எல்லா சமயத்திலும் ஆறுதலளிக்காத கூற்றுகள்
நீங்கள் எப்பொழுதாவது ஆழ்ந்த துக்கத்திலிருக்கும்போது, மற்றவர்களுடைய கூற்றுகளால் புண்பட்ட சமயங்கள் இருந்திருக்கின்றனவா? ஆறுதலளிப்பதற்கு என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பலர் அறிந்திருந்தபோதிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருப்பவர்களுக்கு உண்மையிலேயே உதவியாயிராத வார்த்தைகளை அவர்களில் பலர் நினைவுகூரக்கூடும். ஜெர்மன் கீலர் நாரீஷ்டனில் எழுதிய உர்சுலா மாம்சென்-ஹெனிபெர்கெர், ‘உங்களுக்குத்தான் மற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள், அல்லவா?’ என்று மற்றவர்கள் சொல்லும்போது பெற்றோரில் சிலர் ஆழமாகப் புண்படுகிறார்கள்,” என்று கூறுகிறாள். அவள் கொடுக்கும் பதில்: “மற்றவர்கள் ஆறுதலாக இருக்கக்கூடும், ஆனால் அவர்கள் இழக்கப்பட்ட நபருக்குப் பதில் நபராக இல்லையே.”
துக்கிப்போருக்கு ஆலோசகராக இருக்கும் கேத்லீன் கேப்பிடுலோ விழித்தெழு!-விடம் பின்வருமாறு கூறினார்: ‘உங்களுடைய உணர்வுகளை நான் அறிந்திருக்கிறேன்,’ என்ற கூற்றையும் ஒருவர் தவிர்க்க வேண்டும். உண்மை என்னவெனில், மற்றொருவர் என்ன உணர்வுகளைக் கொண்டிருக்கிறார் என்பது உண்மையிலேயே ஒருவருக்கும் தெரியாது. என்றபோதிலும், அவர்களுடைய உணர்வுகளை நீங்கள் உறுதிசெய்யலாம். அவர்களுடைய உணர்ச்சிகள் இயல்பானவையே என்பதை உறுதிசெய்யலாம்.”
ஒரு குழந்தையை இழந்த நிலையிலிருந்து மீண்டுவருதல் என்ற புத்தகத்தில் அறிக்கை செய்யப்பட்டதுபோல, “ஒரு குழந்தையை இழப்பது என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தன் குழந்தையை இழந்தவராக ஒருவர் இருக்கவேண்டும், என்று பலமாக நம்புகிறார்,” அபி மலாஸ்கி. அவர் கூறியதாவது: “உங்களுக்குப் பதினைந்து பிள்ளைகள் இருக்கலாம், ஆகிலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை மாற்றாக இருக்கமுடியாது.
குழந்தை கருவிலேயே இறந்துவிட்டிருந்தால், அப்பொழுது சொல்லப்படும் உற்சாகமிழக்கச் செய்யும் வார்த்தைகளில் சில: “நீங்கள் சீக்கிரத்தில் கர்ப்பமாகி எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.” “அது பரவாயில்லை, எப்படியும் குழந்தை ஊனமுற்று பிறந்திருக்குமே.” “அது நலக்கேடுபோல தோன்றும் நலம்.” இழப்பின் அந்தக் கொடிய வேளையில் இந்தக் கூற்றுகள், நல்நோக்கத்துடன் சொல்லப்பட்டதாயிருப்பினும், வேதனையைத் தணிக்காது.
சில மதகுருமார் அளித்திடும் மத சம்பந்தமான வெற்றுரைகள் துக்கத்திலிருப்போருக்கு எரிச்சலூட்டுவதாயிருக்கிறது. ‘கடவுளுக்கு இன்னொரு தேவதூதன் தேவையாயிருந்தது,’ என்று சொல்லுவது கடவுளைக் கொடுமையுள்ளவராகவும் தன்னலமுடையவராகவும் வர்ணிப்பதோடுகூட அது தேவதூஷணமாகவும் இருக்கிறது. மேலும் அது தற்கரீதியான முடிவும் அல்ல, பைபிள் ஆதாரமும் அற்றது.
ஒரு கிறிஸ்தவன் துக்கிக்க வேண்டுமா?
ஒரு பிள்ளையை மரணத்தில் இழந்துவிட்ட கிறிஸ்தவனைப் பற்றியதென்ன? சில சமயங்களில் சிலர் பவுல் தெசலோனிக்கேயருக்குச் சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காண்பிக்கின்றனர்: “நீங்கள் நம்பிக்கையற்றவர்களாக மற்றவர்களைப் போலத் துக்கிக்க வேண்டாம்.” (1 தெசலோனிக்யேர் 4:13) துக்கிப்பதையும் துயருற்றிருப்பதையும் பவுல் தடை செய்கிறானா? இல்லை, ஒரு நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவன் நம்பிக்கை இல்லாதவர்கள் துக்கிக்கும் அதே விதமாக துக்கிப்பதில்லை என்றுதான் சொல்லுகிறான்.—யோவான் 5:28இ 29.
இந்தக் குறிப்பை எடுத்துக்காட்டுடன் விளக்கிட, லாசரு மரித்துவிட்டான் என்று மரியாள் இயேசுவிடம் சொன்னபோது இயேசு எப்படி பிரதிபலித்தார்? பதிவு பின்வருமாறு கூறுகிறது: “அவள் அழகிறதையும் அவரோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.” பின்பு அவர் மரித்தவன் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டபோது, “இயேசு கண்ணீர்விட்டார்.” எனவே துக்கிப்பது தவறா? கடவுளுடைய வாக்குறதியாகிய உயிர்த்தெழுதலில் விசுவாசக் குறைவை வெளிப்படுத்துவதாயிருக்கிறதா? இல்லை, மாறாக அது மரித்த அந்த நபர்பேரிலிருக்கும் ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.—யோவான் 11:30-35; யோவான் 20:11-18-ஐ ஒப்பிடவும்.
“காலம்தானே குணப்படுத்தும்,” என்ற கூற்றும் துக்கிப்போரின் வேதனையைக் கூட்டும். “அதை மேற்கொண்டுவிட்டீர்களா?” என்ற கேள்வியையும் தவிர்த்துவிடுங்கள். பிரிட்டிஷ் பெண்மணி ஒருத்தி சொன்னாள்: “‘அதை மேற்கொண்டு விட்டீர்களா?’ என்று கேட்பவர்கள் ஒரு பிள்ளையைப் போன்று அவ்வளவு நெருங்கிய ஒரு நபரை இழப்பது என்னவாயிருக்கிறது என்பதை உண்மையில் புரியாதவர்கள். அந்த நபரை உயிர்த்தெழுதல் மூலம் நாம் திரும்ப நம்மோடு கொண்டிருக்கும்வரை நாம் அதை மேற்கொள்ள முடியாது.” ஷேக்ஸ்பியரின் கூற்று ஒருவேளை பொருத்தமாக இருக்கக்கூடும்: “துக்கிப்பவரைத் தவிர அனைவரும் துக்கத்தை அடக்கிட முடியும்.”
சில சமயங்களில் தகப்பன் யோசனையற்ற ஒரு மனப்பான்மையின் தாக்குதலுக்கு பலியாகக்கூடும். துக்கத்திலிருக்கும் ஒரு தகப்பனை நோக்கி, “உங்களுடைய மனைவி எப்படி இருக்கிறார்கள்?” என்று ஆட்கள் கேட்டபோது அவர் அதிகக் கோபப்பட்டார். அவர் சொன்னார்: “கணவர் எப்படி இருக்கிறார் என்று அவர்கள் கேட்பதில்லை. . . . அது எவ்வளவு தவறு, அநியாயம். ஒரு மனைவி எப்படி உணருகிறாளோ அந்தளவுக்கு கணவனும் உணருகிறான். அவனும் துக்கிக்கிறான்.”
‘துக்கத்தை அடக்கிக்கொள்ள வேண்டுமா?’
பல்வேறு கலராச்சார பின்னணிகளின்படி, ஆண்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடது, ‘துக்கத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்’ என்று கற்பிக்கப்படுகிறது. 18-ம் நூற்றாண்டு ஆங்கில எழுத்தாசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் “துக்கத்தில் அமைதியான மனிதத்தன்மை” குறித்து பேசினார். ஆனால் ஒருவருடைய துக்கத்தைத் தணிப்பதற்கு அந்த அமைதியான மனிதத் தன்மைதான் மிகச் சிறந்த வழியா?
தான் எழுதிய துக்கிக்கும் பெற்றோர் என்ற புத்தகத்தில் தன்னுடைய கணவரை ஹார்னாட் சார்னாஃப் ஷிஃப்பை மேற்கோள் காண்பிக்கிறார்: “இதோ ஒரு தகப்பன், தன் பிள்ளை அடக்கம் செய்யப்படுவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறான், சம்பிரதாயத்தின்படி தன் ‘துக்கத்தை அடக்கிக்கொள்ளும்படியாக’ அந்தச் சமுதாயத்தால் சொல்லப்படுகிறான். அவன் தொடர்ந்து கூறுகிறாள்: “தன் ‘துக்கத்தை அடக்கிக் கொண்டதற்காக’ அவன் அதிகமாக பாதிக்கப்பட்டான். காலம் செல்ல செல்ல, துக்கிப்பதிலிருந்து வெளிவருவதற்குப் பதிலாக அவன் துயரத்தில் ஆழமாகச் சென்று கொண்டிருந்தான்.”
கணவன் தன்னுடைய உணர்ச்சிகளை விளக்கினான். மற்றவர்கள் இதே உணர்ச்சிகளைத் தங்களில் காணக்கூடும். “நான் வடதுருவ பனிப்பாதையில் நடந்துகொண்டிருப்பது போல் உணருகிறேன். நான் அதிக களைப்பாயிருக்கிறேன். நான் இளைப்பாற சற்று படுத்தால், தூங்கிவிடுவேன். நான் தூங்கிவிட்டால் பனிக்குளிரில் செத்துப்போவேன் என்பது எனக்குத் தெரியும். நான் கவலைப்படுவதில்லை. என் களைப்பை இனிமேலும் எதிர்த்து சமாளிக்க என்னால் முடியவில்லை.”
எனவே ஹாரியட் ஷிஃப்ஸின் ஆலோசனை என்ன? ‘அந்தப் பழங்கால ஆங்கிலோ-சாக்ஸன் கொள்கையை முற்றிலும் மறந்து அழவேண்டும். கண்ணீர் பொங்கி வருவதாக . . . துயரத்தைக் கழுவிட அவை உதவும். கருவில் குழந்தை இழப்பை மீண்டும் வாழுதல் என்ற நூலை எழுதியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் பின்வரும் ஆலோசனையைக் கொடுக்கிறார்கள்: “சீனாவின் கடுந்தன்னடக்க வாதம் ஒருவேளைப் பலரால் போற்றப்படலாம், ஆனால், துக்கத்தைப் போராடி வெல்லுவதன் மூலம் மட்டுமே ஒருவர் கடைசியில் விடுபட முடியும். (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது) இல்லாவிடில், “துக்கத்தில் பற்றாத நிலைக்குள்” ஒருவர் தன்னை உட்படுத்திக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.. இது, வரக்கூடிய வருடங்களில் மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும்.
துக்கத்தில் நிறைவுபடாதிருக்கும் நிலை பூரணப்படாத துக்கிப்பாகும். பிரிவை ஏற்றுக்கொள்ளும் நிலையை எட்டும் வரையில் துக்கத்தை ஊற்றிவிடுவதற்கு மாறாக அதை அடைத்து வைக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. அது குறைந்தபட்சம் மூன்று வழிகளிலாவது வெளிப்படக்கூடும். அடக்கிவைக்கப்பட்ட துக்கம் தாமதப்படுத்தப்பட்ட துக்கம் அல்லது தீராத துக்கம். உதவும் வகையில் என்ன செய்யப்படலாம்?
அநுபவப்பட்ட ஆலோசனை தேவைப்படலாம். நல்லாதரவு அளிக்கும் ஒரு குடும்ப மருத்துவரோ அல்லது ஆவிக்குரிய ஆலோசகரோ உதவக்கூடும். நல்லெண்ணம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களும் உதவலாம். துக்கிக்கும் அந்தக் கால பகுதியினூடே அந்த நபர் தொடர்ந்து தன் செயல்களில் ஈடுபடுவதற்கு அவருக்கு உதவி தேவைப்படுகிறது.
இப்படியாக, தன் மகளும் மனைவியும் விமான விபத்தில் மரித்தபோது அவர்களுடைய இழப்பைக் குறித்து வெளிப்படையாக அழுததாக ஜெஸ் ரொமேரோ ஒப்புக்கொள்கிறார். அவர் விழித்தெழு!-விடம் சொன்னதாவது: “ஒருசில வாரங்களுக்குப் பின் என்னுடைய சகோதரிகள் என்னை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். நான் வீட்டுக்குள் நுழையும்போதே சுவரில் என்னுடைய மகளின் படத்தைப் பார்த்தேன். அதனால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதைக் கண்ட என் மனைவியின் சகோதரன் என்னைப் பார்த்து, ‘அடக்கிவைக்க வேண்டாம், நீங்கள் அழுங்கள்,” என்றார். நான் அப்படியே செய்தேன். என்னுடைய துக்கத்தின் சுமையைச் சற்று இலகுவாக்க முடிந்தது.”
துக்கத்தின் இயல்பான போக்கு வேதனையைச் சற்று ஆற்றுவதாய் இருந்தாலும், துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பெரும்பான்மையினருக்கு ஒரே நிரந்தர பரிகாரம்தான் உண்டு—தங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்ப்பது. அப்படியென்றால், மரித்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டா? ஒரு உயிர்த்தெழுதல் இருக்குமா? இந்தத் தொடர்கட்டுரைகளில் கடைசி கட்டுரையை வாசியுங்கள். g87 8⁄8