உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 10/8 பக். 3-5
  • “அது உண்மையாக இருக்க முடியாது!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அது உண்மையாக இருக்க முடியாது!”
  • விழித்தெழு!—1988
  • இதே தகவல்
  • “அது உண்மையா இருக்க முடியாது!”
    நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது...
  • 801 ஃபிளைட் விபத்தில் தப்பினேன்
    விழித்தெழு!—1998
  • மரித்தவர்களுக்கு நம்பிக்கை, துக்கிப்பவர்களுக்கு ஆறுதல்
    விழித்தெழு!—1988
  • சோதனைகளைச் சகித்ததால் கிடைத்த ஆசீர்வாதங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 10/8 பக். 3-5

“அது உண்மையாக இருக்க முடியாது!”

“மே 31, 1982, அழுகும் பொலிவும் மிகுந்திருந்த ஒரு நாள். சூரியன் பிரகாசித்திட, நீல வண்ண வானம் பரந்திருக்க, என்னுடைய தோட்டத்தைச் சுத்தம்செய்ய இன்று ஒரு நல்ல வாய்ப்பு என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். நாங்கள் அண்மையில் எங்கள் தோட்டத்திலிருந்து வயதான சீன பிரதேச மரம் ஒன்றை வெட்டினோம். அதன் எஞ்சிய கிளைகளும் குச்சிகளும் புல்வெளியில் சிதறியிருந்தது இவற்றை எளிதில் சேர்த்தெடுப்பதற்கான ஓர் இயந்திரம் என்னுடைய நண்பர் ஜார்ஜிடம் இருப்பது எனக்கு நினைவிற்கு வந்தது, எனவே அவரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன்.

ஜார்ஜ் ஓர் அனுபவமுள்ள விமான ஓட்டி, விமானத்தில் செல்வது என்றால் அவருக்குத் தனி ஆர்வம். எனவே, தான் சில நண்பர்களை கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லி நாங்களும் தங்களோடு செல்ல விரும்பிகிறோமா என்றும் கேட்டார். தோட்டத்தை சுத்தப்படுத்தும் வேலைக்குப் பின்பு அப்படிப் போய் வருவது சற்று உல்லாசமாயிருக்கும் என்று என் மனைவி டயானாவும் தானும் தீர்மானித்தோம். எங்களோடுகூட எங்களுடைய மூன்று வயது மகளையும் கூட்டிச்சென்றோம். பழுப்பு நிற முடியும் கண்களுங்கொண்ட எங்கள் அழகிய குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம்.

“நாங்கள் விமான நிலையத்திற்குச் சென்றபோது, மற்றொரு நண்பரும் தன்னுடைய சமயத்திற்குக் காத்துக்கொண்டிருந்தார். எனவே நாங்கள் அனைவரும் மொத்தமாக நான்கு இருக்கைகளையுடைய விமானத்தில் ஏறி, ஏரிக்கு மேல் பறந்து மலைகளுள்ள பகுதிக்குச் சென்றோம். காட்சி எவ்வளவு எழில் மிகுந்ததாயிருந்தது! நாங்கள் வெளியே பார்த்தபோது, எங்களுக்குத் தெரிந்த இடக்குறிகளைப் பார்த்தோம். சிலர் மலைப் பகுதிகளில் உல்லாசப் பயணிகளாக உல்லாசமாய், உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது, நாங்கள் மலை உச்சிக்கு மேல் பறந்துகொண்டிருக்கும்போது, எங்கள் விமானம் ஒரு பலமான கீழ்க்காற்றில் சிக்கியது. விமானத்தின் இயந்திரம் இயங்கவில்லை, விமானம் வானத்திலிருந்து கீழே விழுந்தது!

“மரியாவைத் தன் மடியில் வைத்துக்கொண்டிருந்த என் மனைவிக்கும் முன் இருக்கைக்கும் இடையே செல்ல நினைத்தேன், ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை—விமானம் மலையின் ஒரு பக்கமாக மோதியது.

“நான் எழுந்திருக்க முயன்றேன், ஆனால் என்னால் அசைய முடியவில்லை. டயனா உதவிக்காக அழும் சத்தம் எனக்குக் கேட்கிறது, ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உதவிக்காகக் கூச்சலிடத்தான் முடிந்தது.

“கடைசியில், அவசர சிகிச்சையளிக்கும் மருத்துவ தொகுதிகள் விறைந்தன. மலையிலிருந்து எங்களை எடுத்துச்செல்ல வந்தனர். இந்த ஆபத்தான கட்டத்தில், புத்தகங்களில் படித்த விதமாக விமாத்தை தரையில் இறக்க நாங்கள் முயன்ற போதிலும், ஜார்ஜும் அந்த நண்பரும் இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த நாங்கள் படுகாயமுற்றோம். மரியாவுக்கு தலையிலும் மற்ற இடங்களிலும் உள் காயங்கள். என்னுடைய மாமனார் அதிக வேதனையோடு மருத்துவமனைக்கு வந்து அவள் இறந்துவிட்டாள் என்று சொன்னது என் இருதயத்தைப் பிளந்தது. ‘அது ஏன் அவளாயிருக்க வேண்டும்? அது நானாயிருக்கக்கூடாதா? அவளைப்போன்ற ஒரு குழந்தை மரிப்பதில் நியாயம் இல்லை,’ என்று எண்ணினேன். அந்த விமானத்தில் உல்லாசமாகச் செல்வதற்காக அந்த வாய்ப்பை நான் மட்டும் ஏற்காமலிருந்திருந்தால் . . .

“டயனா இடுப்புடைந்தவளாய் கவலைக்கிடமான நிலையிலிருந்தாள். இந்த விமான விபத்து நடந்து மூன்று வாரம் கழிந்தது, அவள் மரித்துவிட்டாள். ஒரே சமயத்தில் நான் என்னுடைய மகளையும் மனைவியையும் பறிகொடுத்தேன். நான் எல்லாவற்றையும் இழந்துவிட்ட எண்ணம் என்னை உருக்கியது. நாம் எப்படி வாழப்போகிறேன்?”—அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் நியு மேக்ஸிக்கோவில் வாழும் ஜெஸ் ரொமெரோ கூறியது.

“என்னுடைய மகன் ஜோனத்தான் லாங் தீவிலுள்ள தன்னுடைய நண்பர்களை சந்திக்கச் சென்றிருந்தான். என்னுடைய மனைவி வாலன்டீனா அவன் போவதில் பிரியப்படவில்லை. அவள் எப்பொழுதுமே சாலை போக்குவரத்து குறித்து பயந்திருப்பவள். ஆனால் அவனுக்கோ மன்னியலில் அதிக அக்கறை இருந்தது. தன்னுடைய நண்பன் அங்கு ஒரு பட்டறையைக் கொண்டிருக்க, அங்கு சென்று நடைமுறை அனுபவம் பெற முடியும். நான் வெஸ்ட் மன்ஹாட்டனில் வீட்டிலிருந்தேன். என்னுடைய மனைவி போர்ட்டோ ரிக்கோவிலுள்ள தன்னுடைய உறவினரைச் சந்திக்கச் சென்றிருந்தாள்.

“நான் தொலைக் காட்சியின் முன்பு சொக்கிக்கொண்டிருந்தேன். ‘ஜோனத்தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான்,’ என்று நினைத்துக்கொண்டேன். அப்பொழுது மணி அடித்தது. ‘ஆம், அவனாகத்தான் இருக்கவேண்டும்.’ ஆனால் அவன் இல்லை. அது காவல் மற்றும் உருத்துவ உதவியளிக்கும் ஆட்கள்.

“‘இந்த ஓட்டுநரின் லைசென்ஸ் யாருடையது என்று நீங்கள் அடையாளங் காண முடிகிறதா?’ என்று அந்தக் காவல் அதிகாரி கேட்டார். ‘ஆம், அது என்னுடைய மகன் ஜோனத்தானுடையது?’ ‘ஒரு கெட்ட செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். ஒரு விபத்து நடந்திருக்கிறது, . . . உங்களுடைய மகன், . . . உங்களுடைய மகன் அதில் உயிரிழந்ததான்.’ என்னுடைய முதல் பிரதிபலிப்பு, ‘இல்லை, அப்படி இருக்க முடியாது! இல்லை, அப்படி இருக்க முடியாது!—அது உண்மையாக இருக்க முடியாது!

“அந்தச் செய்தி வெடிகுண்டுபோல் எங்கள் இருதயத்தைப் பிறந்துவிட்டது, ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழிந்தாலும், இன்னும் ஆறவில்லை.”—ஐ.அ.மா-வில் நியு யார்க்கில் வாழும் அகஸ்டின் கேரபல்லோசோ கூறியது.

“1960-களில் ஸ்பய்ன் தேசத்தில் நாங்கள் சாட்சிகளாயிருப்பதனால் துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும் ஒரு மகிழ்ச்சியுள்ள குடும்பமாக இருந்தோம். என்னுடைய மனைவி மரியாவும் எங்கள் மூன்று பிள்ளைகள் டேவிட், பங்குவிட்டோ மற்றும் இஸபெல் மறையே 13, 11 மற்றும் 9 வயதிலிருந்தனர்.

“1963-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் பள்ளியிலிருந்து வீடுவரும்போதே கடுமையான தலைவலி இருப்பதாக பக்குவிட்டோ சொன்னான். காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியவில்லை—ஆனால் அதிக நேரம் எடுக்கவில்லை. மூன்று மணி நேரத்துக்குப் பின்பு அவன் உயிர் பிரிந்தது. மூளையில் இரத்தபோக்கு அவனுடைய உயிரை பலிவாங்கியது.

“பக்குவிட்டோ மரித்து 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் அந்த இழப்பின் ஆழமான வேதனை இதுநாள் வரையும் எங்களைவிட்டுப் பிரியவில்லை. காலம் எவ்வளவாய்க் கடந்தோடினாலும் அல்லது தங்களுக்கு வேறு பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பிள்ளையை இழந்த பெற்றோர் தங்களுடைய ஏதே ஒன்றை இழந்தவிட்டதாக உணராமலிருப்பதற்கு எந்த வழியுமில்லை.”—ஸ்பேய்னில் பார்செலோனாவில் வாழும் ரேமன் செரானோ கூறியது.

உலகமெங்கிலும் குடும்பங்களைத் தாக்கும் பேரிழப்பு சம்பவங்களில் இவை ஒரு சில சம்பவங்களே. துயரத்திலிருக்கும் பெற்றோரில் பலர் கூறுவதுபோல், மரணம் உங்கள் பிள்ளையைப் பலிவாங்குமிடத்து, அது உண்மையிலேயே ஒரு எதிரி.—1 கொரிந்தியர் 15:25, 26.

ஆனால் ஆழ்ந்த துயரத்திலிருந்த இவர்கள், மேற்கூறப்பட்ட இந்த ஆட்கள், எப்படி இந்நிலையைச் சமாளித்தார்கள்? இப்படிப்பட்ட ஓர் இழப்புக்குப் பின் சகஜ வாழ்க்கை கூடிய காரியமா? நாம் இழந்துவிட்டிருக்கும் இந்த அன்பானவர்களை நாம் மறுபடியும் பார்க்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறதா? அப்படியானால், எங்கே? எப்படி? இந்தக் கேள்விகளும் இதைச் சார்ந்த மற்ற கேள்விகளும் பின்வரும் கட்டுரைகளில் சிந்திக்கப்படும். g87 8⁄8

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்