வுகள்; கோபம்
கடுமையான துக்கம் உட்படுத்தும் காரியங்கள்:
நினைவிழத்தலும் மயக்கமும்; அளவுகடந்த களைப்பு; சுபாவத்தில் திடீர் மாற்றம்; நிதானிப்பிலும் யோசனையிலும் இடறுதல்; விட்டுவிட்டு அழுதல்; பசி மாற்றம், இதனால் எடை குறைதல் அல்லது கூட்டுதல்; நிலையற்ற உடலாலோக்கியத்துக்குரிய பல்வேறு அறிகுறிகள்; சோம்பல்; வேலை செய்வதில் திறமைக்குறைவு; மரித்துப்போனவரைத் தொடுவது, அவரைப் பார்ப்பது, அவர் பேசுவதைக் கேட்பது போன்ற காட்சியுணர்வுகள்
சீரடையும் காலம்
பழைய நினைவுகளுடன்கூடிய வருத்தம்; மரித்தவரைப்பற்றி இனிய நினைவுகள், நகைச்சுவை கலந்த நினைவுகளும் உட்படுகிறது.
(உங்கள் துக்கத்தில் ஆதரவு என்று டாக்டர் ஆர்த்தர் ஃப்ரீஸ் எழுதிய புத்தகத்தில் பக்கங்கள் 23-6-ஐ சார்ந்தது.)
[பக்கம் 9-ன் பெட்டி]
உங்கள் துக்கத்தை மேற்கொள்ள உதவும் படிகள்
ஒவ்வொருவரும் துக்கத்தை தன்னுடைய சொந்த வழியில் மேற்கொள்ள உழைக்க வேண்டும். தன் பேரிலேயே கவனத்தைத் தேங்க வைப்பதையும் சுய இரக்கத்தையும் தவிர்ப்பது முக்கியமான படியாகும். அன்பானவர்களை மரணத்தில் பிரிந்து துக்கிக்கும் ஆட்களை விழித்தெழு! பேட்டிகண்டதில், அவர்களுடைய அனுபவத்தின்பேரில் சார்ந்த சில ஆலோசனைகள்:
◼ சுறுசுறுப்பாக இருங்கள், நீங்கள் எப்பொழுதும் செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள். யெகோவாவின் சாட்சிகள் விசேஷமாகக் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது மற்றும் ஊழியத்தில் உட்பட்டிருப்பது ஆகியவற்றின் மதிப்பை அழுத்திக்கூறினர். ஜெபத்திலிருந்து தாங்கள் பெற்ற மிகுந்த உதவியைக் குறித்து அநேகர் கருத்து தெரிவித்தனர்.
◼ உங்களுடைய துக்கம் வெளியரங்கமாகட்டும்; அதை அடங்ககிக்கொள்ள முயற்சியாதேயுங்கள். எவ்வளவு சீக்கிரமாக துக்கப்பட்டு அழுது துயரத்தை வெளிப்படுத்துகிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாகக் கடுமையான துக்கத்தின் காலப்பகுதியைக் கடந்துவிடுவீர்கள்.
◼ உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். மற்றவர்களோடு சேர்ந்து பழுகுங்கள், மற்றவர்கள் உங்களோடு பழக அநுமதியுங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் உணர்ந்தால், மரணத்தில் இழந்த உங்கள் அன்பானவரைப்பற்றி தாராளமாகப் பேசுங்கள்.
◼ கூடுமானவரையில் சீக்கிரமாகவே மற்றவர்களிலும் அவர்களுடைய பிரச்னைகளிலும் அக்கறைக் காட்டுங்கள். மற்றவர்களுக்கு உதவ முற்படுங்கள், அப்பொழுது உங்களுக்கு நீங்களே உதவிசெய்துகொள்கிறீர்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி]
உதவுவதற்கு மற்றவர்கள் என்ன செய்யலாம்?
பிள்ளைகளை மரணத்தில் இழந்து, துக்கத்தில் ஆழ்ந்திருந்த பல்வேறு நாடுகளிலுள்ள பெற்றோரை விழித்தெழு! நிருபர்கள் பேட்டிகண்டனர். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் பின்வரும் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. அவற்றைப் பொருத்துவதில் சற்று மாற்றங்கள் தேவைப்படும் என்பது தெரிந்ததே. இது துக்கிப்பவரின் உணர்ச்சிகளைச் சார்ந்தது.
1. முதல் நாள் தொடங்கி குடும்பமாக அவர்களை சந்தியுங்கள். அவர்களை உங்கள் வீட்டுக்கும் அழைத்திடுங்கள். அவர்களுக்கு உணவு தயாரித்தளியுங்கள். தேவையான சமயம் மட்டும் இதைத் தொடர்ந்து செய்யுங்கள். முதல் சில வாரங்களுக்கு மட்டுமல்ல.
2. மரித்த தங்களுடைய பிள்ளையின் நினைவாக அவர்களுடைய துணிமணிகளும் சாமான்களும் தாங்கள் வைத்திருப்பார்களா அல்லது வேறு எங்கேயாவது பத்திரப்படுத்துவார்களா என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்கட்டும்.
3. துக்கிப்பவர்கள் விரும்பினால் இறந்த அந்தப் பிள்ளையின் பெயர் சொல்லிப் பேசுங்கள். அந்தக் குழந்தையின் தன்மை மற்றும் வாழ்க்கையின் நகைச்சுவையான அம்சங்களை நினைவுபடுத்துங்கள். அமைதியாக இருக்க வேண்டாம். தங்களுடைய நேச பிள்ளையைப் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்பக்கூடும்.
4. உதவிசெய்ய முடியாதளவுக்கு தூரமாக வசிப்பீர்களானால், ஊக்குவிக்கக்கூடியதும் ஆறுதலளிக்கக்கூடியதுமான கடிதங்களை எழுதுங்கள்.
5. பொருத்தமாக இருந்தால், முன்பு செய்துகொண்டிருந்த காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடவும் அதில் தொடர்ந்திருக்கவும் பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் வெளியே செல்லவும் மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்யவும் வையுங்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி]
ஒரு பாட்டியார் எழுதுகிறார்:
“என்னுடைய அன்பான பெற்றோரையும், ஒரு சகோதரனையும், ஒரு சகோதரியையும் நான் 13 வயதில் சந்தித்து நேசித்துவந்த நண்பரும் காதலரும் புருஷருமாகிய என் வாழ்க்கைத் துணைவரான என் ஜேமியையும் நான் மரணத்தில் இழந்தேன். நான் இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட ஒரு பிள்ளையின் மரணம் என் மனதுக்குக் கொண்டுவரும் துயரத்துக்கும் வேதனைக்கும், வாதித்திடும் துக்கத்துக்கும் ஒப்பான துக்கம் வேறு இருக்க முடியாது என்று நான் சொல்வேன்.”
இரண்டே முக்கால் வயது பேரன் மரித்தபோது இங்கிலாந்தைச் சேர்ந்த எட்னா கிரீன் எழுதியது.
[பக்கம் 8-ன் படம்]
உங்கள் துக்கத்தை வெளிப்படையாக தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுதல் மூலம் துக்கத்தை மேற்கொள்ள நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்கிறீர்கள்